என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sugarcane plantation and overturned"

    • ஆப்பக்கூடல்-அத்தாணி சாலையில் கார் நிலைதடுமாறி அருகில் இருந்த கரும்பு காட்டு பள்ளத்தில் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
    • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல்-அத்தாணி சாலையில் கூத்தம்பூண்டி பிரிவு பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஏரி வளைவில் நேற்று மாலை ஒரு தம்பதியினர் அத்தாணியில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி காரில் வந்த கொண்டிருந்தனர்.

    அப்போது கார் நிலைதடுமாறி அருகில் இருந்த கரும்பு காட்டு பள்ளத்தில் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது.இது குறித்து விசாரித்ததில் காரில் ஒரு தம்பதியினர் வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

    மேலும் ஆப்பக்கூடல் போலீசாரும் காரில் வந்தவர்களின் நிலை குறித்து கேட்டபோது காரில் வந்தவர்கள் குறித்து விபரங்கள் இல்லை என்றும் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×