எலி மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை

மன விரக்தியடைந்த சென்னியப்பன் எலி மருந்தை (விஷம்)சாப்பிட்டுவிட்டார்.இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எலி மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கவுண்டச்சிபாளையம் நாடார் காலனியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (45). இவரது கணவர் சென்னியப்பன் (54). இவர் தென்னை மரம் ஏறும் வேலை செய்து வந்தார்.

மது அருந்தும் பழக்கம் காரணமாக சென்னிய ப்பனுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் மன விரக்தியடைந்த சென்னியப்பன் எலி மருந்தை (விஷம்)சாப்பிட்டுவிட்டார். அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சென்னியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com