என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சத்தியமங்கலம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ராஜா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சரத்குமார் அங்குள்ள பேக்கரி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு அறிமுகமான செல்வம் என்பவர் வந்து 3 இலக்க எண்கள் பேனாவில் எழுதப்பட்ட வெள்ளை சீட்டுகளை காட்டி மேற்படி சீட்டுகளை வாங்கினால் உங்களுக்கு பரிசு நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்.

    அதற்கு சரத்குமார் தன்னிடம் பணமில்லை என்று கூறி வந்துவிட்டார். இதேப்போல் ஏற்கனவே அவர் பலரிடம் லாட்டரி சீட்டில் பணம் விழும் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
    • 4 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதி களில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அருகே உள்ள உள்ள கிராம பகுதிகளில் புகுந்து அட்ட காசம் செய்து வருகிறது.

    அதே போல் தாளவாடி வனச்சர கத்துக்கு உட்பட்ட வன ப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்ட த்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இநத நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி சேசன் நகர் கிராமத்தில் புகுந்து அங்குள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது. கடந்த 2 மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி கால்நடைகளை தொடர்ந்து அடித்து கொன்று வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனத்துறையினர் 2 டிரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இன்று 2-வது நாளாக டிரோன் கேமிரா மூலம் வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர்.

    மேலும் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனத் துறையினர் புலி யின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் புலியை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை யினர் தெரிவி த்தனர்.

    • இரவு 10 மணிக்கு கோபிநாத் வீட்டுக்கு அருகே விக்னேஷ் என்ற வாலிபர் செல்போனில் பேசி கொண்டு இருந்தார்.
    • அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் கோபிநாத் மனைவி சாந்தினிக்கு போன் செய்து ஒரு வாலிபர் இங்கு நின்று போன் பேசி கொண்டு இருக்கிறார். இதனால் பயமாக உள்ளது என கூறினார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாண்டியன் வீதியை சேர்ந்தவர் கோபிநாத் (38). இவர் சென்னிமலை பஸ் நிலையம் அருகே உரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இரவு 10 மணிக்கு அவரது வீட்டுக்கு அருகே விக்னேஷ் என்ற வாலிபர் செல்போனில் பேசி கொண்டு இருந்தார். இதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் கோபிநாத் மனைவி சாந்தினிக்கு போன் செய்து ஒரு வாலிபர் இங்கு நின்று போன் பேசி கொண்டு இருக்கிறார். இதனால் பயமாக உள்ளது என கூறினார்.

    இது குறித்து சாந்தினி தனது கணவர் கோபிநாத்திடம் கூறினார். இதையடுத்து கோபிநாத் அங்கு சென்று போன் பேசி கொண்டு இருந்த விக்னேஷ் என்பவரிடம் இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் யாரிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறீ ர்கள். நீங்கள் யார்? என கேட்டுள்ளார்.

    அப்போது விக்னேசுக்கும் கோபிநாத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விக்னேஷ் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்துக்கு பிறகு விக்னேஷ் தனது நண்பர்களான திருப்பூர் ரெயில்வே போலீஸ்காரர் சரவணன், விக்னேஷின் அண்ணன் கண்ணன் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    இதைத் தொடர்ந்து போலீஸ்காரர் சரவணன் கோபிநாத்திடம் மீண்டும் தகராறு செய்தார். இதை யடுத்து அவர்கள் 3 பேரும் சேர்ந்து கோபிநாத்தை கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கோபிநாத் சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டார்.

    இது குறித்து கோபிநாத் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ்காரர் சரவணன், விக்னேஷ். கண்ணன் ஆகிய 3 பேர் மீதும் கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு ஆதார கொள்முதல் விலையாக கிலோவிற்கு 20.60 ரூபாய் நிர்ணயித்த போதிலும் கொள்முதல் மையம் திறக்கப்படாததால், தனியாரிடம் குறைந்த விலைக்கு கிலோ 14 ரூபாய் அளவிற்கு நெல்லை விற்பனை செய்கிறோம்.
    • சோளங்காபாளையம் நால் ரோட்டின் மத்தியில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாலும் சாலையின் இருபுறங்களிலும் வழக்கம்போல் போக்குவரத்து பாதிப்பில்லாமல் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சோளங்காபாளையத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்க கோரி இன்று காலை ஈரோடு-கரூர் பிரதான சாலையில் திடீரென நெல்லை கொட்டியும், டிராக்டரை நிறுத்தியும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    காலிங்கராயன் கால்வாய் பாசனத்தில் இந்த பகுதியில் மட்டும் சுமார் 700 ஏக்கரில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்தது. ஆனால் மே மாதத்துடன் அவை அனைத்தும் மூடப்பட்டு விட்டது.

