என் மலர்
ஈரோடு
- நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.84 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.
இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிரு க்கிறது.
அணையில் கீழ் பவானி வாய்க்காலு க்கு 2,200 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,500 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை மீண்டும் 104 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சந்தேகப்படும் படியாக நடந்து வந்த 2 பேரை போலீசார் விசாரித்தனர்.
- போலீசார் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டை அடுத்துள்ள சின்னப்பள்ளம் சோதனை சாவடியில் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக நடந்து வந்த 2 பேரை போலீசார் விசாரித்தனர்.
விசாரித்ததில் நெரிஞ்சிப்பேட்டை படகு துறை வீதியை சேர்ந்த ரஞ்சித் (19) மற்றும் ராக்கி (24) என்பதும், பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
- டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய, விடிய பெய்த தொடர் கனமழை காரணமாக கொன்னக் கொடிகால் குடியிருப்பு பகுதியில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.
- தண்ணீர் வடியாததால் வீட்டிற்குள் மழைநீர் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி, கவுண்டம் பாளைம் கிராமம், கொன்னக்கொடி கால் என்ற பகுதியில் சுமார் 70 குடும்பங்களில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய, விடிய பெய்த தொடர் கனமழை காரணமாக கொன்னக் கொடிகால் குடியிருப்பு பகுதியில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இன்று வீட்டை விட்டு வெளியே மேடான சாலையோர பகுதிக்கு வந்தனர்.
தண்ணீர் வடியாததால் வீட்டிற்குள் மழைநீர் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மழைநீர் வெள்ளத்தால் சில ஆடுகள் இறந்து விட்டதாகவும், வீடுகளுக்குள் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், வீடுகளுக்குள் புகுந்து மழைநீர் வெள்ளத்தை வெளியேற்ற சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பவானி நகரில் மிக சிறப்பு வாய்ந்த கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
- பவானி ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடு வதால் அந்தப் பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது.
பவானி:
பவானி நகரில் மிக சிறப்பு வாய்ந்த கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
கோவில் பின் பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
தற்போது கோவிலுக்கு வெளியூர், வெளி மாநில அய்யப்ப பக்தர்கள் கூடு துறைக்கு அதிகளவு வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்வதால் கோவில் பகுதியில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இதனால் குப்பைகளும் அதிக அளவில் காணப்படு கிறது.இந்த குப்பைகளை கோவில் பணியாட்கள் அவ்வபோது சுத்தம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு- பவானி ரோடு கோவிலை யொட்டி உள்ள பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும பொதுமக்கள் சிலர் கோவில் நுழைவு வாயில் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் குவிந்து வருகிறது.
இதையடுத்து பவானி ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடு வதால் அந்தப் பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகை மூட்டத்தால் அவதி அடைந்து வருகின்ற னர்.
எனவே பவானி கூடுதுறை நுழைவு வாயில் பகுதியில் உள்ள ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குப்பைக்கு தீ வைப்ப வர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
- அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கொடிவேரி, வரட்டு பள்ளம், பவானி சாகர், ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
- கொடிவேரியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் கொடிவேரி அணையில் தொடர்ந்து 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக அம்மாபேட்டை அருகே கொண்டையம் பாளையம் தரைப்பாலம் மூழ்கி அத்தாணி-சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் கொடிவேரி அணையில் பலத்த மழை பெய்ததால் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதேபோல் கள்ளிப்பட்டி-கோபி சாலையில் உள்ள 100 ஏக்கருக்கும் மேல் வயல்வெளியில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை செய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பள்ளி குழந்தைகள் குடை பிடித்தபடி பள்ளிக்கு சென்றனர். மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் அதிகபட்சமாக 49.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கொடிவேரி, வரட்டு பள்ளம், பவானி சாகர், ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கொடிவேரியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் கொடிவேரி அணையில் தொடர்ந்து 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் கவுந்தப்பாடி, டி.என்.பாளையம், பவானி, ஆப்பக்கூடல், அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் இன்று காலை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வாழ்க்கை முடங்கி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கோபி-49.20, அம்மாபேட்டை-41.40, குண்டேரிபள்ளம்-31.40, கொடிவேரி-22, வரட்டுபள்ளம்-14, எலந்தகுட்டைமேடு-14, பவானிசாகர்-11.60, ஈரோடு-9, சத்திய மங்கலம்-6, பெருந்துறை-3.
- ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதற்காக தொடர் திருட்டு, வழிப்பறி, அடிதடி, கொலை, ரேஷன் அரிசி கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் சிறையில் அடைத்து அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர இயலாத படி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு வருகின்றனர்
- ஈரோட்டை சேர்ந்த ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்ப ட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதற்காக தொடர் திருட்டு, வழிப்பறி, அடிதடி, கொலை, ரேஷன் அரிசி கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் சிறையில் அடைத்து அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர இயலாத படி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் சப்- டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக நடப்பாண்டில் தற்போது வரை 38 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஈரோட்டை சேர்ந்த ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்ப ட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆய்வில் எண்ணெய் பலகாரங்களை பேப்பரில் வைத்து விற்பனை செய்த கடைக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- இறைச்சி கழிவுகளை உரிய முறையில் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் கொண்டு சென்று அப்புறப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறு–த்தப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை டவுன் பகுதியில் செயல்படும் இறைச்சி கடைகளில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம், சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து திடீர் என ஆய்வு செய்தனர்.
ஆய்வில் எண்ணெய் பலகாரங்களை பேப்பரில் வைத்து விற்பனை செய்த கடைக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் இறைச்சி கடைகளில் கேரி பேக்குகளுக்கு பதிலாக வாழை இலையை பயன்படுத்த வேண்டும் எனவும், இறைச்சி வாங்க வருபவர்கள் பாத்திரம் கொண்டு வந்து இறைச்சிகளை பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப–ட்டது.
இறைச்சி கழிவுகளை உரிய முறையில் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் கொண்டு சென்று அப்புறப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் உணவுப் பொருள் விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறப்பட வேண்டும் எனவும், சென்னிமலை பேரூராட்சியின் கீழ் தொழில்வரியும், உரிமமும் பெறப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் சென்னிமலை பேரூராட்சியின் நிர்வாக சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
- சிறுமிகள் குறித்து கணக்கெடுக்கும்போது 6 சிறுமிகள் மாயமானது கண்டு காப்பக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- 3 சிறுமிகள் பெருமாள் மலை பகுதியில் இருந்தபோது போலீசார் மீட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆர்.என். புதூரில் அரசு காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு கருமுட்டை எடுத்த வழக்கு சிறுமியும் இந்த காப்பகத்தில் உள்ளார்.
இங்கு தங்கி இருக்க விரும்பாத சிறுமிகள் மற்றும் கருமுட்டை வழக்கு சிறுமி உட்பட 6 பேர் காப்பக நிர்வாகி கவனிக்காத சமயத்தில் நேற்று மாலை காப்பகத்தில் இருந்து தப்பி வெளியேறினர். நேற்று மாலை காப்பகத்தில் சிறுமிகள் குறித்து கணக்கெடுக்கும்போது 6 சிறுமிகள் மாயமானது கண்டு காப்பக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காப்பக நிர்வாகி சித்தோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் 3 சிறுமிகள் பெருமாள் மலை பகுதியில் இருந்தபோது போலீசார் மீட்டனர். மற்ற மூன்று சிறுமிகள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வைத்து போலீசார் மீட்டனர். பின்னர் அந்த 6 சிறுமிகளுக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. காப்பகத்தில் இருக்க பிடிக்காமல் அந்த சிறுமிகள் வெளியேறியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
- அப்போது பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
- இந்த நிலையில் சம்பவத்தன்று சத்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் தகராறு ஏற்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள கரண்டிபாளையம், முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பழனிச்சாமி (வயது 35).
இவருக்கு திருமணமாகி சத்தியா என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். பழனிச்சாமிக்கும், சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பழனிச்சாமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டார். அப்போது பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று சத்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சத்தியா கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் சதயா மீண்டும் வீட்டுக்கு வர வில்லை.
இதனால மன வேதனை யில இருந்த பழனிச்சாமி நேற்று வீட்டின் சமையல் அறையில் தூக்கு மாட்டி கொண்டார். இதனைக் கண்ட அவரது மகன் அபிஷேக் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் பழனிச்சாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாகடர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தார்.
இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளது. மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கடந்த 1951-ம் ஆண்டு கட்டப்பட்டது.
