என் மலர்
ஈரோடு
- ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெ ட்டிற்கு ஆந்திராவில் இருந்து மட்டும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தன.
- இந்த வாரம் வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ. 35 வரை விற்பனையாகி வருகிறது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் தாளவாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒட்டன் சத்திரம், பெங்களூரு, கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து 8 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது.
இதன் காரணமாக தக்காளி விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தக்காளி வரத்தும் சரிய தொடங்கியுள்ளது. இதனால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெ ட்டிற்கு ஆந்திராவில் இருந்து மட்டும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 15 வரை விற்பனையாகி வந்தது. இந்த வாரம் வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ. 35 வரை விற்பனையாகி வருகிறது. இன்னும் சில நாட்கள் இதே நிலைமை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- மன விரக்தியடைந்த சென்னியப்பன் எலி மருந்தை (விஷம்)சாப்பிட்டுவிட்டார்.
- இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கவுண்டச்சிபாளையம் நாடார் காலனியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (45). இவரது கணவர் சென்னியப்பன் (54). இவர் தென்னை மரம் ஏறும் வேலை செய்து வந்தார்.
மது அருந்தும் பழக்கம் காரணமாக சென்னிய ப்பனுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் மன விரக்தியடைந்த சென்னியப்பன் எலி மருந்தை (விஷம்)சாப்பிட்டுவிட்டார். அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சென்னியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அனுமதியின்றி மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தானம் மற்றும் சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- மேலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 116 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு அனுமதி யின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படு வதாக பவானி போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து பவானி சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், மகேஸ்வரி மற்றும் போலீசார் குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது குருப்பநாயக்கன் பாளையம் அய்யனாரப்பன் கோவில் வீதியில் சந்தானம் (வயது 51) 15 மது பாட்டில்கள் வைத்து கொண்டு விற்ப னை செய்தது தெரியவந்தது.
அதேபோல் செங்கோடன் டீக்கடை வீதியில் சந்திரன் (56) என்பவர் 101 மது பாட்டில்கள் விற்பனை க்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதயைடுத்து அனுமதியின்றி மது பாட்டில் களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக சந்தானம் மற்றும் சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 116 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பிரகாசுக்கு முதுகுத்தண்டு வடத்தில் பிரச்சனை உள்ளது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
- இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (39). இவரது தந்தை கணேசன் (55). இவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தறிப்பட்டறையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
பிரகாசுக்கு முதுகுத்தண்டு வடத்தில் பிரச்சனை உள்ளது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார்.
உடனே அருகில் இருந்த வர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
- இதனால் விவசாயிகள் வேதனையும், நஷ்டமும் அடைந்துள்ளனர்.
கொடுமுடி:
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பள்ளி மற்றும் கோவில்களிலும் வெள்ளம் சூழ்ந்தது.
இந்நிலையில் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாசூர், மலையம்பாளையம், கருமாண்டம்பாளையம், சத்திரப்பட்டி, கொளாநல்லி, காரணாம்பாளையம், ஊஞ்சலூர், காசிபாளையம், வெங்கம்பூர் எல்லையூர், சோளக்காளி பாளையம், நொய்யல் போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்தது.
இதன் காரணமாக 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையும், நஷ்டமும் அடைந்துள்ளனர். தங்களுக்குரிய பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அமைச்சர் முத்துசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- இதேபோல் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பவானி:
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ள நிலையில் தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
வினாடிக்கு 1.85 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படு–வதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதே போல் அம்மாபேட்டையில் 10 -க்கும் மேற்பட்ட வீடுகள், ஈரோடு கருங்கல்பாளையம், காவிரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள வீடுகள், கொடுமுடியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் என மாவட்டம் முழுவதும் 282-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த 343 குடும்பங்களை சேர்ந்த 1,056 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு–ள்ள 11 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் இந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் நிர்வாகம் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாநகராட்சி மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வார்டு 11- இல் மழை நீரினால் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. அதையும் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களையும் ஆய்வு செய்தார்.
மேலும் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவ உதவிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் ஆய்வின்போது வருவாய்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறை உள்பட அனைத்து துறையினரும் உடன் இருந்தனர். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெயக்குமாரும் உடன் இருந்தனர்.
இதேபோல் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பவானி நகரில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி உள்ள முகாமிற்கு சென்ற மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பொதுமக்களுக்கு செய்யப் பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதேப்போல் கொடுமுடி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பவானி கந்தன் பட்டறை பகுதிக்கு கலெக்டர் கிருஷ்ணனு ண்ணி வருகை தந்து முகாமில் தங்கி இருந்த பொதுமக்களிடம் உணவு, இருப்பிட வசதி, மருத்துவ வசதி எவ்வாறு செய்யப்ப ட்டுள்ளது. தங்களுக்கு ஏதாவது குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார்.
