ரத்த வாந்தி எடுத்து காவலாளி சாவு

சோமசுந்தரத்துக்கு கடந்த ஒரு வாரமாக சளி பிரச்சனை இருந்து வந்துள்ளது.திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார்.
ரத்த வாந்தி எடுத்து காவலாளி சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த சிறுவலூர் அருகே கொளப்பலூர் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (55). இவரது மனைவி துளசி மணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சோமசுந்தரம் கெட்டிசெவியூர் ஒட்டன் புதூரில் உள்ள ஒரு கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் சோமசுந்தரம் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரது அறையில் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி உள்ளார். சோமசுந்தரத்துக்கு கடந்த ஒரு வாரமாக சளி பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்நிலையில் திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார்.

இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com