search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The forest department"

    • வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகிறார்கள்.
    • வாகன ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.

    அரச்சலூர்:

    அரச்சலூர் அருகே மலையை ஒட்டியுள்ள ஓம் சக்தி நகரில் சண்முகசுந்தரம் என்ற விவசாயின் தொழு வத்தில் கட்டியிருந்த 7 மாத கன்று குட்டியை அடை யாளம் தெரியாத மர்ம விலங்கு ஒன்று இழுத்து சென்றது.

    இது குறித்து தனது தொழுவத்திற்கு விவசாயி சண்முக சுந்தரம் வந்தார். அப்போது கன்று குட்டியை மர்ம விலங்கு தூக்கி சென்றது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் குறித்து அரச்சலூர் வனத்துறை யினருக்கு தகவல் அளித்த தின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்து அறிந்து கொள்ள அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

    மேலும் அந்த மர்ம விலங்கை பிடிக்க அந்த பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து வனத்து றையினர் அரச்சலூர் பகுதியில் வாகன ஒலிபெருக்கி மூலம் இரவில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை செய்தனர்.

    இதனால் அறச்சலூர் பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது. இந்த நிலையில் அறச்சலூரை சேர்ந்த தமிழரசு என்பவரது தொழுவத்தில் சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக வாட்ஸ்-அப் போன்ற சமூக வளை தலங்களில் தகவல் வைரலானது.

    இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • சென்னம்பட்டி வனச்சரக எல்லை பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.
    • மேலும் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி வனச்சரக எல்லைப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அந்தியூர் அருகேயுள்ள கோவிலூர், புதுக்காடு பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை அப்பகுதி விவசாயத் தோட்டத்தில் புகுந்தது.

    தொடர்ந்து அந்த சிறுத்தை அங்கிருந்த நாயைக் கடித்து இழுத்துச் சென்றது.

    இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்து க்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் இருந்த காலடித் தடயங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது வனத்துறையினர் அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

    இதைத் தொடர்ந்து வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களிலும், விவசாயத் தோட்டத்து வீடுகளிலும் உள்ள மக்களுக்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், எச்சரிக்கையுடன் இருக்கு மாறும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    மேலும் 5 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன. இருந்த போதிலும் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி யில் உள்ளதாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் பல நாய்க ளை சிறுத்தை கவ்விச் சென்றது குறித்தும் வனத்துறைக்கு பொது மக்கள் தகவல் தெரி வித்தனர். இதனால் வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் பீதியில் காணப்பட்டு வந்த னர்.

    எனவே இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை யெனில் வனத்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொது மக்கள் முடிவு செய்தனர்.

    இந்நிலையில் புதுக்காடு பகுதியில் சிறுத்தையை பிடிக்க வத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். தொடர்ந்து வனத்துறை யினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணித்து வருகிறார்கள்.

    சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட பின்னர் 25 நாட்களுக்குப் பிறகு மிக தாமதமாக கூண்டு வைக்க ப்பட்டது அந்த பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வரு கின்றன. தாளவாடி வன ச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு ,காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மல்குத்தி புரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஆடு மற்றும் காவல் நாய்களை வேட்டை யாடி வந்தது. பின்னர் அங்குள்ள கரும்பு தோட்ட த்தில் பதுங்கி கொள்வது வாடிக்கையாக கொண்டி ருந்தது.

    இதையடுத்து சிறு த்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து தாளவாடி வனச்சரகர் சதீஸ் தலைமையில் சிறுத்தை நட மாட்டம் உள்ள பகுதியில் கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அப்பகு தியை சேர்ந்த செல்வராஜ் (48) என்ற விவசாயி பாக்கு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. பின்னர் பாக்கு தோட்டத்தில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தினர்.

    மேலும் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். கூண்டு உள்ளே காவல் நாயை கட்டி வைத்தனர்.

    நாயை பிடிக்கவரும் சிறுத்தை கூண்டில் சிக்கு வதற்கு வாய்ப்பு உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்

    • பாலபடுகை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தது.
    • போராடி நள்ளிரவில் காட்டுத் தீயை வனத்துறையினர் அணைத்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சர கங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அதோடு இல்லாமல் ஏராளமான மலை கிராமங்களும் உள்ளன. மழை காலங்களில் அதிக அளவில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வனப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்.

    தற்போது மழை இல்லாததால் கடுமையான வெயிலின் காரணமாக வனப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் இலை உதிர்ந்து காய்ந்து வருகிறது.

    மேலும் வனப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக வன விலங்கு களும் குடிக்க தண்ணீர் இன்றி அருகில் உள்ள கிராமங்களுக்கு படை எடுத்து வருகிறது.

    மேலும் தண்ணீர் தேடி வன விலங்குகள் கூட்டம் கூட்டமாக மாயாறு பகுதிக்கும் சென்று வருகிறது.

    வனப்பகுதியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பல்வேறு இடங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

    இதை வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து அணைத்து வருகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதி களை தொடர்ந்து கண்கா ணித்தும் வருகின்றனர்.

    இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலபடுகை என்ற வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் காட்டுத்தீ ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இது பற்றி தெரிய வந்ததும், 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதி முழுவதும் காய்ந்து சருகாக கிடப்பதால் தீ மளமளவென எரிந்து கொண்டே இருந்தது.

    இதனால் கடுமையாக போராடி நள்ளிரவில் காட்டுத் தீயை வனத்துறையினர் அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பில் மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள், செடி, கொடிகள் எரிந்து சேதமானது.

    வனப்பகுதியில் தீ பிடித்த நேரத்தில் அந்த பகுதியில் இருந்த வன விலங்குகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டது.

    தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • நாயை, சிறுத்தை விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வளை தலங்களில் பரவி வருகிறது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடயங்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் விளா முண்டி வனப்பகுதியில் யானைகள், சிறுத்தை, மான் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த பகுதியில் இருந்து யானை கள் உள்பட பல வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள பவானிசாகர் நீர் தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்கிறது.

    மேலும் வனப்பகுதியை யொட்டி உள்ள கிராம பகுதிகளில் யானை மற்றும் சிறுத்தைகள் புகுந்து வரு கிறது.

    இதே போல் விளாமுண்டி வனப்பகுதி அருகே கல் குவாரி மற்றும் குடியிருப்பு பகுதி அமைந்து உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள்.

    அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் கண் காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் விளா முண்டி பகுதியில் இரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதை கேட்டு பொதுமக்கள் வன விலங்கு ஏதாவது வந்து உள்ளதா? என அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அங்கு வேலை செய்பவர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் கல்குவாரி அடுத்த கிராம பகுதியில் ஒரு சிறுத்தை நுழைந்து அங்கு காவலுக்கு இருந்த நாயை துரத்தியது. இதையடுத்து அந்த நாய் சிறுத்தையிடம் சிக்காமல் தப்பி சென்று உயிர் தப்பியது பதிவாகி இருந்தது.

    மேலும் நாயை, சிறுத்தை விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வளை தலங்களில் பரவி வருகிறது.

    இது குறித்து அவர்கள் விளாமுண்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடயங்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் பவானிசாகர் வனசரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை குழுவினர் கண்காணிப்பு காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து சிறுத்தை வனப்பகுதிக்கு சென்று விட்டதா? அல்லது அந்த பகுதியில் பதுங்கி உள்ளதா? என கண்காணித்து வருகிறார்கள்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, விளா முண்டி வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளி யேறி ஊருக்குள் வருவது கண்காணிப்பு கேமிரா காட்சியில் பதிவாகி உள்ளது.

    எனவே இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் கல்குவாரி யில் வேலை செய்பவர்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    ×