என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (56). இவர் குறிச்சி பெரியாண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைப்பார்த்து வந்தார்.
தலைமை ஆசிரியர் பாஸ்கரன் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியர் பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிறுமியின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெருந்துறை:
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் ராஜ்கமல் (20). இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பிச்சாண்டார்பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவரும் வீடியோ கால் மூலம் அடிக்கடி பேசி உள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமியின் ஆபாச வீடியோவை ராஜ்கமல் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.
ஆபாச வீடியோ குறித்து ராஜ்கமல் அந்த சிறுமியிடம் கூறி மிரட்டி பேசி வந்தார். அதோடு இல்லாமல் சிறுமியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு உங்கள் மகளின் ஆபாச வீடியோ படத்தை நான் வைத்துள்ளேன். இதை பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து ராஜ்கமலை பிடித்து விசாரித்தார். மேலும் செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தார். இதில் ராஜ்கமல் சிறுமியை மிரட்டியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ராஜ்கமல் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ஈரோடு:
காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த வாய்க்காலில் ஆண்டுதோறும் தொடர்ந்து 10 மாதங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் மஞ்சள் பிரதான பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், வாழை, கரும்பு, நெல் ஆகிய பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீர் பவானியில் உள்ள காலிங்கராயன் அணைக்கு வந்தடைகிறது. அங்கிருந்து காலிங்கராயன் வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் வேளாண்மையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதையொட்டி சாகுபடிக்காக நிலத்தை அவர்கள் தயார் செய்து வருகின்றனர். நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி உழவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், வயல்களில் விதைகள் போட்டு நாற்றங்கால் வளர்க்கும் பணி நடந்தது. தற்போது நாற்றங்கால் நடவுக்கு ஏற்ப நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் நாற்றை பிடுங்கி நடவுக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள்.

டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பங்களாப்புதூர் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பங்களாப்புதூர் அருகே புஞ்சை துறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். விவசாயி. மகேஷ் தோட்டத்தில் வழக்கம்போல் தோட்ட வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது கரும்பு காட்டில் ஏதோ ஊர்ந்து செல்வது போல் இருந்தது. இதைக்கண்ட மகேஷ் அருகில் சென்று பார்த்த போது பெரிய அளவில் உள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனக்காப்பாளர் அருண் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் திருமுருகன் ஆகியோர் கரும்பு தோட்டத்தில் இருந்த சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

