பவானிசாகர் அணைக்கு 4,722 கனஅடியாக நீர் வரத்து அதிகரிப்பு

நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.84 அடியாக உள்ளது.
பவானிசாகர் அணைக்கு 4,722 கனஅடியாக நீர் வரத்து அதிகரிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 722 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிரு க்கிறது.

அணையில் கீழ் பவானி வாய்க்காலு க்கு 2,200 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,500 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை மீண்டும் 104 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com