என் மலர்tooltip icon

    ஈரோடு

    • நடேசன் வருமானத்துக்கு அதிகமாக அவரது பெயரிலும், அவரது மனைவி மல்லிகா பெயரிலும் சொத்து சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • தீர்ப்பை தொடர்ந்து நடேசன், மல்லிகாவை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மின்சார வாரியத்தில் முதன்மை பொறியாளராக 1996-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை பணியாற்றி யவர் நடேசன் (67).

    இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் கடந்த 2008-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.

    இதில் நடேசன் வருமானத்துக்கு அதிகமாக அவரது பெயரிலும், தனியார் கல்லூரி பேராசிரி யரான அவரது மனைவி மல்லிகா (65) பெயரிலும் ரூ.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடேசன் மீதும், உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை ஈரோடு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணன் முன்னி லையில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார்.

    அதில் அரசு பணியை தவறாக பயன்படுத்தி சொத்து சேர்த்த நடேசன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் வீதம் ரூ.1 கோடி அபராதமும் விதித்தார்.

    அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக இருவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்பை தொடர்ந்து நடேசன், மல்லிகாவை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய யார்டு பகுதியில் தண்டவாளம் இணைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • 25 ரெயில்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ஈரோடு:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய யார்டு பகுதியில் தண்டவாளம் இணைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதையொட்டி சேலம் வழியாக இயக்கப்படும் 25 ரெயில்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி இன்று முதல் வரும் டிசம்பர் மாதம் 2-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஈரோட்டில் இருந்து மேட்டூர் டேம் செல்லும் ரெயில் (06407), மேட்டூர் டேமில் இருந்து ஈரோடு வரும் ரெயில் (06408), ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் ரெயில் (06412), ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரும் ெரயில் (06845), ஜோலார்பேட்டை-ஈரோடு செல்லும் விரைவு ெரயில் (06411) ஆகிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    • சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 7 ஆயிரத்து 699 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 173 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 16 ஆயிரத்து 167 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 1 காசுக்கும், அதிகபட்ச விலையாக 32 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலையாக 28 ரூபாய் 41 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 7 ஆயிரத்து 699 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 173 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    • மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்தது.
    • இன்று முதல் வழக்கம் போல் கொடி வேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    கோபி:

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை, கரூர் மற்றும் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்கிறார்கள்.

    இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் கோபி செட்டிபாளை யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இதையொட்டி பவானி ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. மேலும் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு சென்றது.

    இதனால் கடந்த 2 நாட்களாக கொவேரி தடுப்பணையில் குளிப்ப தற்கும், ரசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அணைக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்தது. அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கொடிவேரி தடுப்பணையிலும் தண்ணீர் குறைந்தது. இதனால் 2 நாட்களுக்கு பிறகு இன்று முதல் வழக்கம் போல் கொடி வேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி இன்று காலை குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் தியாகி ஈஸ்வரனுக்கு சிலை, அரங்கம் அமைக்க ரூ.2.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    கொங்கு மண்டலத்தில் 2 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் கீழ்பவானி நீர் பாசன திட்டம் கொண்டு வர ஈரோடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி ஈஸ்வரன் முக்கிய காரணம் ஆவார்.

    அவருக்கு ஈரோடு மாவட்டத்தில் சிலை, அரங்கம் அமைக்க ரூ.2.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அரங்குடன் சிலை அமைக்க ஏதுவாக இடம் தேர்வு செய்து அவ்விடத்தை தணிக்கை செய்து அறிக்கை அனுப்பவும், முன்னதாக அவரது குடும்பத்தார், சமுதாய அமைப்பினர் ஒப்புதல் பெற்று மாதிரி புகைப்படம் அல்லது ஓவியத்தை பரிந்துரையுடன் அனுப்பவும், அரங்கம் சிலைக்கான திட்ட மதிப்பீடு, 5 மாதிரி வரைபடங்கள் அனுப்பவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    அரசு கோரிய அனைத்து ஆவணங்களும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே முடுக்கன்துறை கிராமத்தில் ஈஸ்வரன் உருவச் சிலையும், அரங்க மும் அமைக்க நிர்வாக அனுமதி அளித்து அர சாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுப் பணி விரைவில் நடக்க உள்ளது.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.
    • தற்போது மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்ப ட்டதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டு ள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.

    கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 646 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர் களில் மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.
    • இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக பவானிசாகர், தாளவாடி, சத்தியமங்கலம், அணைப்பகுதிகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    இந்நிலையில் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

    இதேப்போல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவில் உள்ளது. இதேபோல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டமும் தனது முழு கொள்ளளவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.

    தற்போது இந்த அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற தர்ஷன் ஸ்ரீ மாலையில் வீடு திரும்பவில்லை.
    • விசாரித்ததில் தர்ஷன் ஸ்ரீயும், அவருடன் படிக்கும் மகிழனும் ஒன்றாக சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (40). இவரது மகன் தர்ஷன் ஸ்ரீ (16). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற தர்ஷன் ஸ்ரீ மாலை யில் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து பள்ளியில் சென்று விசாரித்ததில் தர்ஷன் ஸ்ரீயும், அவருடன் படிக்கும் கே.என்.பாளையம் அம்மன் நகரை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் மகிழனும் (16) ஒன்றாக சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களது பெற்றோர், நண்பர்கள், உறவினர்களது வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து தர்ஷன் ஸ்ரீன் தந்தை ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவர்கள் தர்ஷன் ஸ்ரீ, மகிழன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • சுரேஷ் கிணற்றில் தவறி விழுந்திரு க்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி தேடியதில் சுரேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள போதபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். சுரேஷுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது நண்பர் சதீசுடன் சேர்ந்து அவரது தோட்டத்தில் சுரேஷ் மது அருந்தியுள்ளார். போதையில் சதீஷ் தூங்கி விட்டார். இரவு 8 மணியளவில் சதீஷ் தூங்கி எழுந்து பார்த்தபோது சுரேசை காணவில்லை.

    பின்னர் தோட்டம் முழுவதும் தேடி பார்த்தும் சுரேஷ் கிடைக்கவில்லை. ஒருவேளை சுரேஷ் கிணற்றில் தவறி விழுந்திரு க்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி தேடியதில் சுரேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வு அறை, வார விடுமுறை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் 132 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள், தூய்மை, காவல், நோயாளிகளை அழைத்து செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதத்துக்கு ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால் ஒப்பந்த நிறுவனமோ நாள் ஒன்றுக்கு ரூ.280 வீதம் மாதத்துக்கு ரூ.8 ஆயிரத்து 400 மட்டுமே வழங்கி வருகிறது.

    எனவே அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வு அறை, வார விடுமுறை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில், அறிவித்தபடி ஊதியத்தை முழுமையாக வழங்க கோரி ஒப்பந்த ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இரவில் விடிய விடிய பனியை பொருட்படுத்தாமல் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

    இன்று 2-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து பணியை புறக்கணித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒப்பந்த ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை அரசு மருத்துவமனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை எந்த நேரத்திலும் 105 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • பவானி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து 105 அடியை நெருங்கி வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 509 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை எந்த நேரத்திலும் 105 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பவானி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் உஷார் படுத்தப்பட்டு அணை நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
    • தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக அம்மாபேட்டை அருகே கொண்டையம் பாளையம் தரைப்பாலம் மூழ்கி அத்தாணி-சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் கொடிவேரி அணையில் பலத்த மழை பெய்ததால் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    இதேபோல் கள்ளிப்பட்டி-கோபி சாலையில் உள்ள 100 ஏக்கருக்கும் மேல் வயல்வெளியில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை செய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை பள்ளி கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    பள்ளி குழந்தைகள் குடை பிடித்தபடி பள்ளிக்கு சென்றனர். மாவட்டத்தில் கோபிசெட்டி பாளையத்தில் அதிகபட்சமாக 49.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கொடிவேரி, வரட்டு பள்ளம், பவானி சாகர், ஈரோடு, சத்திய மங்கலம் போன்ற பகுதிகளி லும் பலத்த மழை பெய்தது. கொடிவேரியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் கொடிவேரி அணையில் தொடர்ந்து 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் கவுந்தப்பாடி, டி.என்.பாளையம், பவானி, ஆப்பக்கூடல், அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் இன்று காலை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வாழ்க்கை முடங்கி உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    கோபி-49.20, அம்மாபேட்டை-41.40, குண்டேரி பள்ளம்-31.40, கொடிவேரி-22, வரட்டுபள்ளம்-14, எலந்தகுட்டைமேடு-14, பவானிசாகர்-11.60, ஈரோடு-9, சத்திய மங்கலம்-6, பெருந்துறை-3.

    ×