என் மலர்
ஈரோடு
- ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்லும் நீர்வழி பாதையின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம் மழை நீர் வெள்ளத்தால் சேதம் அடைந்து ஒரு பகுதி கீழே இறங்கி தரை தட்டி நிற்கும் நிலையில் உள்ளது.
- இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த வேம்பத்தி ஊராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட நல்லா மூப்பனூர் பிரிவு பகுதியில் இருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் பலர் வாகனங்களில் சென்று வருகிறார்கள்.
எட்டிக்குட்டையா பாளையம், பொதிய மூப்ப னூர், சேத்தனாம்பாளையம், பருவாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாகவும் ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்ல க்கூடிய நீர்வழிப் பாதையாகவும் உள்ளது. இந்த பகுதியில் மேல்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதி சுற்று பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியது.
இதனால் ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்லும் நீர்வழி பாதையின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம் மழை நீர் வெள்ளத்தால் சேதம் அடைந்து ஒரு பகுதி கீழே இறங்கி தரை தட்டி நிற்கும் நிலையில் உள்ளது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த வழியாக ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனம் செல்ல முடியாத நிலையும் நிலவி வருகிறது இதனால் பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே இந்த சேதமடைந்த மேல்மட்ட பாலத்தை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற உள்ள தேர்வினை 5,920 பேர் எழுத உள்ளனர்.
ஈரோடு:
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது.
இத்தேர்வு ஈரோடு மாவட்டத்தில் திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை அருகே உள்ள நந்தா என்ஜினியரிங் கல்லூரி மற்றும் கொங்கு கல்லூரி என 3 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வினை 957 பெண்கள், 4,963 ஆண்கள் என 5,920 பேர் எழுத உள்ளனர்.
தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.40 மணிக்கு முடிவடைகிறது. இதில் தமிழ் பாடங்களில் இருந்து 80 வினாக்களும், பொது அறிவு 70 வினாக்களும் என மொத்தம் 150 வினாக்களுக்கு தேர்வு நடக்கும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே அவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வர வேண்டும். அவர்கள் பிரஸ்கிங் முறையில் சோதிக்கப்பட்ட பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
இந்த தேர்வு அறை கண்காணிப்பிலும், பாதுகாப்பு பணியிலும் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் என மொத்தம் 600 போலீசார் ஈடுபட உள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை 3 மையங்களிலும் மாவட்ட காவல் துறை சார்பில் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
- ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ஒப்பந்த அடிப்ப டையில் தற்காலிகமாக பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஈரோடு மாவ ட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ஒப்பந்த அடிப்ப டையில் தற்காலிகமாக பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஈரோடு மாவ ட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படு–வர். அரசு அறிவித்தபடி மாதம் ரூ.27,804 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் இளங்கலை பட்டம் (சமூகப்பணி, சமூகவியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள், பொது நிர்வாகம், உளவியல், சட்டம், பொது சுகாதாரம், சமூக வளமுகாமைத்துவம்) பெற்றிருக்க வேண்டும்.
40 வயதுக்கு உட்பட்டோர் 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், புதிய கட்டடம், 6-வது மாடி, ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
+2
- மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தி.மு.க., பா.ஜனதாவினர் புகார் அளித்தனர்.
- காயம் அடைந்த 4 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.வில் 11 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வில் 1 கவுன்சிலரும், பா.ஜனதாவை சேர்ந்த 2 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலரும் உள்ளனர்.
இந்த பேரூராட்சியின் தலைவராக மொடக்குறிச்சி பேரூர் தி.மு.க. செயலாளர் சரவணனின் மனைவி செல்வாம்பாள் சரவணன் உள்ளார். இந்த நிலையில் மொடக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக பா.ஜனதா சார்பில் மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சுந்தரம் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். மேலும் பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணனும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதை அகற்ற வேண்டும் என புகார் செய்தார்.
இதையடுத்து மொடக்குறிச்சி போலீசார் பிரச்சினைக்குரிய போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதுபற்றி தெரியவந்ததும் பா.ஜனதா பெண் கவுன்சிலர் சத்யாதேவியின் கணவரும், பா.ஜனதா மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவருமான சிவசங்கர் என்பவர் போஸ்டர் அகற்றும் இடத்துக்கு சென்றார். அவர் போஸ்டர் அகற்றிய தூய்மை பணியாளர்களிடம் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் போஸ்டரை ஏன் அகற்றுகிறீர்கள் என்றும் கேட்டுள்ளார்.
