என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.
    • வரும் 30-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. பிப்ரவரி 27-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பு மனுதாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வும் களம் இறங்கி உள்ளது. தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் கூட்டணி கட்சியான த.மா.கா.வும் கலந்து கொண்டது.

    காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மதியம் 2.30 வரை நடைபெற்றது. பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 6.30 மணி வரை சுமார் 8 மணி நேரம் நடந்தது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு குறித்தும், சின்னம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் முதலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் தேர்தல் பணி குழுவில் இடம் பெற்றுள்ளதால் வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகியுள்ளது.

    தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

    அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள கட்சியின் அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    ஈரோட்டில் பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 111 பேர் கொண்ட தேர்தல் பணி குழு மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு அ.தி.முக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு மற்றும் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் ஒவ்வொரு வார்டாக வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் முன்னிலையில் கள நிலவரம் குறித்தும், வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சின்னம் தொடர்பான தீர்ப்புக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கு பாடுபடுவோம் என்பதே எங்களது இலக்கு. எனவே வரும் 30-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது.
    • தே.மு.தி.க. வேட்பாளராக மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் அறிவிக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளராக மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் அறிவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் தி.மு.க.வுக்கு தாவப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ஆனந்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே 2005-ம் ஆண்டு முதல் நான் தே.மு.தி.க.வில் இணைந்து பணியாற்றி வருகிறேன். கட்சியின் கிளை செயலாளர் பொறுப்பில் இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளேன்.

    கட்சி தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் என் மீது முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்துள்ளனர். பெரிய பெரிய கட்சிகளே வேட்பாளரை அறிவிக்க தயக்கம் காட்டும் நிலையில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து என்னை வேட்பாளராக அறிவித்து உள்ளனர்.

    நானும் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டேன். இந்த நிலையில் எனது பெயரை கெடுக்க மாற்று கட்சிக்கு செல்வதாக கூறுவது வதந்தி. இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்களுக்கு அதை பற்றி எதுவும் கவலையில்லை.
    • நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டோம்.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஈரோடு திருநகர் காலனியில் நேற்று நடைபெற்றது. விழாவில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி கட்சிகளை எந்த நிலையிலும், எந்த இடத்திலும் தலைவர் மு.க.ஸ்டாலினை விட்டு கொடுத்தது கிடையாது. கூட்டணி கட்சிகள் தி.மு.க.வின் முழு ஒத்துழைப்போடு பணியாற்றி வருகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவதற்கு பணியாற்ற கூட்டணி கட்சிகள் உறுதி அளித்து உள்ளார்கள். இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றியடையும் என முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    அ.தி.மு.க. ரகசிய கூட்டம் ஈரோட்டில் நடந்து வருகிறது. ஏனென்றால் அவர்களால் வெளிப்படையாக கூட்டம் போட முடியவில்லை. இருந்தாலும் வெளியில் வந்து தானே ஆக வேண்டும். கத்தரி முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும். ரகசிய கூட்டம் போட்டுவிட்டு எங்களிடம் வரட்டுமே. நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டோம். எங்களுக்கு அதை பற்றி எதுவும் கவலையில்லை.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

    • மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்தார்.

    அதே போல் ஓ.பி.எஸ்.சும் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்து உள்ளார். இதையடுத்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதைதொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவில் 106 நிர்வாகிகளை நியமித்து அதிமுக அறிவித்தது.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் நாளை ஆலோசிக்க உள்ளார்.

    • ஈரோடு அரசு மருத்துவமனை டி.பி.ஹாலில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான நேர்காணல் நடக்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவமனை டி.பி.ஹாலில் வரும் 28-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான நேர்காணல் நடக்க உள்ளது.

    மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி.,  பி.எஸ்.சி., விலங்கியல், உயிரியல், தாவரவியல், பயோகெமிஸ்டரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி படித்திருக்கலாம். இவர்களுக்கு மாதம் 15,435 ரூபாய் ஊதியம்.

    இதில் 19 முதல் 30 வயதினர் பங்கேற்கலாம். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான நேர்காணல் நடக்கும்.

    ஓட்டுனர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 24 முதல் 35 வயதினர் இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் அனுபவம் பேட்ஜ் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

    இவர்களுக்கு 15,235 ரூபாய் ஊதியம். எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனித வள துறை நேர்காணல், கண் பார்வை, வாகனம் ஓட்டி தேர்வு நடத்தப்படும்.

    கூடுதல் விபரம் அறிய 73388 94971, 73977 24829, 73977 24813 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஈரோட்டில் சில விசைத்தறி உரிமையா ளர்கள் தவிர பலரும் 4 மாதமாக மின் கட்டணம் செலுத்தி வருகிறோம்.
    • மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறிகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மின் பகிர்மான வட்ட தலைமை பொறியாளர் இந்திராணியை தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் சந்தித்து மனு வழங்கினர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:

    தமிழக அரசு விசைத்த றிக்கான மின் கட்டணத்தை கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தியது. உயர்த்திய கட்டணத்தை குறைக்க ஒழுங்கு முறை ஆணையம் மின் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.

    விசைத்தறிக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 1.40 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்து அதையே செயல்படுத்தினர். பல முறை மின் துறை அமைச்சரை சந்தித்தபோது,

    'மின் கட்டண உயர்வை ரத்து செய்ய முடியாது. முடிந்தால் குறைக்கிறோம்' என வாய்மொழி உத்தர வாதம் கொடுத்தார். ஆனாலும் குறைக்கப்பட வில்லை.

    இதனால் அன்று முதல் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என அறிவித்தோம். எப்போது மின் கட்டணம் குறைகிறதோ அன்று கட்டணத்தை செலுத்துவோம் என்றோம்.

    மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறிகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதன்படி பல்லடம், சோமனூர், திருச்செங்கோடு பகுதியில் விசைத்தறியா ளர்கள் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். அங்கு மின் துறை சார்பில் நடவடிக்கை இல்லை.

    ஆனால் ஈரோட்டில் சில விசைத்தறி உரிமையா ளர்கள் தவிர பலரும் 4 மாதமாக மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். இந்நிலையில் மின் கட்டண த்தை யாரும் செலுத்த வேண்டாம் என கூட்ட மைப்பு சார்பில் முடிவு செய்துள்ளோம்.

    எனவே மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறி உரிமையாளர்கள் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. இது தொடர்பாக மின் துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • தொடர்ந்து காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ. சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்ற 74 -வது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து காவல் துறை, மருத்துவம், வேளாண்மை, பள்ளிக்கல்வி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகளில் சாதனை புரிந்த 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

    இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வழக்கமாக குடியரசு தின விழாவில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

    ஆனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    குடியரசு தின விழாவையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டு சிலை, மணிக்கூண்டு, பஸ் நிலைய,ம் ஸ்வஸ்திகார்னர், ஜி.எச். ரவுண்டானா, ரெயில் நிலையம் போன்றவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் கோபி, பவானி, அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திலும் பயணிகள் உடமை தீவிர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

    • சர்மிளா வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • இந்த சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர், நேதாஜி வீதியை சேர்ந்தவர் சர்மிளா (42). இவரது கணவர் மோகன்தாஸ். கடந்த 20.12.2022 அன்று மாரடைப்பால் இறந்தார்.

    இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர், சர்மிளா சேலை மடிக்கும் கூலி வேலை செய்து வந்துள்ளார். சர்மிளா, கணவர் இறந்த சோகத்தில் சரிவர யாரிடமும் பேசாமல் மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் அருகில் இருந்த பெண் ஒருவர் சர்மிளாவை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது சர்மிளா வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனே அந்த பெண் சத்தம் போட்டதில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சர்மிளாவை காரில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சர்மிளா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    போலீசாரின் விசாரணையில் கணவர் இறந்த சோகத்தில் சர்மிளா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று நந்தகுமார் திடீரென விஷம் குடித்துள்ளார்.
    • இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் சர்க்கார் குள்ளம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (32). இவருக்கும் சத்தியமங்கலத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.

    இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நந்தகுமார் கோவையில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார்.

    பின்னர் கடந்த 18-ந் தேதி சத்தியமங்கலம் அடுத்த புத்தாண்டியூர் அய்யன் சாலையில் உள்ள பால்காரர் தோட்டத்தில் நந்தகுமார் தனது மனைவி சங்கீதாவுடன் குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நந்தகுமார் திடீரென விஷம் குடித்துள்ளார். இதுகுறித்து மனைவியிடம் நந்தகுமார் கூறியுள்ளார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா அக்கம் பக்கத்தினர் உதவி உடன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து கணவரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நந்தகுமாரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நந்தகுமார் இறந்தார்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவளக்கொடி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது பாம்பு ஒன்று அவரது கையை கடித்து விட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த விராலிமெடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பவளக்கொடி (52). இவர்களுக்கு ராதா என்ற மகள் உள்ளார்.

    ராதாவுக்கு திருமணமாகி அதே பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். சுப்பிரமணி- பவளக்கொடி இருவரும் விவசாய கூலி தொழிலாளிகள்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவளக்கொடி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரது கையை கடித்து விட்டது.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கவுந்தப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக பவளக்கொடியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பவளக்கொடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பயிர் அறுவடை மகசூலை கணக்கீடு செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.
    • மாநில அளவில் அதிக மகசூல் பெரும் முதல் 3 விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு பரிசு வழங்கப்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு வேளாண்மை-உழவர்நலத்துறை சார்பாக பாரம்பரிய மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியினை நடத்தி வருகிறது.

    இப்போட்டியில் பங்கு பெற பெருந்துறை வட்டாரம் பெத்தாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி உதயகுமார் என்பவர் இயற்கை முறையில் தங்க சம்பா என்னும் பாரம்பரிய ரக சாகுபடி செய்திருந்ததால், அவர் போட்டியில் பங்கு கொள்ள வேளாண்மை த்துறை பெருந்துறை வட்டார அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

    அதனைத்தொடர்ந்து பயிர் அறுவடை மகசூலை கணக்கீடு செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்த பயிர் விளைச்சல் போட்டி திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மாரியப்பன், ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஆசைத்தம்பி, விதை சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் மோகனசுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி மற்றும் முன்னோடி விவசாயி விவேகானந்தன், பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    அறுவடையின்போது சராசரி பயிர் எண்ணிக்கை, ஒரு சதுர மீட்டரில் உள்ள பயிர் குத்துக்கள், ஒரு கதிரில் உள்ள நெல் மணிகளின் எண்ணிக்கை 1000 நெல் மணிகளின் எடை ஆகிய கணக்கீடுகள் செய்யப்பட்டன.

    மாநில அளவில் அதிக மகசூல் பெரும் முதல் 3 விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு பரிசு வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் சசிகலா, துணை வேளாண்மை அலுவலர் அருள்மொழிவர்மன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் நேற்று வெளியான படம் 'பதான்'.
    • இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

     

    பதான்

    பதான்

    இப்படத்தில் இடம்பெற்ற 'அழையா மழை' பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்தன. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.


    பதான்

    பதான்

    இந்நிலையில் பதான் படம் வெளியான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    ×