search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுத்தீயை நள்ளிரவு வரை போராடி அணைத்த வனத்துறையினர்
    X

    காட்டுத்தீயை நள்ளிரவு வரை போராடி அணைத்த வனத்துறையினர்

    • பாலபடுகை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தது.
    • போராடி நள்ளிரவில் காட்டுத் தீயை வனத்துறையினர் அணைத்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சர கங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அதோடு இல்லாமல் ஏராளமான மலை கிராமங்களும் உள்ளன. மழை காலங்களில் அதிக அளவில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வனப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்.

    தற்போது மழை இல்லாததால் கடுமையான வெயிலின் காரணமாக வனப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் இலை உதிர்ந்து காய்ந்து வருகிறது.

    மேலும் வனப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக வன விலங்கு களும் குடிக்க தண்ணீர் இன்றி அருகில் உள்ள கிராமங்களுக்கு படை எடுத்து வருகிறது.

    மேலும் தண்ணீர் தேடி வன விலங்குகள் கூட்டம் கூட்டமாக மாயாறு பகுதிக்கும் சென்று வருகிறது.

    வனப்பகுதியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பல்வேறு இடங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

    இதை வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து அணைத்து வருகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதி களை தொடர்ந்து கண்கா ணித்தும் வருகின்றனர்.

    இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலபடுகை என்ற வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் காட்டுத்தீ ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இது பற்றி தெரிய வந்ததும், 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதி முழுவதும் காய்ந்து சருகாக கிடப்பதால் தீ மளமளவென எரிந்து கொண்டே இருந்தது.

    இதனால் கடுமையாக போராடி நள்ளிரவில் காட்டுத் தீயை வனத்துறையினர் அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பில் மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள், செடி, கொடிகள் எரிந்து சேதமானது.

    வனப்பகுதியில் தீ பிடித்த நேரத்தில் அந்த பகுதியில் இருந்த வன விலங்குகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டது.

    தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×