என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
    X

    சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

    • சஞ்சய் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று மொடச்சூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
    • பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் அருகே உள்ள செல்லிபாளையத்தை சேர்ந்தவர் சஞ்சய் (22). கூலி தொழிலாளி. இவர் வேலை செய்யும் இடத்தில் கோபியை சேர்ந்த 17 வயது சிறுமியும் வேலை பார்த்து வந்துள்ளார். சஞ்சய் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

    இந்நிலையில் சஞ்சய் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று மொடச்சூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் தீபக்குமார் (31) கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து தகவல் தெரிந்ததும் சஞ்சய் தலைமறைவாகி விட்டார்.

    இதையடுத்து கோபி மகளிர் போலீசார் சஞ்சய் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மேலும் சிறுமியை மீட்டு ஈரோடு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×