என் மலர்
ஈரோடு
- 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- 24 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.
பல்வேறு தடுப்பு நட வடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கி யது. கடந்த சில மாத ங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணி க்கை 1 லட்சத்து 36 ஆயிர த்து 739 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு டன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 981 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்ட த்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவ ட்டம் முழுவதும் 24 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- டிரான்ஸ் பார்மரில் வேலுசாமி ஏறி மின் கம்பியை பிடித்தார்.
- மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வெள்ளகோவில் அடுத்த அய்யம்மபாளையம் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (49).
இவர் காங்கயம் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
மேலும் அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அவரது தம்பியுடன் இருந்து வந்தார். மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலுசாமி ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அஞ்சூரில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார்.
இந்த நிலையில் சிவகிரி அடுத்த நல்லசெல்லிபாளையம் பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ் பார்மரில் வேலுசாமி ஏறி மின் கம்பியை பிடித்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து ஆம்புலன்சு மூலம் அவரது உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மதிய நேரத்தில் வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
- வீடு, அலுவலகங்களில் மின் விசிறிகள் ஓடினாலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக அனல் காற்றே வீசுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கோடைகாலம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் வேலூர், திருச்சி போன்ற இடங்களில் தான் அதிகளவில் வெப்பம் நிலவும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே ஈரோட்டில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. அதுவும் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் 107 டிகிரி வெப்ப நிலை பதிவாகி இருந்தது. அதை தொடர்ந்து தினமும் ஈரோட்டில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மதிய நேரத்தில் வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வீடு, அலுவலகங்களில் மின் விசிறிகள் ஓடினாலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக அனல் காற்றே வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தினந்தோறும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவில் குளிர்பானங்கள், கரும்பு பால், மோர், இளநீர், தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி பிஞ்சு, நுங்கு போன்ற குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றும் ஈரோட்டில் கடுமையான வெப்பம் நிலவியது. இதில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் 105.4 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. குறிப்பாக மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பஸ்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட இந்த ஆண்டு வெப்பத்தின் பிடியில் ஈரோடு சிக்கி தவிக்கிறது. அதுவும் அடுத்த மாதம் அக்னி நட்சத்திரம் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
- சஞ்சய் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டை அரசு பேருந்து நகரை சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவரது மகன் சஞ்சய் (15). இவர் கஸ்பாபேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு விடுமுறையால் சஞ்சய் வீட்டில் இருந்து உள்ளார். பின்னர் மதியம் ஒரு மணி அளவில் தனது நண்பர்களுடன் சஞ்சய் அதே பகுதியில் உள்ள சிவக்குமார் என்பவரின் கிணற்றில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது விளையாட்டு மிகுதியால் சஞ்சய் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு நீச்சல் தெரியாது எனவும் கூறப்படுகிறது.
அப்போது திடீரென சஞ்சய் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சஞ்சய் தண்ணீரில் மூழ்கினார்.
இது குறிப்பு ஈரோடு தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றினர். பின்னர் சஞ்சய் உடலை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர்.
அப்போது சஞ்சய் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூட்டணியை பொருத்தவரை அ.தி.மு.க. தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும்.
- பா.ஜ.க. உடனான கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு யூகங்கள் அடிப்படையில் பதில் கூற முடியாது.
கோபி:
கோபிசெட்டி பாளையத்தில் இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டபோது தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என்று கூறியது அவரது கருத்து. இது பா.ஜ.க. உடனான கூட்டணி க்கு நெருக்கடியா என்பதற்கு பதில் கூற முடியாது. ஊழல் பட்டியலை கவர்னரிடம் அ.தி.மு.க. கொடுக்குமா என்பது குறித்து பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார்.
2024-ம் தேர்தலில் அதிக சீட் பெறுவதற்காக அ.தி.மு.க.வை பயமுறுத்த அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளரா என்பதற்கு அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை தெளிவாக உள்ளது. கூட்டணியை பொருத்தவரை அ.தி.மு.க. தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் கூட்டணியை முடிவு செய்ய வாய்ப்பில்லை. அ.தி.மு.க. மீதான ஊழல் குற்றச்சாட்டு வெளியானால் பா.ஜ.க. உடனான கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு யூகங்கள் அடிப்படையில் பதில் கூற முடியாது.
கர்நாடாகவில் அ.தி.மு.க. போட்டியிடுவது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்ய வேண்டும். பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இட நெருக்கடி காரணமாக அவதிப்பட்டு வருவதால் 25 ஏக்கர் நிலம் வனத்துறை சார்பில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. விரைவில் நிலம் தருவதாக அரசு சார்பில் உத்தரவாதம் தரப்பட்டு உள்ளது.
அத்திகடவு-அவினாசி திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது. செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்கு பல்வேறு இடர்பாடுகள் இருப்பதாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். கனிம வளத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். அதேபோன்று மண்பாண்டம் செய்பவர்களுக்கு குளத்தில் இருந்து இலவசமாக மண் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நாளை மதியம் 2 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற உள்ளது.