மஞ்சள், சோளம் பயிர் செய்துள்ளதால் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்தநிலையில் மதியம் 3 மணி அளவில் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. அதன்பிறகு மழை பெய்ய தொடங்கியது. சிறது நேரத்தில் பலத்த மழையாக பெய்தது. ஆனால் நீண்ட நேரம் மழை பெய்யாமல், சுமார் ½ மணி நேரம் மட்டுமே பெய்தது. அதன்பிறகு சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகிரியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2.30 மணி அளவில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
சுமார் 45 நிமிடம் மழை கொட்டித்தீர்த்தது. சிவகிரி, வேட்டுவபாளையம், கந்தசாமிபாளையம், ரங்கசமுத்திரம், கவுண்டம்பாளையம் மற்றும் அதன் சுற்று பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. கருகி வரும் பயிர்களை காப்பாற்ற இந்த மழை உதவியாக இருக்கும் என அந்த பகுதி விவசாயிகள் தெரிவித்தார்கள்.
இதேபோல் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும், மீண்டும் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரையும் மழை பெய்தது. அதனால் அந்தியூர் வாரச்சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்டது. தவுட்டுபாளையம், செல்லம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் சூரியன் மறைந்து வானம் இருண்ட நிலையில் காணப்பட்டது. பின்னர் மாலை 4 மணி முதல் லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.
கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை பலத்த மழை பெய்தது. தற்போது மஞ்சள், சோளம் பயிர் செய்துள்ளதால் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஊஞ்சலூர், தாமரைப்பாளையம், தேவம்பாளையம், கொளாநல்லி ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தது. 3 மணிக்கு மேல் நடுப்பாளையம், சோளங்காபாளையம், பாசூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து மிதமான மழை நீடித்தது. இதனால் இந்தப் பகுதிகளில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. அதன்பின்னர் மதியம் 1 மணி அளவில் லேசான மழையாக ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறி ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் வாடிய பயிர்கள் புத்துயிர் பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னிமலை அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் தங்காரா பகுதியை சேர்ந்தவர் ஷாபி பத்ரா (வயது 17). இவர் கடந்த 6 மாதங்களாக சென்னிமலை அருகே அசோகபுரத்தில் உள்ள தனியார் நூல் மில்லுக்கு சொந்தமான அறையில் நண்பர்களுடன் தங்கியிருந்து அங்கு வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஷாபி பத்ராவின் நண்பர்கள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். ஷாபி பத்ரா மட்டும் அறையில் இருந்தார். மாலையில் நண்பர்கள் அனைவரும் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு ஷாபி பத்ரா இல்லை. இதனால் பல இடங்களில் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தொழிலாளி ஒருவர் நூல் மில்லுக்கு சொந்தமான அறைக்கு வேலை விஷயமாக சென்றார். அப்போது அங்கு ஷாபி பத்ரா இரும்பு கம்பியில் துணியால் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்தார். உடனே இதுபற்றி சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஷாபி பத்ராவின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஷாபி பத்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்மாபேட்டை அருகே மனைவி மாயமானது தொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்தவர், பழனிசாமி(34). இவருக்கு திருமணமாகி சிவசக்தி (31) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பத்தன்று குருவரெட்டியூர் செலம்பூர் அம்மன் கோவில் அருகே குழந்தைகளை கூட்டிக்கொண்டு பேக்கரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து குழந்தைகளை விட்டுவிட்டு சிவசக்தி வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார்.
பின்னர் பழனிசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மனைவியை காணவில்லை என தெரிய வந்தது. பின்னர் அவர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு பழனிசாமி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்து 97,016 ஆக உயர்ந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 147 ஆக இருந்த நிலையில் நேற்று கூடுதலாக 11 ஆக அதிகரிப்பு 158 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்து 97,016 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 168 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 94 ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 642 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 1,800 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சென்னிமலை:
வெள்ளோடு அருகே உள்ள கொத்துமுட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (52). விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (44). இந்நிலையில் சம்பத்தன்று முருகேசன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டனர்.
பின்னர் மாலையில் இருவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவை திறந்து அதில் இருந்து 7½ பவுன் தங்க தாலி, 2 பவுன் தங்கச்சங்கிலி, 3 செட் வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதனையடுத்து முருகேசன் வெள்ளோடு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

பெருந்துறை, விஜயமங்கலம், ஈங்கூர், திங்களூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 3.30 மணி முதல் மாநகர் பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரல் மழையாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது.
இடியுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதேபோல் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தற்போது திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரோடுகளில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
இந்தநிலையில் திடீரென மழை பெய்ததால் இந்தப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. கருங்கல்பாளையம் காவிரி ரோடு பகுதியில் தற்போது வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. திடீரென பெய்த மழையால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி குண்டும் குழியுமாக ரோடு காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னிமலை சுற்று வட்டாரப்பகுதிகளில் மாலையில் வானம் கரும் மேகத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. இன்று அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை வரை நீடித்தது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இந்த மழை காரணமாக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு பணிகள் பாதிக்கப்பட்டது.
பவானி பகுதியில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. காலை முதல் மழை தூறியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை தூறி கொண்டே உள்ளது. சித்தோடு, அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

மொடக்குறிச்சி, எழுமாத்தூர், நஞ்சை ஊத்துக்குளி, அவல்பூந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இன்று காலை வரை மழை பெய்தது.
இதே போல் கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், சிவகிரி, கவுந்தப்பாடி, தாளவாடி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் சாரல் மழை மட்டுமே பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-42, மொடக்குறிச்சி- 31, கவுந்தப்பாடி-18, பவானிசாகர்-3.4, அம்மாபேட்டை- 3.

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் செயல்படும் 12 மதுக்கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 9-ந் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதன்படி அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலில் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டது.
இதேபோல் அனைத்து டீ கடைகளும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர். கே.வி.ரோடு,
மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும், பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகள்.
கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுவதுமாக திறக்க தடை விதிக்கப்பட்டது.
இதன்படி கடந்த வாரம் மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து 2-வது வாரமாக இந்த 24 இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இன்று திறக்கப்பட்டு இருந்தது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் செயல்படும் 12 மதுக்கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

பெருந்துறை அடுத்த குன்னத்தூர் ரோடு மேம்பாலம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த குன்னத்தூர் ரோடு மேம்பாலம் பகுதியில் அதிகாலை ஒருவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். அவர் யார்? என தெரியாமல் இருந்தது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த போது அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது.
இதில் அவர் குன்னத்தூர் ரோடு அய்யப்பன் நகர் பகுதியை சேர்ந்த ஜான் பாஷா (வயது 37) என தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.