மது விற்ற பெண் உட்பட 10 பேர் கைது,

சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
மது விற்ற பெண் உட்பட 10 பேர் கைது,
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தி போன்ற 5 போலீஸ் சப்-டிவிசன் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன்பேரில், மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

இதில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக பெருந்துறையில் கருப்புசாமி(58), மோகன்ராஜ்(35), கடத்தூரில் மருதாசலம் (47), பொங்கியண்ணன்(35), பவானியில் பார்த்திபன்(40), வைரவேல்(39), அழகேசன் மனைவி கோமதி(38), கவுந்தப்பாடியில் பிரகாஷ்(40), கார்த்திக்(27) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 74 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com