- கோபி வாய்க்கால் மேடு ஸ்ரீவித்யா பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கி பார்க் வீதி, அரசு மருத்துவமனை வீதி, கச்சேரி வீதி, ஈரோடு-சக்தி ரோடு மெயின் ரோடு வழியாக முத்து மஹாலில் ஊர்வலம் நிறைவடைகிறது.
கோபி:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் நாளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு போலீசார் கடும் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளனர். திட்டமிட்டபடி நாளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற உள்ளது. கோபி வாய்க்கால் மேடு ஸ்ரீவித்யா பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கி பார்க் வீதி, அரசு மருத்துவமனை வீதி, கச்சேரி வீதி, ஈரோடு-சக்தி ரோடு மெயின் ரோடு வழியாக முத்து மஹாலில் ஊர்வலம் நிறைவடைகிறது.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள், ஒரு ஏ.டி.எஸ்.பி, 10 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் நாளை கோபிசெட்டிபாளையம் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. முக்கியமான பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறியதாவது:-
நீதிமன்ற உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் நாளை கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்ட- ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எனது தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கோபிசெட்டிபாளையம் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த ஊர்வலத்திற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு போலீஸ் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை அவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாததால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது என விவசாயிகள் நிம்மதி அடைந்து வந்தனர்.
- வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 வருடங்களாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, நாய்களை தாக்கி கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாததால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது என விவசாயிகள் நிம்மதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி (50) . இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று மாடுகளை வீட்டின் முன் கட்டி வைத்து விட்டு இரவு தூங்க சென்று விட்டார். காலையில் எழுந்து பார்த்த போது தனது மாடு ஒன்று கடிபட்டு பாதி தின்ற நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி அருகில் இருந்த விவசாயிகள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் இறந்த மாட்டை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை தாக்கி மாடு இறந்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- ராஜேந்திரன் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
- போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையம் எதிரே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் ஈரோடு நாடார் மேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜேந்திரன் (48) என்பதும் இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
ராஜேந்திரன் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனுடன் மது அருந்திய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சமையல் தொழிலாளியான கண்ணன் என்கிற கண்ணப்பன் (45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், ராஜேந்திரனும், கண்ணப்பனும் நண்பர்களாக இருந்து வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று இரவு 2 பேரும் சேர்ந்து மது அருந்திய நிலையில் போதையில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணப்பன் மரக்கட்டையால் ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதில் சிறிது நேரத்திலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கண்ணப்பனை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
- குடியிருப்புகள், காலியிடங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
- குடிநீர் வரி இதுவரை ரூ.6 கோடி வசூலாகி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள். காலியிடங்களுக்கு சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் மாநகராட்சி குத்தகை இனங்க ளுக்கான அனுமதிப்பதற்கான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதில் மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்றவை பிரதான வரி வருவாய் ஆகும். இந்த வரி இனங்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் தவணையிலும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2-வது தவணையிலும் ஆண்டு தோறும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது 2-வது தவணை காலம் கடந்த 31 ந் தேதியுடன் முடி வடைந்தது. இதற்காக கடந்த மார்ச் மாதத்தில் வரிபாக்கி வைத்துள்ள வர்களிடம் வரி வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இதன் பேரில் 2022-2023-ம் ஆண்டில் மாநகராட்சி பகுதியில் சொத்து வரி ரூ.51 கோடி விதிக்கப்பட்டது. அதில் தற்போது 83 சதவீதம் அதாவது ரூ.42 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில் குடிநீர் வரி ரூ.7 கோடி விதிக்கப்பட்ட நிலையில் இதுவரை ரூ.6 கோடி வசூலாகி உள்ளது. அதாவது 84 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொழில் வரியாக ரூ.13 கோடி விதிக்கப்பட்டதில் ரூ.6 கோடி அதாவது 43 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
குத்தகை, ஏலம் இனங்கள் போன்ற இதர வரி இனங்களுக்கு ரூ.34 கோடி விதிக்கப்பட்டதில் ரூ.22 கோடி அதாவது 60 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்கு வரி தொகையை நிலுவை வைத்துள்ளவர்கள் வரும் 30-ந் தேதிக்குள் செலுத்திட கடைசி நாள் ஆகும். அதன்பிறகும் வரி தொகையை செலுத்தாமல் இருந்தால் நீதிமன்ற நடவடி க்கை மூலம் சொத்துக்கள் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஈரோடு மாநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
- ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கா னவர்கள் தங்கி பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு போன்ற விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நேரங்களில் ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த வர்கள் குடும்பத்து டன் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.
இந்த நேரத்தில் ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் ஈரோட்டில் உள்ள வெளி மாவட்ட மக்கள் நேற்று இரவே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர்.
இதன் காரணமாக நேற்று மாலை முதல் இரவு வரை ஈரோடு மாநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
குறிப்பாக ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் அலை மோதியது. சேலம், கோவை செல்லும் பஸ்களில் வழக்க த்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
இதேபோல் மதுரை, நெல்லை செல்லும் பஸ் நிலையங்ளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்தி னருடன் பஸ் நிலைய ங்களில் பொது மக்கள் வந்திருந்தனர்.
