என் மலர்
ஈரோடு
- சிவக்குமாரை வெட்டிக்கொலை செய்தது அதேபகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பது தெரிய வந்தது.
- சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவி பட்டணம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25).
டிப்ளமோ முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த இவர் நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு இரவு 8 மணி அளவில் நண்பர்கள் அழைப்பதாக கூறி விட்டு வெளியே சென்றார்.
இந்நிலையில் சிறிது நேரத்தில் அவர் அப்பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொது மக்கள் சிவக்குமாரின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்கு ஓடிச் சென்று உடலை பார்த்து கதறி அழுதனர். சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் சிவக்குமாரை வெட்டிக்கொலை செய்தது அதேபகுதியை சேர்ந்த செல்வக்குமார்(34) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவக்குமார் குடும்பத்தினருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே இடத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த விரோதத்தில் செல்வக்குமாரை ஏவி சிவக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தந்தை முருகன் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.
- குண்டேரிபள்ளம், சத்தியமங்கலம், பவானிசாகர், அம்மாபேட்டை, கோபி பகுதிகளிலும் இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
- சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவு 12 மணி முதல் காலை வரை விடிய விடிய மழை பெய்து வருகிறது.
ஈரோடு:
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக கொடிவேரி அணை பகுதியில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.
மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 123 மில்லி மீட்டர் அதாவது 12 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கொடிவேரி அணைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு பலகை கொடிவேரி நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் குண்டேரிபள்ளம், சத்தியமங்கலம், பவானிசாகர், அம்மாபேட்டை, கோபி பகுதிகளிலும் இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலையில் நிலவியது.
சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவு 12 மணி முதல் காலை வரை விடிய விடிய மழை பெய்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி குளிர்ச்சியான சூழ்நிலையில் ரம்மியமாக காட்சியளிக்கிறது. குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
குண்டேரி பள்ளம் அணை ஏற்கனவே தனது முழு கொள்ளளவான 41.75 அடியில் தொடர்ந்து ஒரு மாதமாக நீடித்து வருகிறது. இதே போல் பெரும்பள்ளம் அணையும், வரட்டுபள்ளம் அணையும் தொடர்ந்து ஒரு மாதமாக தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இதே போல் அம்மாபேட்டை பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் ஒரு மணி நேரமும், நள்ளிரவு சுமார் 1 மணியளவில் ஒரு மணி நேரமும் மழை பெய்ததில் ஆங்காங்கே ரோடுகளில் மழை நீர் தேங்கி நின்றது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை காரணமாக மழையில் சிங்கம்பேட்டை கேட்டில் ரோட்டோரத்தில் உள்ள ஒரு ராட்சத புளிய மரத்தின் கிளை உடைந்து ரோட்டில் சாய்ந்தது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி சென்று வருகின்றனர். பவானி -மேட்டூர் மெயின் ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் எப்போது வேண்டுமானாலும் மரம் முழுமையாக வாகனங்கள் மீது விழுந்து விட வாய்ப்புள்ளது. எனவே அதனை தடுக்கும் வகையில் உடனடியாக மரக்கிளைகளை அகற்றி தர அப்பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கொடிவேரி - 123, குண்டேரிபள்ளம் - 79.60, சத்தியமங்கலம் - 63, பவானிசாகர் -43.20, அம்மாபேட்டை - 27, கோபி - 13.22, நம்பியூர் - 6, தாளவாடி - 2.
- தமிழகத்தில் 2-வது இடத்துக்கு வர பா.ஜ.க. பகிரங்க முயற்சி எடுக்கிறது.
- ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டியில் கட்சி கொடியை ஏற்றி வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஐ.நா.பேரவையும், சர்வதேச சமூகமும் ஈழத்தமிழர்களின் துயரை துடைக்க முன்வர வேண்டும். முள்ளிவாய்க்கால் இன படுகொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். தமிழகத்தில்அ.தி.மு.க.வை தள்ளிவிட்டு 2-வது இடத்துக்கு வர பா.ஜ.க. பகிரங்கமாக முயற்சி எடுக்கிறது.
தமிழ்நாடு சமூகநீதிக்கான மண். இங்கு சனாதனத்துக்கு இடமில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என தொடர்ந்து தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் இல்லை. அது தேர்தலுடன் கலைந்து சிதறிவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கும் எதிரானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- இதனை அடுத்து ஆசனூர் போலீசார் மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரங்கராமை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தலமலை கொடி புறம் பிரிவு அருகே ஒருவர் சந்தேகம் படும்படி மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தார்.
திடீரென அந்த நபர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் கர்நாடகா மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கராம் (37) என்பவர் கர்நாடகவில் இருந்து மதுவை வாங்கி வந்து அனுமதி இன்றி விற்றது தெரிய வந்தது.