- இதனை அடுத்து மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பழைய கட்டடம் அகற்றப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளது. மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவல கம் கடந்த 1951-ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் கட்டி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால் ஆங்காங்கே சிதிலமடைந்து காண ப்பட்டது. மழை காலத்தில் மழை நீர் கட்டிடத்திற்குள் கொட்டியது. மேலும் கட்டிடத்தின் மேல் பகுதியில் உள்ள கான்கிரீட் ஒரு சில இடங்களில் உடைந்து கீழே விழுந்தது.
இதனால் இக்கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 7 லட்சம் ஒதுக்க ப்பட்டது. இதையொட்டி மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தை தற்காலிகமாக மொடக்குறிச்சி சந்தை பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய த்துக்கு ட்பட்ட கட்டிடத்தில் தற்காலி கமாக செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மொடக்குறிச்சி ஊரா ட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக சந்தை ப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பழைய கட்டடம் அகற்றப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்க ப்பட்டது.
இந்த புதிய கட்டிடத்தில் ஒன்றியக்குழு தலைவர் அறை, வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலகர் அறை, 150 பேர் அமரக்கூடிய அளவிலான கூட்டரங்கம், பொறியாளர்கள் அறை, கணக்குத் தணிக்கை பிரிவு அறைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கான கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டு மான பணிகள் இன்னும் 4 மாதத்திற்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- அப்போது மோகன் ராஜுக்கு சோர்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார்
- இது குறித்து கோபி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், நம்பியூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). என்ஜினீயரிங் பட்ட தாரியான மோகன்ராஜ் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
மோகன்ராஜும், அவரது நண்பர் ஜெயபிரகாசும் கோபிசெட்டிபாளையம் நாயக்கன் காட்டில் உள்ள அவர்களது நண்பரான பிரசாந்த் என்பவரின் சோப் ஆயில் கம்பெனிக்கு சென்ற னர். அப்போது மோகன் ராஜுக்கு சோர்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
இதையடுத்து அவர் அங்குள்ள அறையில் சிறிது நேரம் படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவரை நண்பர்கள் எழுப்பிய போது மோகன்ராஜீ எழ வில்லை. இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்த னர்.
இதையடுத்து உடனடி யாக அவரை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.
இது குறித்து கோபி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
- புஞ்சைதுறையம்பாளையம், கொண்டையம்பாயைம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்களாபுதூர் வழியாக சுமார் 5 கி.மீட்டர் தூரம் சுற்றி கோபியில் உள்ள பள்ளிக்கு சென்றனர்.
- அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வாகனங்கள் கள்ளிப்பட்டி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதேபோல் டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான பெரிய கொடிவேரி, டி.ஜி.புதூர் நால்ரோடு, வாணிப்புத்தூர், கொங்கர்பாளையம், டி.என்.பாளையம், பங்களாப்புதூர், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை, அத்தாணி பகுதிகளிலும் நள்ளிரவு 2.30 மணி முதல் இன்று காலை வரை கனமழை விட்டு விட்டு பெய்தது.
இதில் அத்தாணி- சத்தியமங்கலம் சாலையில் கொண்டையம்பாளையம் ஊராட்சி சந்தை கடையருகில் உள்ள ஜக்கான் காட்டு பள்ளத்தின் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
ஜக்கான் காட்டு பள்ளத்திற்கு எக்கரை, நெல்லிக்காய் திட்டு, எடைகாந்தி உள்ளிட்ட சிற்றோடைகளில் இருந்தும் வேதபாறை பள்ளத்தின் ஒரு பகுதியின் வழியாக வரும் வனப்பகுதியில் பெய்த மழை நீரும் இந்த பள்ளத்திற்கு வருகிறது. இதனால் அத்தாணி- சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் புஞ்சைதுறையம்பாளையம், கொண்டையம்பாயைம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்களாபுதூர் வழியாக சுமார் 5 கி.மீட்டர் தூரம் சுற்றி கோபியில் உள்ள பள்ளிக்கு சென்றனர். அதேபோல் அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வாகனங்கள் கள்ளிப்பட்டி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கள்ளிப்பட்டி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளம் இந்த விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியது. நடவு பணிகள் செய்து சில நாட்களே ஆன நிலையில் கள்ளிப்பட்டி மற்றும் கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.