பொதுமக்கள் வருவாய் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் சிறப்பான முறையில் பணிகள் செய்து வருவதாக பாராட்டினர். இதனைத் தொடர்ந்து பவானி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது உதவி கலெக்டர் மீனாட்சி, பவானி தாசில்தார் முத்து–கிருஷ்ணன், நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் உள்பட பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.
- அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 9,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி 102 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9,600 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 9,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்ட படி தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடுகிறது.
- ஆப்பக்கூடல்-அத்தாணி சாலையில் கார் நிலைதடுமாறி அருகில் இருந்த கரும்பு காட்டு பள்ளத்தில் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
- இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல்-அத்தாணி சாலையில் கூத்தம்பூண்டி பிரிவு பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஏரி வளைவில் நேற்று மாலை ஒரு தம்பதியினர் அத்தாணியில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி காரில் வந்த கொண்டிருந்தனர்.
அப்போது கார் நிலைதடுமாறி அருகில் இருந்த கரும்பு காட்டு பள்ளத்தில் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது.இது குறித்து விசாரித்ததில் காரில் ஒரு தம்பதியினர் வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
மேலும் ஆப்பக்கூடல் போலீசாரும் காரில் வந்தவர்களின் நிலை குறித்து கேட்டபோது காரில் வந்தவர்கள் குறித்து விபரங்கள் இல்லை என்றும் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- அமைச்சர் முத்துசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு:
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ள நிலையில் தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
வினாடிக்கு 1.85 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதே போல் அம்மாபேட்டையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள், ஈரோடு கருங்கல்பாளையம், காவிரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள வீடுகள், கொடுமுடியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் என மாவட்டம் முழுவதும் 282-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த 343 குடும்பங்களை சேர்ந்த 1,056 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 11 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் இந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் நிர்வாகம் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாநகராட்சி மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வார்டு 11-இல் மழை நீரினால் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. அதையும் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களையும் ஆய்வு செய்தார்.
மேலும் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ உதவிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் ஆய்வின்போது வருவாய்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறை உள்பட அனைத்து துறையினரும் உடன் இருந்தனர்.
துணைமேயர் செல்வராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெயக்குமாரும் உடன் இருந்தனர்.
இதேபோல் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பவானி நகரில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி உள்ள முகாமிற்கு சென்ற மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதேப்போல் கொடுமுடி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- சஞ்சய் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று மொடச்சூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
- பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் அருகே உள்ள செல்லிபாளையத்தை சேர்ந்தவர் சஞ்சய் (22). கூலி தொழிலாளி. இவர் வேலை செய்யும் இடத்தில் கோபியை சேர்ந்த 17 வயது சிறுமியும் வேலை பார்த்து வந்துள்ளார். சஞ்சய் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சஞ்சய் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று மொடச்சூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் தீபக்குமார் (31) கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து தகவல் தெரிந்ததும் சஞ்சய் தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து கோபி மகளிர் போலீசார் சஞ்சய் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மேலும் சிறுமியை மீட்டு ஈரோடு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கொரோனா பாதிப்புடன் 265 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தினசரி பாதி ப்பை விட குணம் அடைந்த வர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று சுகாதாரத்துறை யினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 614 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 39 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 615 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 265 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- தொழிற் சாலையின் முன் பகுதியில் டிப்பர் லாரியை சுத்தம் செய்வதற்காக லாரியின் பின்பகுதியை மேலே தூக்கி உள்ளார்.
- இதில் கோபால் மீது மின்சாரம் பாயந்தது.
சென்னிமலை:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுதத வனவாசி புதுப்பேட்டை காலனியைச் சேர்ந்தவர் கோபால் ( 53 ). இவர் டிப்பர் லாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமுதா. கோபால் சென்னி மலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியில் தனியாக தங்கி உள்ளார்.
ஒரு தனியார் நிறுவன த்தில் கோபால் டிப்பர் லாரி ஓட்டி வந்தார். இந்நிலையில் கோபால் ஈங்கூரில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு லோடு ஏற்ற டிப்பர் லாரியுடன் சென்றுள்ளார்.
அப்போது அந்த தொழிற் சாலையின் முன் பகுதியில் டிப்பர் லாரியை சுத்தம் செய்வதற்காக லாரியின் பின்பகுதியை மேலே தூக்கி உள்ளார். அப்போது அங்கு மேல் பகுதியில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் டிப்பர் லாரியின் பகுதி உரசியது.
இதில் கோபால் மீது மின்சாரம் பாயந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை செல்லும் வழியிலேயே கோபால் இறந்து விட்டார். இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.






