என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட முதியவர்
    X

    தொடர் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட முதியவர்

    • முதியவர் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த னர்.
    • சைக்கிள் திருட்டுப் போனதற்கு போலீஸ் நிலையத்தில் யாரும் புகார் செய்யவில்லை.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (45). சலூன் தொழிலாளி இவர் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் பஸ் நிலையம் பகுதியில் தனது சைக்கிளை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோபால் வழக்கம் போல் அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இரவு தனது சைக்கிள் நிறுத்தினார். காலையில் எழுந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த சைக்கிளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அக்கம்பக்கம் தேடி பார்த்து விசாரித்தார். அப்போது அதிகாலை 5 மணி அளவில் முதியவர் ஒருவர் சைக்கிளை தள்ளி சென்றதாக அங்கு இருந்த வர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஏற்கனவே கடந்த 12 நாட்களுக்கு முன்பு கோபால் தவிட்டுப்பாளையத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு கோவிலுக்கு சென்றார்.

    அப்போது அவர் வெளியில் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த சைக்கிளை காணவில்லை. அப்போது ஒரு முதியவர் சைக்கிளை எடுத்து சென்று கொண்டி ருந்த போது அவரை பிடித்து சைக்கிளை மீட்டார்.

    இதனால் அவர் தான் சைக்கிளை எடுத்திருப்பார் என எண்ணினார். இதை யடுத்து அவர் அந்த முதியவரை பிடித்து எனது சைக்கிள் எங்கே? என்று கேட்டுள்ளார்.

    அந்த முதியவர் கோபாலை கண்டு திடுக்கிட்டு இந்த சைக்கிளும் உங்களுடையது தானா எனக்கு தெரியவில்லை என்று கூறி அதை தவிட்டு ப்பாளையம் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் எடைக்கு போட்டு விட்டேன். அதை விற்ற பணத்தில் மது வாங்கி குடித்து விட்டதாக தெரி வித்தார்.

    இதையடுத்து உடனடியாக கோபால் அந்த பழைய இரும்பு கடைக்கு சென்று பணம் கொடுத்து மீண்டும் அந்த சைக்கிளை மீட்டு வந்துள்ளார்.

    இதேபோல் அந்தியூர் பவானி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியின் அருகே நிறுத்தி வைத்திருந்த மாணவர்களின் 2 சைக்கிள்களை யும் அந்த முதியவர் திருடி சென்றது சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. அப்போது அவரை மன்னித்து சைக்கிளை மீட்டு அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.

    இதே போல் அந்தியூர் பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் திருட்டு போனதாகவும் அதில் 5 சைக்கிள்கள் மட்டும் திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் மற்ற சைக்கிள்கள் பழைய இரும்பு கடைகளில் விற்று மது அருந்தி வந்தாகவும் அந்த முதியவர் கூறினார்.

    ஆனால் சைக்கிள் திருட்டுப் போனதற்கு போலீஸ் நிலையத்தில் யாரும் புகார் செய்யவில்லை. இதை பயன்படுத்தி அந்த முதியவர் தொடர்ந்து சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த னர்.

    Next Story
    ×