பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது,

அந்தியூர் பருவாச்சி அம்மன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம். விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது,
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பருவாச்சி அம்மன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்தியூர் போலீசார் சம்மந்தப்பட்ட இடத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அம்மன்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன்(50), அதே பகுதியை சேர்ந்த தங்கவேல்(50), கணேசன்(33), செல்வக்குமார் (49), சீரங்கன் (50), மாரியப்பன் (36), சம்பத் (32), பழனிசாமி (47) ஆகிய 8 பேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com