இதனை அடுத்து ஆசனூர் போலீசார் மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரங்கராமை தேடி வருகின்றனர்.
- ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
- ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி 59.36 சதவீதம் முடிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் , பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைவர் - நிர்வாக இயக்குநர் சிவசண்முகராஜா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைவர் - நிர்வாக இயக்குநர் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2222 வாக்கு சாவடிகள் அமைந்துள்ள 951 வாக்கு சாவடி அமைவிடங்கள் மற்றும் ஆர்.டி.ஒ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அனைத்து வேலை நாட்களிலும் டிசம்பர் 8-ந் தேதி வரை பொதுமக்களிட–மிருந்து படிவங்கள் பெறும் பணிகள் மேற்கொள்ப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த 12, 13 -ந் தேதி ஆகிய 2 நாட்களும் மற்றும் இன்று மற்றும் நாளை 27-ந் தேதி ஆகிய 4 நாட்கள் (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம் நடத்தி பொது மக்களிடமிருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணையதள முகவரியிலும் வாக்காளர் சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி 59.36 சதவீதம் முடிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், மேற்கண்ட சிறப்பு முகாம்களில் பெறப்படும் படிவங்களை முறையாக ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும்.
இப்பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க–முறை திருத்தம் - 2023 தொடர்பாக அங்கீகரிக்க–ப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வை–யாளர், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைவர் - நிர்வாக இயக்குநர் இடையன்காட்டு–வலசு ஈரோடு மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2023 பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து, அருகில் உள்ள ஒரு இல்லத்திற்கு சென்று வாக்காளர் பட்டியலில் சேர்க்க வழங்கப்பட்ட படிவத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, கலெக்டர் தலைமையில் இந்திய அரசமைப்பு குறித்த உறுதிமொழியினை அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, பயிற்சி கலெக்டர் பொன்மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.கணேஷ், ஆர்.டி.ஓ.க்கள் (ஈரோடு) சதீஷ்குமார், (கோபி) திவ்யபிரிய–தர்ஷினி, தாசில்தார் (தேர்தல்) சிவகாமி மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கார்த்திகை மாதம் பிறந்ததை யொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.
- மேலும் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 2480 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2590 ரூபாய்க்கும், சராசரி விலையாக 2580 ரூபாய்க்கும் ஏலம் போனது.
கவுந்தப்பாடி:
கார்த்திகை மாதம் பிறந்ததை யொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.
பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரு ம்பாலானோர் பஞ்சாமிர்த பிரசாதம் வாங்கிச் செல்வார்கள். இதனால் பஞ்சாமிர்த பிரசாதம் பெரு மளவில் விற்பனை செய்ய ப்படுகிறது.
பழனி கோவிலில் தயாரி க்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதத்தின் மூலப்பொரு ளான நாட்டு சக்கரை கவுந்தப்பாடி பகுதியில் இருந்து அதிகளவில் ஏற்று மதி செய்யப்பட்டு வருகிறது.
இதையொட்டி இந்த வாரம் கவுந்தப்பாடி விற்ப னைக் கூடத்தில் இருந்து ரூ.87 லட்சத்து 8 ஆயிரத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கரும்புச்சர்க்கரை (நாட்டு சர்க்கரை) ஏலம் நடை பெற்றது. ஏலத்தில் ஓ டத்துறை, மாரப்பம்பாளையம், ஆண்டி பாளையம் பொன்னாச்சி புதூர், பெரு ந்தலையூர், நல்லி கவுண்டனூர், அய்யம்பாளையம், வேலம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3649 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் 60 கிலோ மூட்டை முதல் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2600-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2620-க்கும், சராசரி விலையாக ரூ.2600-க்கும் ஏலம் போனது.
மேலும் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 2480 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2590 ரூபாய்க்கும், சராசரி விலையாக 2580 ரூபாய்க்கும் ஏலம் போனது.மொத்தம் 2900 மூட்டைகள் 2 லட்சத்து 5 ஆயிரத்து 980 கிலோ எடையுள்ள கரும்புச்சர்க்கரை ரூ.87 லட்சத்து 8 ஆயிரத்து 290-க்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தனர்.
மேலும் பழனி முருகன் கோவில் சார்பில் வரும் வாரங்களில் அதிகமான கரும்பு சர்க்கரை கொள்முதல் செய்வார்கள் எனவும் விற்பனைக் கூடத்தின் கண்காணி ப்பாளர் தெரிவித்தார்.
- ஈரோடு மாவட்டத்தில் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீட்டர். நடப்பாண்டு 1,091.04 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையிலும் நீர் இருப்பு முழு அளவில் உள்ளது.
