

ஈரோடு:
பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி 102 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9,600 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 9,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்ட படி தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடுகிறது.