என் மலர்
உள்ளூர் செய்திகள்

300 ஏக்கர் பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது
- கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
- இதனால் விவசாயிகள் வேதனையும், நஷ்டமும் அடைந்துள்ளனர்.
கொடுமுடி:
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பள்ளி மற்றும் கோவில்களிலும் வெள்ளம் சூழ்ந்தது.
இந்நிலையில் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாசூர், மலையம்பாளையம், கருமாண்டம்பாளையம், சத்திரப்பட்டி, கொளாநல்லி, காரணாம்பாளையம், ஊஞ்சலூர், காசிபாளையம், வெங்கம்பூர் எல்லையூர், சோளக்காளி பாளையம், நொய்யல் போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்தது.
இதன் காரணமாக 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையும், நஷ்டமும் அடைந்துள்ளனர். தங்களுக்குரிய பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






