என் மலர்
ஈரோடு
- கடம்பூர் அடுத்த தட்டப் பள்ளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
- ஆக்ரோஷத்துடன் பின் தொடர்ந்து அவர்களை ஒற்ைற யானை விரட்டியது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் குன்றி மலைப்பகுதியை சேர்ந்தவர் பொம்மேகவுடர் (55) விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சித்துமரி (65) கூலி தொழிலாளி.
நேற்று மதியம் பொம்மேகவுடர் மாக்கம்பாளையத்தில் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.
இதேபோல் குன்றி மலைப்பகுதியில் இருந்து சித்துமரி வேறு ஒரு மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு மாக்கம்பா–ளையம் நோக்கி வந்தார்.
அப்போது அவர்கள் கடம்பூர் அடுத்த தட்டப் பள்ளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வனப்பகுதி யில் இருந்து வெளியேறிய ஒரு ஒற்றை யானை திடீரென சாலைக்கு வந்தது.
யானையை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் அதிர்ச்சியடைந்து மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
இதில் ஆக்ரோஷத்துடன் பின் தொடர்ந்து அவர்களை ஒற்றை யானை விரட்டியது. ஒரு கட்டத்தில் பொம்மேகவுடர், சித்துமரி ஆகியோரை யானை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து அடித்து கொன்றது.
மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுபற்றி தெரிய வந்ததும் கடம்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை தாக்கி இறந்த 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிேசாதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்க ளது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படை க்கப்படுகிறது.
இதனால் பலியானவர்களின் உறவினர்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
மேலும் யானை தாக்கிய பலியானவர்களின் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே 2 பேரை அடித்து கொன்ற ஒற்றை யானையை கண்காணித்து விரட்ட கடம்பூர் வனச்சரகர் இந்துமதி தலைமையில் வனத்துறையினர் குழு அமைத்துள்ளனர். அவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்டறிந்து வனப்பகுதி க்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால் மாக்கம்பாளையம் சுற்று வட்டார பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
- ஆண்டு தோறும் மாசி மாத பவுர்ணமியை யொட்டி 3 நாட்கள் பொங்கல் விழா நடந்து வருகிறது.
- அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கருவண்ணராயர், ெபாம்மா தேவியை வழி பட்டனர்.
சத்தியமங்கலம்,
சத்தியமஙகலம் புலிகள் காப்பகத்துக்குட் பட்ட பவானிசாகர் வனப்பகுயில் தெங்குமரகடா செல்லும் வழியில் அடர்ந்த வன ப்பகுதியில் கெஜலெட்டி பகுதி அமைந்துள்ளது.
இந்த அடர்ந்த வனப்பகுதி யில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ண ராயர், பொம்மா தேவி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் உப்பிலி நாய்க்கர் சமுதாய மக்களின் குல தெய்வமாக இருந்து வருகிறது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத பவுர்ணமியை யொட்டி 3 நாட்கள் பொங்கல் விழா நடந்து வருகிறது. இந்த கோவில் விழாவையொட்டி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநில ங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.
இதையொட்டி இந்தா ண்டுக்கான ஆதி கருவண்ண ராயர் பொம்மா தேவி கோவில் 3 நாள் மாசி மாத பொங்கல் விழா நேற்று மதியம் கணபதி ேஹாமம் செய்யப்பட்டு தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வர தொடங்கி னர்.
தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவர்கள் பஸ், லாரி, கார், வேன் மற்றும் பல்வேறு வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.
இதையொட்டி பவானி சாகர் வனத்துறை சார்பில் வன சரகர் சிவகுமார் தலை மையில் காராச்சி கொரை வன சோதனை சாவடியில் வாகனங்கள் தீவிர சோத னைக்கு பிறகே அனு மதிப்பட்டு வருகிறார்கள்.
இதைெயாட்டி இன்று (திங்கட்கிழமை) காலை பொங்கல் விழா நடந்து வருகிறது. இதில் அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கருவண்ணராயர், ெபாம்மா தேவியை வழி பட்டனர்.