இதுபற்றி தெரியவந்ததும் பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இரு தரப்பினரும் திடீரென மோதிக்கொண்டனர். இதில் மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன் அவரது கணவரும் பேரூராட்சி தி.மு.க. செயலாளருமான சரவணன், 5-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் மகன்யா மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த சிவசங்கர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுபற்றி தெரியவந்ததும் ஏராளமான தி.மு.க., பா.ஜனதா தொண்டர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த மோதல் சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தி.மு.க., பா.ஜனதாவினர் புகார் அளித்தனர். பின்னர் காயம் அடைந்த 4 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோதல் சம்பவம் பற்றி தெரிய வந்ததும் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குணசேகரன், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிர்வேல், தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் வேதானந்தம், கரூர் மாவட்ட பொருப்பாளரும், ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் தலைவருமான சிவசுப்பிரமணியன் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மொடக்குறிச்சி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
இரு தரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் இருதரப்பினர் கொடுத்த புகார் மீதும் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க., பா.ஜனதாவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து மொடக்குறிச்சி பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் தினேஷ் கிரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே கணபதிபாளையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ் கிரி என்கிற சேட்டு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தபோது டீக்கடையில் புகையிலை பொருட்களை இருந்தது தெரியவந்தது.
பின்னர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தினேஷ் கிரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனிப்படை போலீசார் சுமித்ராவை குழந்தையுடன் அழைத்து வந்தனர்.
- இன்று சுமித்ரா தனது குழந்தையுடன் பெருந்துறையில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பாலக்கரை கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் சுமித்ரா(22). இவர், கடந்த 2017-ம் ஆண்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அதே நிறுவனத்தில் பணியாற்றிய மேற்கு வங்க மாநிலம் கலான்பூர் அம்தோப் பகுதியை சேர்ந்த சுப்ரத தாஸ் என்பவர் சுமித்ராவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கொல்கத்தாவுக்கு கடத்தி சென்று விட்டார்.
கடந்த 6 மாதத்துக்கு முன் சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சுமித்ராவை கடந்த 3 மாதமாக அவரது கணவர் சுப்ரததாஸ் மது போதையில் அடித்து துன்புறுத்துவதாகவும், சூடு வைத்து சித்ரவதை செய்வதாகவும், வாட்ஸ்-அப் வீடியோ காலில் தனது பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார்.
இதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சித்ரவதைக்கு ஆளாகியுள்ள மகளை மீட்டு தரக்கோரி பெற்றோர் ஈரோடு எஸ்.பி. சசிமோகனிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த புகாரை விசாரித்து, சுமித்ராவை மீட்டு வர பெருந்துறை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தனிப்படை போலீசார் கடந்த 17-ந் தேதி மேற்கு வங்க மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு உள்ளூர் போலீசின் உதவியுடன் சுமித்ராவை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமித்ரா இருக்கும் இடத்தை கண்டறிந்ததும், அவரை மீட்டு மங்கள்கோட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அம்மாநில போலீசார் சுமித்ராவுடன் விசாரணை நடத்தியதில், சுப்ரததாஸ் கொடுமைப்படுத்தியது உண்மை என்பது தெரியவந்தது. எனினும் கணவர் மீது சுமித்ரா புகார் ஏதும் அளிக்கவில்லை.
இந்நிலையில் மீட்கப்பட்ட சுமித்ராவை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தனிப்படை போலீசார் சுமித்ராவை குழந்தையுடன் அழைத்து வந்தனர்.
இன்று சுமித்ரா தனது குழந்தையுடன் பெருந்துறையில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். போலீசாரிடம் கொல்கத்தாவில் தனக்கு நடந்த கொடுமை பற்றி கண்ணீர் மல்க கூறினார்.
இதனை எடுத்து சுமத்திராவை அவரது பெற்றோருடன் அழைத்து செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.
- மணிகண்டன் கோணவாய்க்கால் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
- இந்த நிலையில் மணிகண்டன் தங்கி இருக்கும் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி பசுவேஸ்வரர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவரது மனைவி நாகராணி (37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மணிகண்டன மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நாகராணி தார்பாய் தைக்கும் வேலை பார்த்து வருகிறார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்ற னர். நாகராணி குழந்தை களுடன் பவானியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
மணிகண்டன் லட்சுமி நகர் அருகில் உள்ள கோண வாய்க்கால் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் மணிகண்டன் தங்கி இருக்கும் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் உடனே மணிகண்டனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நாகராணி அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அருள்தாஸ் கதவை எட்டி உதைத்து செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
- இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவுக்கு உட்பட்ட எல்லீஸ்பேட்டை பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (46). இவர் தனது வீட்டின் அருகிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் செல்வி கடையில் இருந்தபோது அதே பகுதியில் உள்ள மாதா கோவில் வீதியை சேர்ந்த அருள்தாஸ் (49). தொழிலாளி இவர். மதுபோதையில் கடைக்கு வந்து கடனாக சிகரெட் தருமாறு கேட்டுள்ளார். செல்வி சிகரெட் தர மறுத்துள்ளார்.
