search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beauty parlor"

    • கடந்த 2-ந் தேதி கவி மலர் பியூட்டி பார்லருக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றார்.
    • அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கவி மலர் கிடைக்கவில்லை.

    ஈரோடு மாவட்டம்,

    நம்பியூர் எலத்தூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் கேசவன்(37). இவரது மனைவி கவி மலர் (32). சத்தியமங்கலத்தில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 2-ந் தேதி கவி மலர் பியூட்டி பார்லருக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கவி மலர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கேசவன் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கவி மலரை தேடி வருகின்றனா்.

    லாஸ்பேட்டையில் மசாஜ் செய்ய மறுத்ததால் பியூட்டி பார்லரில் புகுந்து பொருட்களை சூறையாடிய ரவுடி கும்பல் பெண் ஊழியரை கத்தியால் குத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராஜ் என்ற சிவக்குமார் (வயது 30). இவர் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ஆண்- பெண்களுக்கான அழகு நிலையம் (பியூட்டி பார்லர்) நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை இந்த பியூட்டி பார்லருக்கு ஒருவர் போன் செய்து மசாஜ் செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு கடையில் இருந்த பெண் ஊழியர் மசாஜ் செய்ய ஆண் ஊழியர் இல்லை என்று தெரிவித்தார்.

    சிறிது நேரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் பியூட்டி பார்லருக்கு வந்தது. அவர்கள் தங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று பெண் ஊழியர்களை மிரட்டினர்.

    மேலும் பியூட்டி பார்லரில் இருந்த சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதனை பார்த்ததும் பெண் ஊழியர்கள் அலறினர். ஆனால், ஆத்திரம் அடைந்த கும்பல் பெண் ஊழியர் ஒருவரை கத்தியால் குத்தியது.

    இதையடுத்து பெண் ஊழியர்கள் அனைவரும் அங்குள்ள அறைகளுக்குள் சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டனர். பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகீர் உசேன், தயாளன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் ரகளையில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர். மேலும் கத்தி குத்தில் காயம் அடைந்த பெண் ஊழியரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிடிபட்ட 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கருவடிகுப்பத்தை சேர்ந்த கலையரசன், (34), பாலமுருகன் (29), சபரிநாதன் (28) மற்றும் அகிலன் (28) என்பது தெரியவந்தது.

    இதில் ரவுடியான கலையரசன் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது மற்றும் பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கலையரசன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பியூட்டி பார்லரில் புகுந்து ரவுடி கும்பல் அட்டகாசம் செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் விபச்சார அழகி என்று நினைத்து பியூட்டி பார்லர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சேலத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த அழகு நிலையத்தில் இருந்து இளம்பெண்ணை தொடர்பு கொண்ட ஊழியர்கள் அழகு நிலையத்தில் பணியிடம் காலியாக இருப்பதாகவும், உடனே புறப்பட்டு சேலத்திற்கு வரும்படியும் கூறினர். மேலும் சேலம் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் வாலிபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி அழகு நிலையத்திற்கு வருமாறும் கூறி உள்ளனர்.

    இதையடுத்து அந்த இளம்பெண் கடந்த 18-ந் தேதி இரவு பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு அரசு பஸ்சில் புறப்பட்டார். இரவு 11 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தடைந்தது. பஸ் நிலையத்தை விட்டு பஸ் வெளியில் வந்ததும் அங்கு தயாராக நின்ற வாலிபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறினார்.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள் சேலம் நகருக்குள் சிட்டாய் பறந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் சேலம் குரும்பப்பட்டி உயிரியில் பூங்காவை தாண்டி காட்டுப்பகுதிக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காட்டுப்பகுதியிலா? அழகு நிலையம் இருக்கும் என்று சந்தேகம் அடைந்தார்.

    அப்போது அந்த வாலிபரிடம் இளம்பெண் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் பார்சல் சாப்பாட்டை கொடுத்து சாப்பிடும் படி கொடுத்தார். சாப்பிட்டு முடித்ததும் அந்த வாலிபர் அந்த இளம்பெண்ணை உல்லாசம் அனுபவிக்க முயன்றார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் கூச்சலிட்டார். இதனால் பயந்து போன அந்த வாலிபர் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.

    இது குறித்து அந்த பெண் கூகுள் உதவியுடன் கொடுத்த தகவலின் பேரில் டவுன் அனைத்து மகளிர் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு அழைத்து வந்தனர்.

    இது தொடர்பாக அந்த பெண் பள்ளப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பெண்ணை அழைத்து சென்ற சேலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்ற வாலிபரை பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

    கடந்த 18-ந் தேதி இரவு அன்பழகன் விபசாரத்திற்கு ஒரு பெண்ணை அழைத்து விட்டு அந்த பெண்ணுக்காக சேலம் புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அதே நேரத்தில் பெங்களூரை சேர்ந்த இளம்பெண் பியூட்டி பார்லர் வேலைக்கு செல்வதற்காக அதே பகுதிக்கு வந்துள்ளார். இதனால் நாம் அழைத்த பெண் தான் இவர் என்று நினைத்து அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றார்.

    பின்னர் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருக்க முயன்ற போது அவர் மறுத்ததால் பயந்து போய் அங்கிருந்து அன்பழகன் தப்பி யோடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

    ×