இதை ெதாடர்ந்து இன்று மாலை முதல் கிடா வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆடு, கோழிகளை பக்தர்கள் பலியிட்டு வழிபடுகிறார்கள். தொடர்ந்து இன்று மாலை முதல் விடிய, விடிய கிடா வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக பக்தர்கள் ஏராளமானோர் ஆடு, கோழிகளை கொண்டு வந்திருந்தனர். அவற்றை வனப்பகுதியில கட்டி பராமரித்து வரு கிறார்கள்.
இதை தொடர்ந்து சுவாமிக்கு பலியிடப்பட்ட ஆடு, கோழிகளை அடர்ந்த வனப்பகுதியில் சமைத்து சாப்பிடுகிறார்கள். இதை யடுத்து நாளை காலை சிறப்பு பூஜை நடக்கிறது.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாத வாறு வனத்துறையினர் மற்றும் பவானிசாகர் போலீ சார் தொடர்ந்து கண்கா ணித்து வருகிறார்கள்.
- நேற்று சரக்கு வேன் ஒன்றில் பணியாளர்கள் கற்களை எடுத்து சென்றனர்.
- டிரைவர் பிரேக்கை அழுத்தியபோது, வேன் பின்னோக்கி வந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத் துள்ள பர்கூர் மலைப்பகுதி தேவர்மலை என்ற கிராமத்தில் செந்தில் என்பவரின் நிலத்தை சுற்றி வேலி கற்களை அமைப்பதற்காக நேற்று சரக்கு வேன் ஒன்றில் பணியாளர்கள் கற்களை எடுத்து சென்றனர்.
பர்கூர் மலைப்பகுதி, கடைஈரெட்டி என்ற மலைகிராமம் அருகே சரக்கு வேன் மேடு ஏறும்போது டிரைவர் பிரேக்கை அழுத்தியபோது, வேன் பின்னோக்கி வந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த அந்தியூர் அருகே உள்ள கரட்டூர் பகுதியைச் சேர்ந்த குமார் (46), ஜோசப் (42), மாரிமுத்து (40) ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
வாகனத்தை ஒட்டிச் சென்ற முருகன் (42) மற் றும் உடன் சென்ற சண்முகம் (60) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினர்.
இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக 5 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 682 கன அடியாக குறைந்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.83 அடியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 682 கன அடியாக குறைந்தது. காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடியும்,
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
- மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தி போன்ற 5 போலீஸ் சப்-டிவிசன் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதன்பேரில், மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
இதில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக பெருந்துறையில் கருப்புசாமி(58), மோகன்ராஜ்(35), கடத்தூரில் மருதாசலம் (47), பொங்கியண்ணன்(35), பவானியில் பார்த்திபன்(40), வைரவேல்(39), அழகேசன் மனைவி கோமதி(38), கவுந்தப்பாடியில் பிரகாஷ்(40), கார்த்திக்(27) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 74 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- அந்தியூர் பருவாச்சி அம்மன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம். விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பருவாச்சி அம்மன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்தியூர் போலீசார் சம்மந்தப்பட்ட இடத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அம்மன்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன்(50), அதே பகுதியை சேர்ந்த தங்கவேல்(50), கணேசன்(33), செல்வக்குமார் (49), சீரங்கன் (50), மாரியப்பன் (36), சம்பத் (32), பழனிசாமி (47) ஆகிய 8 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
- கடந்த 2-ந் தேதி கவி மலர் பியூட்டி பார்லருக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கவி மலர் கிடைக்கவில்லை.
ஈரோடு மாவட்டம்,
நம்பியூர் எலத்தூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் கேசவன்(37). இவரது மனைவி கவி மலர் (32). சத்தியமங்கலத்தில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 2-ந் தேதி கவி மலர் பியூட்டி பார்லருக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கவி மலர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கேசவன் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கவி மலரை தேடி வருகின்றனா்.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
- வெயிலின் தாக்கத்தி லிருந்து தப்பிப்ப தற்காக பொதுமக்கள் இளநீர், கரும்பு ஆகியவற்றை விரும்பி அருந்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
பொதுவாக மே மாதம் தொடக்கத்திலிருந்து கடைசி வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
ஆனால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
காலை 8 மணிக்கு தொடங்கும் வெயில் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை உச்சத்தை தொடுகிறது. மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வீட்டுக்குள்ளேயும் புழுக்கம் ஏற்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் பேன் இயங்கி கொண்டே இருக்கி றது.
மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள்.
வெயிலின் தாக்கத்தி லிருந்து தப்பிப்ப தற்காக பொதுமக்கள் இளநீர், கரும்பு ஆகியவற்றை விரும்பி அருந்தி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக இளநீர் கரும்பு வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதேபோல் தர்பூசணி பழ வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. நீர்ச்சத்து நிரம்பியுள்ளதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும் என்ப தால் தர்பூசணி வியாபாரமும் ஜோராக நடந்து வருகிறது.
தற்போது மார்ச் மாதம் தான் தொடங்கியுள்ளது இப்போதே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வரும் மே மாதம் தொடக்கத்தில் அக்னி நட்சத்திர வெயில் வர இருக்கிறது. அப்போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க கூடும்.
- இங்கு தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், ஜீர்கள்ளி,
- பவானிசாகர், சத்திய மங்கலம்,வி ளா மூண்டி,டி.என்.பாளையம், கடம்பூர்,
தாளவாடி,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1455 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.இங்கு தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், ஜீர்கள்ளி, பவானிசாகர், சத்திய மங்கலம்,வி ளா மூண்டி,டி.என்.பாளையம், கடம்பூர், மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வன விலங்குகள் உள்ளன.
ஆண்டு தோறும் மார்ச் மாதம் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டும் தமிழக வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று சத்தியமங்கலம் பலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் 50 க்கும் மேற்பட்ட பறவையாளர்கள், வனச்சர கத்தில் சமூக ஆர்வலர்கள், வனவர், வனக்காவலர்கள் கொண்ட தனிக்குழுவினர் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
தாளவாடி வனச்சரகத்தில் வனச்சரகர் சதீஸ் தலை மையில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட னர்.
இதில் மலபார்கிளி, மஞ்சள் பிடரி மரங்கொத்தி, சின்ன மின்சிட்டு, கருந்தலை மாங்குயில், பட்டாணிக் குருவி, பொறிமார்பு சிலம்பன் , துடுப்பு வால் கருச்சான், வெண் வயிற்று கருச்சான் , வெண் கன்னக் குக்குருவான், அரச வால் ஈப்பி ழப்பா ன் என 50-க்கும் மேற்ப ட்ட நில வாழ் பறவை இனங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
- சேவல் சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அவர்களிடம் இருந்து ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.
சென்னிமலை
சென்னிமலை அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அய்யம்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 6 பேர் பணம் மற்றும் சேவல் வைத்து கொண்டு சண்டை நடத்தி கொண்டு இருந்தனர்.
அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் அவர்கள் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பூர்ணம் அவரது மற்றொரு மகன் நந்தகுமார் ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.
- சம்பூர்ணம் நோய் பாதிப்பு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் செல்லப்பா நகரை சேர்ந்தவர் வேதாசலம். இவரது மனைவி சம்பூர்ணம் (70). இவர்களுக்கு உதயகுமார், நந்தகுமார் (40) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
வேதாசலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் உதயகுமாருக்கு திருமணமாகி குடும்பத்துடன் வேறு இடத்தில் வசித்து வருகிறார்.
சம்பூர்ணம் அவரது மற்றொரு மகன் நந்தகுமார் ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் சம்பூர்ணம் நோய் பாதிப்பு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமடையவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு சம்பூர்ணம் அவரது மகன் நந்தகுமார் ஆகியோர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் எட்டி பார்த்தனர். அப்போது சம்பூர்ணம், அவரது மகன் நந்தகுமார் ஆகியோர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஷம் குடித்து தற்கொலை செய்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.
மேலும் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் பலர் வந்திருந்தனர். பவானிசாகர் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இளைஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.
காலை பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தொடர்ந்து குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணையின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர்.






