என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட"

    • ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதற்காக தொடர் திருட்டு, வழிப்பறி, அடிதடி, கொலை, ரேஷன் அரிசி கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் சிறையில் அடைத்து அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர இயலாத படி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு வருகின்றனர்
    • ஈரோட்டை சேர்ந்த ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்ப ட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதற்காக தொடர் திருட்டு, வழிப்பறி, அடிதடி, கொலை, ரேஷன் அரிசி கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் சிறையில் அடைத்து அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர இயலாத படி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் சப்- டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக நடப்பாண்டில் தற்போது வரை 38 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் ஈரோட்டை சேர்ந்த ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்ப ட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×