    அரசு ஆதார கொள்முதல் விலையாக கிலோவிற்கு 20.60 ரூபாய் நிர்ணயித்த போதிலும் கொள்முதல் மையம் திறக்கப்படாததால், தனியாரிடம் குறைந்த விலைக்கு கிலோ 14 ரூபாய் அளவிற்கு நெல்லை விற்பனை செய்கிறோம். அதையும் வியாபாரிகள் வாங்க மறுத்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சோளங்காபாளையம் நால் ரோட்டின் மத்தியில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாலும் சாலையின் இருபுறங்களிலும் வழக்கம்போல் போக்குவரத்து பாதிப்பில்லாமல் நடைபெற்று வருகிறது.

    • ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
    • ஆந்திரா, கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுமி கருமுட்டை எடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை போல வேறு ஏதேனும் சிறுமிகளிடம் இதுபோன்று கரு முட்டை எடுத்து விற்கப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மற்றும் பெருந்துறை தனியார் மருத்துவமனை கருத்தரிப்பு மைய நிர்வாகிகளிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அந்த 2 தனியார் மருத்துவமனைகளில் இதுவரை கருமுட்டை வழங்கியவர்களின் பட்டியலை, ஆதார் எண் மற்றும் முகவரியுடன் சமர்பிக்குமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    போலி ஆதார் மூலம் வேறு ஏதேனும் சிறுமிகளிடம் இதுபோன்று சட்டவிரோதமாக கருமுட்டை பெறப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக இதுவரை கருமுட்டை வழங்கியவர்களின் பட்டியலை உடனே வழங்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    அந்த பட்டியலில் உள்ள ஆதார் உண்மையானதா? என்பதை ஆய்வு செய்தால் வேறு ஏதேனும் சிறுமிகள் இதே போன்று கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டனரா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் ஆந்திரா மற்றும் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுமி கருமுட்டை எடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    • வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை குறைந்தது
    • ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

    ஈரோடு, ஜூன். 9-

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தினமும் 3 டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் திடீரென விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே பழங்கள் விற்பனைக்கு வந்தன. எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் கோடை காலம் என்பதால் அதன் தேவையும் அதிகரித்தது.

    இதனால் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. மேலும் கோவில் விசேஷங்கள் அதிக அளவில் தொடர்ந்து வந்ததால் எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்து தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே இருந்தது.

    இந்நிலையில் மீண்டும் எலுமிச்சம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு எலுமிச்சம் பழங்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இன்று கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், பெங்களூர், சேலம், கோவை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இன்று மட்டும் 5 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    வரத்து அதிகரிக்க தொடங்கியதன் எதிரொலியாக விலையும் சரிய தொடங்கியது. இன்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கு விற்பனை யானது. சில்லறையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5-க்கு விற்பனையானது. ஒரு கிலோவில் 22 முதல் 25 எலுமிச்சை பழங்கள் உள்ளன.

    • ஈரோடு மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மட்டும் 2-ம் தவணை, 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 67 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கொரோனா காரணமாக உயிரிழந்த பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் வாழ்வாதாரத்துக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜோதி தலைமை தாங்கினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

    இதில் 124 குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சதீஷ்குமார், இலவச சட்ட ஆலோசனை மையத்தின் வக்கீல் கவிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வில்லியம்ஸ் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சத்தியமங்கலம் அருகே பாலதண்டாயுதபாணி கோவிலில் திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி யாகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • திருமண தடை நீக்கும் திருத்தலங்களான பவானி கூடுதுறை, திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருப்பதி, திருநள்ளாறு, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கத்தில் செய்யப்படும் பூஜை, வழிபாடுகள், சாப விமோசனங்கள் விலக சிறப்பு யாக பூஜைகளும் இங்கு இலவசமாக செய்ய ப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையம் டேம் ரோடு கொடுமடுவு பால தண்டாயு தபாணி கோவிலில் திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் இன்று நடந்தது.