இதையடுத்து அருள்தாஸ் கடையினுள் நுழைந்து அங்கிருந்த கண்ணாடி ஜாடியை தூக்கி கீழே போட்டு உடைத்தும், செல்வியை தகாத வார்த்தையால் திட்டியும் தகராறு செய்துள்ளார்.
இதனால் செல்வி அருகில் உள்ள தனது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். அப்போதும் விடாமல் அருள்தாஸ் கதவை எட்டி உதைத்து செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த அருள்தாஸ் அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.
பின்னர் அவர் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- வாக்கு வாதம் முற்றியதில் அண்ணன்- தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
- இதில் எதிர்பாராதவிதமாக சஞ்சீவி காந்தியின் கை நாகராஜின் மார்பு பகுதியில் தாக்கியதில் நாகராஜ் மயங்கி விழுந்தார்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு சஞ்சீவி காந்தி (43), நாகராஜ் (38) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் சஞ்சீவி காந்திக்கு செல்வி என்ற மனைவியும், சிவானி (7) என்ற மகளும் உள்ளனர், இவர் கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள சின்னகுளம் என்ற பகுதியில் குடியிருந்து எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.
இளையமகன் நாகராஜ் என்பவருக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவியும், பூவிசா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். நாகராஜ் பங்களாப்புதூர் அண்ணா நகரில் தந்தை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் சஞ்சீவி காந்தி மற்றும் நாகராஜ் இருவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சஞ்சீவி காந்தி பங்களாப்புதூர் அண்ணா நகரில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்து சொத்தை பிரித்து தர வேண்டும் என கேட்டார்.
இதை தொடர்ந்து நேற்று மாலை வீட்டில் அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்கு வாதம் முற்றியதில் அண்ணன்- தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இவர்களை அவர்களது பெற்றோர் தடுத்தனர். ஆனால் 2 பேரும் தொடர்ந்து தாக்கி கொண்டனர். இதில் எதிர்பாராதவிதமாக சஞ்சீவி காந்தியின் கை நாகராஜின் மார்பு பகுதியில் தாக்கியதில் நாகராஜ் மயங்கி விழுந்தார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சு மூலம் நாக ராஜை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்த நாகராஜ்க்கு ஏற்கனவே இதய நோய் பாதிப்பு இருந்து சிகிச்சை பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பங்களா ப்புதூர் போலீசார் சஞ்சீவி காந்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதை தொடர்ந்து சஞ்சீவி காந்தியை போலீ சார் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர் படுத்து கிறார்கள்.
- முதியவர் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த னர்.
- சைக்கிள் திருட்டுப் போனதற்கு போலீஸ் நிலையத்தில் யாரும் புகார் செய்யவில்லை.
அந்தியூர்:
அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (45). சலூன் தொழிலாளி இவர் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் பஸ் நிலையம் பகுதியில் தனது சைக்கிளை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோபால் வழக்கம் போல் அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இரவு தனது சைக்கிள் நிறுத்தினார். காலையில் எழுந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த சைக்கிளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அக்கம்பக்கம் தேடி பார்த்து விசாரித்தார். அப்போது அதிகாலை 5 மணி அளவில் முதியவர் ஒருவர் சைக்கிளை தள்ளி சென்றதாக அங்கு இருந்த வர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஏற்கனவே கடந்த 12 நாட்களுக்கு முன்பு கோபால் தவிட்டுப்பாளையத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு கோவிலுக்கு சென்றார்.
அப்போது அவர் வெளியில் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த சைக்கிளை காணவில்லை. அப்போது ஒரு முதியவர் சைக்கிளை எடுத்து சென்று கொண்டி ருந்த போது அவரை பிடித்து சைக்கிளை மீட்டார்.
இதனால் அவர் தான் சைக்கிளை எடுத்திருப்பார் என எண்ணினார். இதை யடுத்து அவர் அந்த முதியவரை பிடித்து எனது சைக்கிள் எங்கே? என்று கேட்டுள்ளார்.