- ரசாயன உரங்களான யூரியா – 4,732 டன், டி.ஏ.பி., – 2,321 டன், பொட்டாஷ் – 2,437 டன், காம்ப்ளக்ஸ் – 11,624 டன் இருப்பில் உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்கு னர் சின்னசாமி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீட்டர். நடப்பாண்டு 1,091.04 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையிலும் நீர் இருப்பு முழு அளவில் உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் வரை, 75,745 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்க ளும், 45,634 எக்டர் தோட்ட க்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண் விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்வதற்காக நெல் விதை, 42 டன், சிறுதானியங்கள், 16 டன், பயறு வகைகள், 17 டன், எண்ணை வித்துக்கள், 42 டன் இருப்பில் உள்ளன.
ரசாயன உரங்களான யூரியா – 4,732 டன், டி.ஏ.பி., – 2,321 டன், பொட்டாஷ் – 2,437 டன், காம்ப்ளக்ஸ் – 11,624 டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான அளவு இடு பொருட்களான விதைகள், உரங்கள் இருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. ஆனால் மழை குறைந்து தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
- தொடர்ந்து மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இன்று காலை வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டப் படியே சென்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. ஆனால் மழை குறைந்து தொடர்ந்து மேக மூட்டத்துடன் காண ப்பட்டு வருகிறது.
ஆனால் தாளவாடி மற்றும் சுற்று வட்டார வன பகுதிகளில் இரவு ேநர ங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில் சத்திய மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது.
சத்தியமங்கலம், அரசூர், அரியப்பம் பாளையம், ஒட்டக்குட்டை, புளியம் கோம்பை, பெரிய குளம், கெஞ்சனூர், பவானி சாகர், பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ராஜன் நகர் உள்பட பல்வேறு இடங்க ளில் நள்ளிரவு 1 மணிக்கு பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய இன்று காலை 6 மணி வரை மழை தூறி கொண்டே இருந்தது.
இதே போல் தாளவாடி, ஆசனூர், தலமலை, திம்பம் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்பட்டது.
தொடர்ந்து மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இன்று காலை வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டப் படியே சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேக மூட்டத்துடனேயே காண ப்பட்டது. மேலும் மொட க்குறிச்சி, 46 புதூர், நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம், கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை உள்ளிட்ட இடங்களில் இன்று அதி காலை லேசான மழை பெய்தது.
ஒரு சில இடங்களில் மழை நீர் வழிந்து ஓடியது. அதிகாலை பெய்த மழை யால் மஞ்சள், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு போதிய ஈரப்பதம் காணப்பட்டது. இதனை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் லேசான குளிர் காற்றும் வீசி வருகிறது.
இதனால் மொடக்குறிச்சி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது.
- பவானி சங்கமேஸ்வரர் கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
பவானி:
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்னால் இரட்டை விநாயகர் படித்துறை பகுதியில் காவிரி பவானி மற்றும் அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாதமாகவே கருதப்படுகிறது.
இந்த கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் பலர் மாலை அணிவித்து ஐயப்ப சுவாமிக்கு விரதத்தை தொடங்கி வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், கேரளாவில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலுக்கு செல்லும் வெளிமாநில பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் முன்பு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இதனால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது. இதனால் பவானி சங்கமேஸ்வரர் கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
- ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
- பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.77 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 852 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 600 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 2, 7 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ஈரோடு மத்திய பஸ் நிலையம் ரூ.44 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
- மார்ச் மாதம் இறுதிக்குள் விரிவாக்க பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகர் மையப்பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் 1973-ம் ஆண்டு கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த பஸ் நிலையத்தில் மினி பஸ்சுக்கு என்று தனி ரேக், ஒவ்வொரு ஊரு வாரியாக தனி ரேக் அமைக்கப்பட்டு இருந்தது. நாச்சியப்பா வீதி, சக்திரோடு, மேட்டூர் ரோடு, அகில் மேடு வீதி என 4 வழிகள் இருந்தன.
மேலும் கட்டண கழிப்பிடம், கடைகள், வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையம், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி போன்றவை இருந்தன.
இந்நிலையில் ஈரோடு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.44 கோடி மதிப்பில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
இதற்காக 100-க்கும் மேற்பட்ட பழைய கடைகள் இடித்து அகற்றப்பட்டன. விரிவாக்க பணிகளில் நவீன கழிப்பிடங்கள், நவீன ஓய்வறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது.
நாமக்கல் , சேலம் ரேக் இடிக்கப்பட்டு அங்கு புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது பணிகள் 70 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது.
மார்ச் மாதம் இறுதிக்குள் விரிவாக்க பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அப்போது ஒத்தகுதிரை பகுதியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் கோபி செட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம் மற்றும் போலீ சார் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீ சார் அந்த மளிகை கடையில் இருந்த 2.42 கிலோ எடை உள்ள 11 பாக்கெட் புகை யிலை பொருட்களை பறி முதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் (38) என்ப வரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






