என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "were flooded"

    • இரவு பெய்த கனமழை காரணமாக பெரும்பள்ளம் ஓடையில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.
    • இதையடுத்து பெரும்பள்ளம் கரையோர பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக சென்னிமலை ரோடு சேனாதிபதி பாளையம், தொட்டிபாளையம், பெரிய சடையம்பாளையம் பகுதிகளில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நின்றது.

    இந்நிலையில் ஸ்டோனி பிரிட்ஜ் அருகே பெரும்பள்ளம் ஓடை செல்கிறது. இதன் அருகே கரையோர பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பெரும்பள்ளம் ஓடையில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து பெரும்பள்ளம் கரையோர பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமை யாக பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுக்கு இந்த பகுதி பொது மக்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

    இதேப்போல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. பெரும்பள்ளம் ஓடையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர் மழை காரணமாக ஈரோடு கரட்டிபாளையத்தில் உள்ள ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் சென்னிமலை ரோடு பகுதி முழுவதும் தேங்கி நின்றதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். 

    • கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
    • இதனால் விவசாயிகள் வேதனையும், நஷ்டமும் அடைந்துள்ளனர்.

    கொடுமுடி:

    காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பள்ளி மற்றும் கோவில்களிலும் வெள்ளம் சூழ்ந்தது.

    இந்நிலையில் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாசூர், மலையம்பாளையம், கருமாண்டம்பாளையம், சத்திரப்பட்டி, கொளாநல்லி, காரணாம்பாளையம், ஊஞ்சலூர், காசிபாளையம், வெங்கம்பூர் எல்லையூர், சோளக்காளி பாளையம், நொய்யல் போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்தது.

    இதன் காரணமாக 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையும், நஷ்டமும் அடைந்துள்ளனர். தங்களுக்குரிய பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×