search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar with Voter ID Card"

    • ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
    • ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி 59.36 சதவீதம் முடிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் , பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைவர் - நிர்வாக இயக்குநர் சிவசண்முகராஜா தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைவர் - நிர்வாக இயக்குநர் பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2222 வாக்கு சாவடிகள் அமைந்துள்ள 951 வாக்கு சாவடி அமைவிடங்கள் மற்றும் ஆர்.டி.ஒ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அனைத்து வேலை நாட்களிலும் டிசம்பர் 8-ந் தேதி வரை பொதுமக்களிட–மிருந்து படிவங்கள் பெறும் பணிகள் மேற்கொள்ப்பட்டு வருகிறது.

    மேலும் கடந்த 12, 13 -ந் தேதி ஆகிய 2 நாட்களும் மற்றும் இன்று மற்றும் நாளை 27-ந் தேதி ஆகிய 4 நாட்கள் (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம் நடத்தி பொது மக்களிடமிருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணையதள முகவரியிலும் வாக்காளர் சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும், ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி 59.36 சதவீதம் முடிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், மேற்கண்ட சிறப்பு முகாம்களில் பெறப்படும் படிவங்களை முறையாக ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும்.

    இப்பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க–முறை திருத்தம் - 2023 தொடர்பாக அங்கீகரிக்க–ப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

    முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வை–யாளர், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைவர் - நிர்வாக இயக்குநர் இடையன்காட்டு–வலசு ஈரோடு மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2023 பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து, அருகில் உள்ள ஒரு இல்லத்திற்கு சென்று வாக்காளர் பட்டியலில் சேர்க்க வழங்கப்பட்ட படிவத்தை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக, கலெக்டர் தலைமையில் இந்திய அரசமைப்பு குறித்த உறுதிமொழியினை அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, பயிற்சி கலெக்டர் பொன்மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.கணேஷ், ஆர்.டி.ஓ.க்கள் (ஈரோடு) சதீஷ்குமார், (கோபி) திவ்யபிரிய–தர்ஷினி, தாசில்தார் (தேர்தல்) சிவகாமி மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×