    முன்னதாக விநாயகர் வழிபாட்டுடன் பூஜை தொடங்கியது. தொடர்ந்து சனிபகவான் தோஷம், நவ கிரக தோஷம், மாங்கல்ய தோஷம் ராகு, கேது தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், சிகூஹத்தி தோஷம், நாக தோஷம், ருது தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை விலக சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷ வழிபாடு நடந்தது.

    இதைத் தொடர்ந்து பித்ருகள் வழிபாடு, முன்னோர் சாபம் விலக குலதெய்வ வழிபாடு, தட்சிணா மூர்த்தி வழிபாடு, செல்வம், ஆயுள், ஞானம் நன்மக்கள் பேறு பெற பிரம்மா வழிபாடு, கல்வி, ஞானம் பெற சரஸ்வதி வழிபாடு, தொழில் விருத்தி, வறுமை நீங்கி கடன் தொல்லை தீர மகா விஷ்ணு வழிபாடு ஆகியவை நடந்தது.

    தொடர்ந்து பார்வதி- பரமேஸ்வரன் திருக்கல் யாணம் நடந்தது. ஏற்கனவே நடந்த இந்த திருக்கல்யாணத்தில் பங்கேற்ற 80 சதவீதம் பேருக்கு திருமணம் நடந்தது. அவர்கள் இந்த ஆண்டு தம்பதிகளாக பூஜையில் கலந்து கொண்டனர்.

    வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் பாதுகாப்பான இட வசதி, உணவு ஆகிய வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோபி செட்டிபாளையம், சத்திய மங்கலத்தில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.

    திருமண தடை நீக்கும் திருத்தலங்களான பவானி கூடுதுறை, திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருப்பதி, திருநள்ளாறு, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கத்தில் செய்யப்படும் பூஜை, வழிபாடுகள், சாப விமோசனங்கள் விலக சிறப்பு யாக பூஜைகளும் இங்கு இலவசமாக செய்ய ப்பட்டது.

    இன்று நடந்த யாகத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.89 அடியாக அதிகரித்து உள்ளது.
    • பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணை யின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 907 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 80 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கொடுமுடி அருகே துணிகரம் பேக்கரியில் செல்போன் திருடிய வாலிபரை உரிமையாளர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நடுப்பாளையம் காச்சக்கார மேடு பகுதியை சேர்ந்தவர் கல்யாண்சக்கரவர்த்தி (25). அதேபகுதியில் உள்ள நால் ரோட்டில் சொந்தமாக பேக்கரி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது பேக்கரி கடைக்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்து டீ கேட்டார்.

    கல்யாண் சக்கரவர்த்தி அந்த நபருக்கு டீ போட்டுக்கொடுத்து விட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு மற்றொரு நபருக்கு டீ போட சென்றுவிட்டு மீண்டும் தனது கல்லா பெட்டி அருகே வந்தார்.

    அப்போது அங்கு வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் மதிப்பு ரூ.38 ஆயிரம் இருக்கும்.

    டீ கேட்டு வந்த நபர் மீது சந்தேகம் அடைந்த கல்யாண்சக்கரவர்த்தி அந்த நபரை கூப்பிட்டு உள்ளார். ஆனால் அந்த நபர் வேகமாக சென்றார்.

    உடனடியாக கல்யாண் சக்கரவர்த்தி அங்கு இருந்த–வர்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரி த்ததில் அவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்கிற சேகர் என தெரியவந்தது. அவர் செல்போன் திருடி–யதை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து சேகரை மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கியதில் வட மாநில வாலிபர் பலியானார்.
    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை வேலை பார்க்கும் சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    உத்திரபிரதேச மாநிலம் மவு மாவட்டம் அடரி கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஷனேகி (43). இவர் கடந்த 3 வருடமாக ஈரோட்டில் தங்கி கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று நாராய–ணன்வலசு பகுதியில் மரம் அறுக்கும் கட்டர் மிஷினில் மரகதவு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் காலணி அணியாமல் வேலை பார்த்துக்கொண்டி–ருந்தார்.

    அப்போது திடீரென ராம்ஷனேகியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை வேலை பார்க்கும் சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராம்ஷனேகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×