என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமான பணி தீவிரம்"

    • மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளது. மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கடந்த 1951-ம் ஆண்டு கட்டப்பட்டது.
    • இதனை அடுத்து மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பழைய கட்டடம் அகற்றப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளது. மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவல கம் கடந்த 1951-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    இந்த கட்டிடம் கட்டி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால் ஆங்காங்கே சிதிலமடைந்து காண ப்பட்டது. மழை காலத்தில் மழை நீர் கட்டிடத்திற்குள் கொட்டியது. மேலும் கட்டிடத்தின் மேல் பகுதியில் உள்ள கான்கிரீட் ஒரு சில இடங்களில் உடைந்து கீழே விழுந்தது.

    இதனால் இக்கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 7 லட்சம் ஒதுக்க ப்பட்டது. இதையொட்டி மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தை தற்காலிகமாக மொடக்குறிச்சி சந்தை பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய த்துக்கு ட்பட்ட கட்டிடத்தில் தற்காலி கமாக செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மொடக்குறிச்சி ஊரா ட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக சந்தை ப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    இதனை அடுத்து மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பழைய கட்டடம் அகற்றப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்க ப்பட்டது.

    இந்த புதிய கட்டிடத்தில் ஒன்றியக்குழு தலைவர் அறை, வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலகர் அறை, 150 பேர் அமரக்கூடிய அளவிலான கூட்டரங்கம், பொறியாளர்கள் அறை, கணக்குத் தணிக்கை பிரிவு அறைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    இதற்கான கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டு மான பணிகள் இன்னும் 4 மாதத்திற்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×