என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையத்தில் தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை
- சம்பூர்ணம் அவரது மற்றொரு மகன் நந்தகுமார் ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.
- சம்பூர்ணம் நோய் பாதிப்பு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் செல்லப்பா நகரை சேர்ந்தவர் வேதாசலம். இவரது மனைவி சம்பூர்ணம் (70). இவர்களுக்கு உதயகுமார், நந்தகுமார் (40) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
வேதாசலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் உதயகுமாருக்கு திருமணமாகி குடும்பத்துடன் வேறு இடத்தில் வசித்து வருகிறார்.
சம்பூர்ணம் அவரது மற்றொரு மகன் நந்தகுமார் ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் சம்பூர்ணம் நோய் பாதிப்பு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமடையவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு சம்பூர்ணம் அவரது மகன் நந்தகுமார் ஆகியோர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் எட்டி பார்த்தனர். அப்போது சம்பூர்ணம், அவரது மகன் நந்தகுமார் ஆகியோர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஷம் குடித்து தற்கொலை செய்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.






