என் மலர்
ஈரோடு
- வேன் எதிர்பாராத விதமாக வேலுசாமி வந்த மொபட் மீது மோதியது.
- கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த வர் வேலுசாமி (வயது 56). இவர் திருமண புரோக்கராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் வேலு சாமி கோபிசெட்டிபாளை யம்- சத்தியமங்கலம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். தொடர்ந்து அவர் லக்கம் பட்டி பிரிவு அருகே சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக வேலுசாமி வந்த மொபட் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலுசாமி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் வாகன சோதனை மேற்கொண்டனா்.
- 207 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகரில் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் வாகன சோதனை மேற்கொண்டனா்.
இதில் மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 133 வழக்கு, மதுபோதையில் வாகனம் இயக்கியதாக 8 வழக்கு, செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக 4 வழக்கு என பல்வேறு பிரிவுகளின் கீழ் 207 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.56 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
இதில் மதுபோதையில் வாகன ஓட்டிய மற்றும் செல்போன் பேசியபடி சென்ற 4 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தெற்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக கடந்த மாதம் போக்குவரத்து போலீசார் பல்வேறு பணிக்கு சென்று விட்டதால் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் குறைந்துள்ளது.
வரும் நாட்களில் போக்குவரத்து விதிமுறை மீறல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
- சோமசுந்தரத்துக்கு கடந்த ஒரு வாரமாக சளி பிரச்சனை இருந்து வந்துள்ளது.
- திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த சிறுவலூர் அருகே கொளப்பலூர் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (55). இவரது மனைவி துளசி மணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சோமசுந்தரம் கெட்டிசெவியூர் ஒட்டன் புதூரில் உள்ள ஒரு கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் சோமசுந்தரம் வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது அறையில் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி உள்ளார். சோமசுந்தரத்துக்கு கடந்த ஒரு வாரமாக சளி பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்நிலையில் திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார்.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அபிஷேக் வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே மயங்கி கிடந்தார்.
- சிகிச்சை பிரிவில் இருந்த அபிஷேக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சூசையபுரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி விஜயா. இவர்களின் ஒரே மகன் அபிஷேக் (23).
லாரன்ஸ் மோட்டார் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அபிஷேக் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு தந்தைக்கு உதவியாக மோட்டார் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அபிஷேக்குக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனை தந்ைத லாரன்ஸ் கண்டித்து உள்ளார். சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு அபிஷேக் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்த லாரன்ஸ் இப்படி மது அருந்தி வந்தால் உனக்கு எப்படி பெண் பார்ப்பது.
யார் உனக்கு பெண் கொடுப்பார்கள் என்று திட்டி உள்ளார். இதனால் அபிஷேக் கோபத்துடன் வீட்டை விட்டு பின்புறம் சென்று நின்று கொண்டி ருந்தார்.
சிறிது நேரம் கழித்து மகன் வீட்டுக்குள் வந்து விடுவார் என லாரன்ஸ் மற்றும் விஜயா வீட்டுக்குள் சென்று விட்டனர்.
ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் மகன் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த லாரன்ஸ் வீட்டு பின்புறம் சென்று பார்த்தார்.
அப்போது அபிஷேக் வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே மயங்கி கிடந்தார். அவரது அருகே விஷ பாட்டில் இருந்தது.
இதனையடுத்து அபிஷேக்கை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அபிஷேக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனப்பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை மற்றும் சுற்றுப்பகுதியில் தற்போது வறட்சி காரணமாக வறண்டு கிடக்கும் செடி, கொடிகளில் அடிக்கடி தீ பிடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் ரோட்டோரம் உள்ள வனப்பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
அப்போது அந்த வழியே சென்றவர்கள் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சென்னி மலை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
அதைத்தொடர்ந்து சென்னிமலையை அடுத்த பெருந்துறை ஆர்.எஸ் பகுதியில் ரோட்டோரம் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்துள்ளது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அதன் பின்னர் மாலை 3 மணி அளவில் சென்னிமலை உப்பிலிபாளையம் ரோட்டில் குப்பை கிடங்கு அருகே உள்ள வனப்பகுதியில் வறண்டு கிடந்த புற்களில் தீ பிடித்து எரிந்துள்ளது.
பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ஒரே நாளில் 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
- புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் மூலம் நேரடியாக 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு இன்று முதல் ஜூன் 12-ந் தேதி வரை 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வரட்டுப்பள்ளம் நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார்.
இந்த நிகழ்வில் உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறி யாளர் தமிழ்பரத், பாசன விவசாய சங்க தலைவர் நாகராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் குருசாமி, சரவணன், முன்னாள் ஊராட்சி செயலாளர் கவின் பிரசாத், இளைஞர் அணி வைத்தீஸ்வரன், மூலக்கடை லோகு, சங்கராபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வியாபாரிகள் ஈரோட்டுக்கு வர தயக்கம் காட்டி வந்தனர். ஒரு சிலர் மட்டுமே வந்து வியாபாரம் செய்து வந்தனர்.
- ஜவுளி மற்றும் மஞ்சள் வியாபாரம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மந்தமாகவே காணப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி இறந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என ஜனவரி 18-ந்தேதி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்தது. இதனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணமின்றி பணம் கொண்டு செல்லக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுபாடுகளை தேர்தல் அதிகாரிகள் விதித்தனர்.
இதையடுத்து கிழக்கு தொகுதி முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஈரோடு ஜவுளி மற்றும் மஞ்சள் தொழில் நகரமாக திகழ்வதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஈரோடு வந்து ஜவுளி மற்றும் மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வியாபாரிகள் ஈரோட்டுக்கு வர தயக்கம் காட்டி வந்தனர். ஒரு சிலர் மட்டுமே வந்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் ஜவுளி மற்றும் மஞ்சள் வியாபாரம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மந்தமாகவே காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி தேர்தல் முடிவுகள அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று தேர்தல் விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டது.
இதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் இன்று வியாபாரிகள் பலர் வழக்கம் போல் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான ஜவுளி வகைகளை வாங்கி சென்றனர். இதே போல் மஞ்சள் வியாபாரிகளும் எப்போதும் போல் வெளிமாவட்ட மற்றும் வெளி மாவட்டங்களுக்கு மஞ்சள் வகைகளை ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
இதனால் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள மற்றும் கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பண்ணாரி அருகே குட்டிகளுடன் வந்த யானைகள் பஸ்சை வழி மறித்து நின்றது.
- இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் அருகே தாள வாடி, ஆசனூர், பண்ணாரி வனப்பகுதி உள்ளது. மேலும் இந்த பகுதியில் புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, மான் மற்றும் கரடிகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகி றது.
இந்த வனப் பகுதி வழியாக திண்டுக்கல்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் தினமும் பஸ், கார், இரு சக்கர வாக னங்கள், லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் கர்நாடகாவுக்கும், அங்கு இருந்து தமிழகத்துக்கும் வந்து சென்றது.
இந்த பகுதிகளில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் உள்பட வன வன விலங்குகள் அடி க்கடி வெளியேறி ரோட்டில் உலா வந்து கடந்து செல்கி றது.
அப்படி வெளியேறும் யானைகள் அந்த வழியாக வரும் லாரிகளை வழி மறித்து அதில் இருந்து கரும்புகளை பறித்து திண்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் உணவுக்காக யானைகள் அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. அதே போல் அந்த வழியாக செல்லும் பஸ்களின் கண்ணாடிகளை யானைகள் ஒரு சில நேரங்களில் உடை த்தும் வருகிறது.
இந்த நிலையில் சத்திய மங்கலம் அடுத்த பண்ணாரி கோவில் அருகே உணவு தேடி யானைகள் குட்டி களுடன் கூட்டமாக வனப்பகு தியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து உலாவி கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ் பண்ணாரி அருகே வந்த போது திடீரென குட்டிகளுடன் வந்த யானைகள் அந்த பஸ்சை வழி மறித்து நின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். மேலும் பஸ்சில் வந்தவர்கள் அதிர்ச்சியில் செய்வது அறியாமல் யானைகளை விரட்ட சத்தம் போட்டனர். ஆனால் யானைகள் செல்லாமல் அங்கேயே நின்றது.
இதை யடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் ரோட்டோரம் நிறுத்த ப்பட்டன. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
இதை தொடர்ந்து சிறிது நேரம் அங்கே சுற்றி திரிந்த யானைகள் அதன் பிறகு தானாகவே வனப்பகுதி க்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை நிலவியது.
தாளவாடி, மற்றும் பண்ணாரி வனப்பகுதி களில் இருந்து யானைகள் அடி க்கடி வெளியேறி வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் ஜாக்கிரதையு டனும், எச்சரி க்கையுடனும் செல்ல வேண்டும் என வனத்துறை யினர் கேட்டு கொண்டனர்.
- ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை தாறு மாறாக உயர்ந்து விட்டது.
- திடீர் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தாளவாடி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் வரத்தாகி வருகிறது.
இங்கு காய்கறிகள் சில்லரை மற்றும் மொத்த வியாபாரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக ஒரு சில காய்கறிகளின் விலை தாறு மாறாக உயர்ந்து விட்டது.
தினமும் 40 டன் காய்கறிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு 30 டன் மட்டுமே காய்கறிகள் வர த்தாகி இருந்தது.
கடந்த வாரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்ற காலி பிளவர் இன்று ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பச்சை மிளகாய் கடந்த வாரம் ரூ.30 விற்ற நிலையில் இன்று ரூ.60 ஆக உயர்ந்து உள்ளது.
கருப்பு அவரை கடந்த வாரம் ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ரூ. 70-ம், கத்தரிக்காய் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.௭௦-க்கும், கொத்தவரங்காய் ரூ.40-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.70-க்கும் விற்பனையானது.
வெண்டைக்காய் கடந்த வாரம் ரூ. 40 -க்கு கிலோ விற்ற நிலையில் இன்று ரூ.80-க்கு விற்பனை யானது.வெண்டைக்காயை பொறுத்தவரை எப்போதும் வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு ஆயிரம் கிலோ வரத்தாகி வந்த நிலையில் இன்று வெறும் 400 கிலோ மட்டுமே வரத்தாகி உள்ளது.
காய்கறிகளின் திடீர் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதேப்போல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:
உருளைக்கிழங்கு-ரூ.25, முட்டைகோஸ்-ரூ.10, தக்காளி-ரூ.30, பெரிய வெங்காயம்-ரூ.25, சின்ன வெங்காயம்-ரூ.35, கேரட்- ரூ.40, முள்ளங்கி-ரூ.20, சுரக்காய் - ரூ.5, பாவ க்காய்-ரூ.40, புடல ங்காய்-ரூ.30, பீட்ரூட்- ரூ.50, பீன்ஸ் -ரூ.50, பட்டவரை -ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.60.
- பாலபடுகை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தது.
- போராடி நள்ளிரவில் காட்டுத் தீயை வனத்துறையினர் அணைத்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சர கங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அதோடு இல்லாமல் ஏராளமான மலை கிராமங்களும் உள்ளன. மழை காலங்களில் அதிக அளவில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வனப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்.
தற்போது மழை இல்லாததால் கடுமையான வெயிலின் காரணமாக வனப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் இலை உதிர்ந்து காய்ந்து வருகிறது.
மேலும் வனப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக வன விலங்கு களும் குடிக்க தண்ணீர் இன்றி அருகில் உள்ள கிராமங்களுக்கு படை எடுத்து வருகிறது.
