அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

அனுமதியின்றி மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தானம் மற்றும் சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 116 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
Published on

பவானி:

பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு அனுமதி யின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படு வதாக பவானி போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து பவானி சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், மகேஸ்வரி மற்றும் போலீசார் குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது குருப்பநாயக்கன் பாளையம் அய்யனாரப்பன் கோவில் வீதியில் சந்தானம் (வயது 51) 15 மது பாட்டில்கள் வைத்து கொண்டு விற்ப னை செய்தது தெரியவந்தது.

அதேபோல் செங்கோடன் டீக்கடை வீதியில் சந்திரன் (56) என்பவர் 101 மது பாட்டில்கள் விற்பனை க்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதயைடுத்து அனுமதியின்றி மது பாட்டில் களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக சந்தானம் மற்றும் சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 116 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com