search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People gathered at"

    • கொடிவேரி தடுப்பணைக்கு வந்து கொட்டும் தண்ணீர் குளித்து மகிழ்ந்தனர்.
    • கொடிவேரி அணையில் கூட்டம அதிகரித்து காணப்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் விடுமுறை தினங்களில் அதிகளவில் வருகை தந்து குளித்து மகிழ்ந்து சென்று வருகிறார்கள்.

    ஏப்ரல், ேம மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் ஏராளமான பேர் தினமும் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து கொட்டும் தண்ணீர் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக கொடிவேரி தடுப்பணை பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வ ப்போது சனி, ஞாயிற்றுக்கி ழமைகளில் மட்டுமே கூட்டம் ஓரளவுக்கு வந்தது.

    இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை விடு முறையையொட்டி ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் கொடி தடுப்பணைக்கு வந்தனர். அவர்கள் அருவி யில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணையில் கூட்டம அதிகரித்து காண ப்பட்டது. சுற்றுலா பயணி கள் கொடிவேரி அணை பகுதியில் விற்பனையாகும் மீன்களை சுடச்சுட வாங்கி சாப்பிட்டனர்.

    • பொதுமக்கள் பலர் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வந்திருந்திருந்தனர்.
    • பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளியில் சேர்த்தனர்.

    பு.புளியம்பட்டி:

    தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது.இதேபோல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்து பனையம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கோடை விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.மாணவர்கள் உற்சா கத்துடன் வகுப்பறைக்கு சென்றனர்.

    இதையொட்டி புளி யம்பட்டி, பனையம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வந்திருந்திருந்தனர்.

    மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளியில் சேர்த்தனர்.

    இதையடுத்து பள்ளிக்கு புதிதாக வந்த மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடி வேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் பலர் வந்திருந்தனர். பவானிசாகர் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இளைஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    காலை பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணையின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர்.

    ×