என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "species"

    • இங்கு தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், ஜீர்கள்ளி,
    • பவானிசாகர், சத்திய மங்கலம்,வி ளா மூண்டி,டி.என்.பாளையம், கடம்பூர்,

    தாளவாடி,

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1455 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.இங்கு தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், ஜீர்கள்ளி, பவானிசாகர், சத்திய மங்கலம்,வி ளா மூண்டி,டி.என்.பாளையம், கடம்பூர், மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இங்கு யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வன விலங்குகள் உள்ளன.

    ஆண்டு தோறும் மார்ச் மாதம் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும்.

    அதே போல் இந்த ஆண்டும் தமிழக வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று சத்தியமங்கலம் பலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் 50 க்கும் மேற்பட்ட பறவையாளர்கள், வனச்சர கத்தில் சமூக ஆர்வலர்கள், வனவர், வனக்காவலர்கள் கொண்ட தனிக்குழுவினர் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தாளவாடி வனச்சரகத்தில் வனச்சரகர் சதீஸ் தலை மையில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட னர்.

    இதில் மலபார்கிளி, மஞ்சள் பிடரி மரங்கொத்தி, சின்ன மின்சிட்டு, கருந்தலை மாங்குயில், பட்டாணிக் குருவி, பொறிமார்பு சிலம்பன் , துடுப்பு வால் கருச்சான், வெண் வயிற்று கருச்சான் , வெண் கன்னக் குக்குருவான், அரச வால் ஈப்பி ழப்பா ன் என 50-க்கும் மேற்ப ட்ட நில வாழ் பறவை இனங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

    ×