என் மலர்
உள்ளூர் செய்திகள்

கர்நாடக மதுபாட்டில்களை பதுக்கி வைத்தவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்
- ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- இதனை அடுத்து ஆசனூர் போலீசார் மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரங்கராமை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஆசனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தலமலை கொடி புறம் பிரிவு அருகே ஒருவர் சந்தேகம் படும்படி மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தார்.
திடீரென அந்த நபர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் கர்நாடகா மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கராம் (37) என்பவர் கர்நாடகவில் இருந்து மதுவை வாங்கி வந்து அனுமதி இன்றி விற்றது தெரிய வந்தது.
இதனை அடுத்து ஆசனூர் போலீசார் மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரங்கராமை தேடி வருகின்றனர்.
Next Story