அந்த முதியவர் கோபாலை கண்டு திடுக்கிட்டு இந்த சைக்கிளும் உங்களுடையது தானா எனக்கு தெரியவில்லை என்று கூறி அதை தவிட்டு ப்பாளையம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் எடைக்கு போட்டு விட்டேன். அதை விற்ற பணத்தில் மது வாங்கி குடித்து விட்டதாக தெரி வித்தார்.
இதையடுத்து உடனடியாக கோபால் அந்த பழைய இரும்பு கடைக்கு சென்று பணம் கொடுத்து மீண்டும் அந்த சைக்கிளை மீட்டு வந்துள்ளார்.
இதேபோல் அந்தியூர் பவானி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியின் அருகே நிறுத்தி வைத்திருந்த மாணவர்களின் 2 சைக்கிள்களை யும் அந்த முதியவர் திருடி சென்றது சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. அப்போது அவரை மன்னித்து சைக்கிளை மீட்டு அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.
இதே போல் அந்தியூர் பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் திருட்டு போனதாகவும் அதில் 5 சைக்கிள்கள் மட்டும் திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் மற்ற சைக்கிள்கள் பழைய இரும்பு கடைகளில் விற்று மது அருந்தி வந்தாகவும் அந்த முதியவர் கூறினார்.
ஆனால் சைக்கிள் திருட்டுப் போனதற்கு போலீஸ் நிலையத்தில் யாரும் புகார் செய்யவில்லை. இதை பயன்படுத்தி அந்த முதியவர் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த னர்.
- இந்தியாவில் குஜராத்தை போல தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தை மாற்ற பா.ஜ.க. முயற்சி செய்கிறது.
- கொங்கு மண்டலத்தில் சமூக பதட்டத்தை உண்டாக்கினால் தொழில் முடங்கப்படும்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் தமிழ் மொழியின் தொன்மையை தெரியப்படுத்தியதில் சிறுபான்மை மக்களின் பங்கு மகத்தானது. உதாரணமாக திருவாசகத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை ஜி.யு.போப் என்று சொல்லக்கூடிய அந்த மிகப்பெரிய தமிழ் அறிஞரைசாரும். திருக்குறளை மொழிபெயர்த்த பெருமை அவர்களை சாரும். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும், டாக்டர்.அம்பேத்காருக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
இதேப்போல் தமிழ் மொழிக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழினத்திற்கும் பா.ஜ.க.வுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வல்லபாய் பட்டேல், அம்பேத்கரை தங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று தங்களை காட்டிக் கொள்வதற்கும், தமிழ் மொழி தங்களுக்கு நெருக்கமான மொழி என்று அடையாளம் படுத்துவதன் மூலமாக அவர்கள் (பா.ஜ.க) தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறார்கள்.
ஆனால் நம் தமிழர்கள் விழித்து கொண்டார்கள். தமிழர்களை அவர்களால் ஏமாற்ற முடியாது.
இங்கே இருக்கின்ற சில கட்சிகள் அதிலும் அ.தி.மு.க. தனது திராவிட என்ற அடையாளத்தை தொலைத்து விட்டு தங்கள் இருப்புக்கான நியாயத்தை தொலைத்து விட்டு பா.ஜ.க.விடம் அடகு வைத்து விட்டது. ஜெயலலிதா அவர்கள் சில கொள்கையில் உறுதியாக இருந்தார். அதையெல்லாம் தொலைத்து விட்டு இன்று ஒட்டு மொத்தமாக பா.ஜ.க.வுக்கு விலை போய் இருக்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் குஜராத்தை போல தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தை மாற்ற பா.ஜ.க. முயற்சி செய்கிறது. கொங்கு மண்டலத்தில் சமூக பதட்டத்தை உண்டாக்கினால் தொழில் முடங்கப்படும். அதனால் தமிழ்நாடு பின்னுக்கு தள்ளப்படும். அதன் மூலம் வருகின்ற அரசியல் ஆதாயத்தை வைத்து சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது என்று கிளப்ப நினைக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- தென்காசி மாவட்டம் சிவகிரியில் கிருஷ்ணர் கோவில் உள்ளது.
- தென்னங்கன்று வைப்பதற்காக குழிதோண்டியபோது பஞ்லோக சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரியில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் தென்னங்கன்றுகள் வைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. அப்போது நடராஜர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிலை 52 கிலோ எடையும், 2½ அடி உயரத்தில் பஞ்சலோக சிலையாகும்.
இதுகுறித்து சிவகிரி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தாசில்தார் சென்று விசாரணை நடத்தி வருகிறார். தென்னங்கன்று வைப்பதற்காக குழிதோண்டியபோது பஞ்லோக சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






