என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Allocation of Rs.2.60 crores for"

    • ஈரோடு மாவட்டத்தில் தியாகி ஈஸ்வரனுக்கு சிலை, அரங்கம் அமைக்க ரூ.2.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    கொங்கு மண்டலத்தில் 2 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் கீழ்பவானி நீர் பாசன திட்டம் கொண்டு வர ஈரோடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி ஈஸ்வரன் முக்கிய காரணம் ஆவார்.

    அவருக்கு ஈரோடு மாவட்டத்தில் சிலை, அரங்கம் அமைக்க ரூ.2.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அரங்குடன் சிலை அமைக்க ஏதுவாக இடம் தேர்வு செய்து அவ்விடத்தை தணிக்கை செய்து அறிக்கை அனுப்பவும், முன்னதாக அவரது குடும்பத்தார், சமுதாய அமைப்பினர் ஒப்புதல் பெற்று மாதிரி புகைப்படம் அல்லது ஓவியத்தை பரிந்துரையுடன் அனுப்பவும், அரங்கம் சிலைக்கான திட்ட மதிப்பீடு, 5 மாதிரி வரைபடங்கள் அனுப்பவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    அரசு கோரிய அனைத்து ஆவணங்களும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே முடுக்கன்துறை கிராமத்தில் ஈஸ்வரன் உருவச் சிலையும், அரங்க மும் அமைக்க நிர்வாக அனுமதி அளித்து அர சாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுப் பணி விரைவில் நடக்க உள்ளது.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    ×