மேலும் தண்ணீர் தேடி வன விலங்குகள் கூட்டம் கூட்டமாக மாயாறு பகுதிக்கும் சென்று வருகிறது.
வனப்பகுதியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பல்வேறு இடங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இதை வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து அணைத்து வருகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதி களை தொடர்ந்து கண்கா ணித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலபடுகை என்ற வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் காட்டுத்தீ ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இது பற்றி தெரிய வந்ததும், 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதி முழுவதும் காய்ந்து சருகாக கிடப்பதால் தீ மளமளவென எரிந்து கொண்டே இருந்தது.
இதனால் கடுமையாக போராடி நள்ளிரவில் காட்டுத் தீயை வனத்துறையினர் அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பில் மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள், செடி, கொடிகள் எரிந்து சேதமானது.
வனப்பகுதியில் தீ பிடித்த நேரத்தில் அந்த பகுதியில் இருந்த வன விலங்குகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டது.
தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையத்தை சேர்ந்தவர் சென்னி. இவரது மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 30).இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
வெள்ளோடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சங்கீதா (21). இவரும் அதே மில்லில் வேலை செய்து வந்தார்.
இருவரும் ஒரே மில்லில் வேலை செய்து வந்ததால் இருவருக்கு மிடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்ததாக கூற ப்படுகிறது.
இவர்கள் 2 பேரும் பழகி வந்தது. அவர்களின் வீட்டுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து காதல் ஜோடியினர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கலிங்கியம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதை தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதை தொடர்ந்து அவர்களின் பெற்ேறாரை போலீஸ் நிலையத்துக்கு வர வழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து காதல் ஜோடியை அவர்க ளுடன் அனுப்பி வைத்தனர்.
அதே போல் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் தீபிகா (21). பி.காம். பட்டதாரியான தீபிகாவின் தாய் உணவகம் நடத்தி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்.இவரது மகன் கதிரேசன் (27). சரக்கு ஆட்டோ டிரைவரான க திரேசன் அடிக்கடி தீபிகாவின் தாய் நடத்தி வந்த உணவகத்திற்கு சாப்பிட சென்று வருவார். அப்போது, கதிரேசனுக்கும் தீபிகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இவர்களது காதலுக்கு பெற்றோரிடம் எதிர்ப்பு கிளம்பியது.
அதைத்தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் தஞ்சமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ நிலைய போலீசார் இரு தரப்பின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் மணமகன் வீட்டிற்கு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.
- டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க.சார்பில் குதிரை ரேக்ளா பந்தயம் நாளை தொடங்குகிறது.
- கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.
டி.என்.பாளையம்:
ஈரோடு வடக்கு மாவட்டம் தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை யொட்டி டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க., டி.என்.பாளையம் ஒன்றிய தொண்டரனி சார்பில் மாபெரும் குதிரை ரேக்ளா பந்தயம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு கலைஞர் சிலை அருகே தொடங்குகிறது.
விழாவுக்கு டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் தலைமை தாங்குகிறார். ஒன்றிய அவைத்தலைவர் கருப்புச்சாமி வரவேற்கிறார்.
ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் கார்த்திகேயன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் துரைசாமி, மரகதம் பால கிருஷ்ணன் ஆசிர்வாதம் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் மணி வர்மன், கே.எஸ்.திருமுருகன், கதிர் என்கிற கருப்புச்சாமி, பேரூர் செயலாளர்கள் வாணிப்புத்தூர் சேகர் என்கிற பழனிச்சாமி, பெரிய கொடிவேரி ஆறுமுகம், காசிபாளையம் எம்.எம்.பழனிச்சாமி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள் வாணிப்புத்தூர் சிவராஜ், பெரிய கொடிவேரி தமிழ்மகன் சிவா, காசிபாளையம் தமிழ்செல்வி வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
போட்டியை தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி உள்பட பலர் கலந்து ெகாள்கின்றனர்.






