என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் தற்கொலை
    X

    கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் தற்கொலை

    • சர்மிளா வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • இந்த சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர், நேதாஜி வீதியை சேர்ந்தவர் சர்மிளா (42). இவரது கணவர் மோகன்தாஸ். கடந்த 20.12.2022 அன்று மாரடைப்பால் இறந்தார்.

    இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர், சர்மிளா சேலை மடிக்கும் கூலி வேலை செய்து வந்துள்ளார். சர்மிளா, கணவர் இறந்த சோகத்தில் சரிவர யாரிடமும் பேசாமல் மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் அருகில் இருந்த பெண் ஒருவர் சர்மிளாவை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது சர்மிளா வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனே அந்த பெண் சத்தம் போட்டதில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சர்மிளாவை காரில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சர்மிளா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    போலீசாரின் விசாரணையில் கணவர் இறந்த சோகத்தில் சர்மிளா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×