மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

அப்போது பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் சம்பவத்தன்று சத்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் தகராறு ஏற்பட்டது.
மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
Published on

பெருந்துறை:

பெருந்துறை அடுத்துள்ள கரண்டிபாளையம், முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பழனிச்சாமி (வயது 35).

இவருக்கு திருமணமாகி சத்தியா என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். பழனிச்சாமிக்கும், சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பழனிச்சாமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டார். அப்போது பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் சம்பவ த்தன்று சத்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சத்தியா கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் சதயா மீண்டும் வீட்டுக்கு வர வில்லை.

இதனால மன வேதனை யில இருந்த பழனிச்சாமி நேற்று வீட்டின் சமையல் அறையில் தூக்கு மாட்டி கொண்டார். இதனைக் கண்ட அவரது மகன் அபிஷேக் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் பழனிச்சாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாகடர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தார்.

இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com