இதேப்போல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. அனைத்து ெரயில்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டா போட்டி போட்டனர்.
குறிப்பாக கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூட்டம் கட்டு க்கடங்காமல் இருந்தது.
இதன் காரணமாக நேற்று மாலை முதல் ஈரோடு மேட்டூர் ரோடு, காளை மாட்டுசிலை, ஸ்வஸ்திக் கார்னர், பன்னீர்செல்வம் பூங்கா பகுதிகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் பல்வேறு வெளி மாவட்டங்களில் பணி புரியும் ஈரோட்டை சேர்ந்த வர்களும் தொடர் விடுமுறை காரணமாக ஈரோட்டிற்கு தங்களது குடும்பத்துடன் வர தொடங்கியுள்ளனர்.
இன்று காலையும் ஈரோடு ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
- தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
பவானி:
தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் அதிகளவில் கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டை யொட்டி சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள் பாலித்தார். அதிகாலை முதலே ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், கரூர் என மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
தொடர்ந்து அவர்கள் நீண்ட சரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் என்றும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம், சுற்றுலா தலம் என பலர் பெயர் பெற்று விளங்கி வருகிறது.
ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் இன்று தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு அதிகாலை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் உட்பட பல்வேறு மூலவர்க ளுக்கு பல்வேறு திரவிய ங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டு பக்தர்க ளுக்கு அருள் பாலித்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பவானி கூடுதுறைக்கு காலை முதலே பக்தர்கள் பலர் வந்து ஆற்றில் புனித நீராடி னர். மேலும் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு சென்றனர்.
அதே போல் சென்னிமலை முருகன் கோவிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலில் காலை நேரத்தில் பக்தர்கள் அதிகளவில் வந்து வழிபாடு நடத்தினர்.
இதே போல் கொடுமுடிக்கு இன்று காலை கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் காவிரி கரையில் புனித நீராடினர். இதையடுத்து மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
மேலும் அந்தியூர் பத்ர காளியம்மன், கோபிசெட்டி-பாளையம் சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், பச்சை மலை, பவள மலை முருகன், பவானி செல்லியாண்டி யம்மன், கருமாரியம்மன், அம்மாபேட்டை காவிரி கரையில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்க நாதர் கோவில் உள்பட மாவட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதை தொடர்ந்துபக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டை யொட்டி ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அம்ம னுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து அம்மனை வழிபட்டனர்.
இதே போல் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன், கொங்காலம்மன், கோட்டை பத்ரகாளியம்மன் கருங்கல் பாளையம் மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், சூரம்பட்டி மாரியம்மன், கோட்டை பெருமாள், ஈஸ்வரன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
இதே போல் ஈரோடு அடுத்த திணடல் வேலாயுதசாமி கோவிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வள்ளி- தெய்வானையுடன் அருள் பாலித்தார். இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திண்டல் மலைக்கு வந்து வழிபட்டனர்.
மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் பழ வகைளை அம்மனுக்கு படைத்து பூஜை செய்து வழிபட்டனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆப்பிள், ஆரஞ்சு, மதுளை உள்பட பழ வகைகள் மற்றும் பணம், நகைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி பஞ்சாயத்துக்குட்பட்ட காங்கேயம்பாளையம் காவிரி ஆற்றின் நடுவில் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. 6 ஆயிரம் ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக பக்தர்களால் கருதப்படுகிறது.
இக்கோவிலில் முருகன், அகஸ்தியர், காலபைரவர், துர்க்கை அம்மன், பிரம்மன், லட்சுமி, விநாயகர் மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட ஏராளமான சுவாமிகள் உள்ளன. ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தால் திருமண தடைகள், குழந்தை பேரின்மை, பிரம்மஹத்தி தோஷங்கள், பித்ரு சாபங்கள் இவைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று சித்திரை முதல் நாள் என்பதால் கடந்த 2 நாட்களாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று அதிகாலையில் 108 சங்காபிஷேக நிகழ்ச்சியும் நடைபெற்றன. சித்திரை முதல் நாளான இன்று ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் சாமியை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும்.
மேலும் குடும்பம் மற்றும் தொழில்களில் ஏற்படும் பிரச்சனைகள் விலகி செல்லும் என்ற ஐதீகம் பக்தர்களுக்கு இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதல் ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் சாமியை தரிசனம் செய்து சென்றனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் பாதுகாப்பிற்காக மொடக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கின்றனர்.
- குடிமகன்கள் விரும்பும் மதுவகைகள் கிடைப்பதில்லை.
சென்னிமலை:
சென்னிமலை வட்டா ரத்தில் ஈங்கூர், வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ். உள்பட 14 இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது.
தற்போது கோடை வெயில் 104 டிகிரிக்கு மேல் இருப்பதால் டாஸ்மாக் கடைகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக பாட்டில் பீர் கேட்டால் டின் பீர், டின் பீர் கேட்டால் பாட்டில் பீர் என கிடைத்து வந்தது. கடந்த 3 நாட்களாக எந்த பீர் வகைகளும் கிடைக்கவில்லை.
குடிமக ன்களும் பல கடைகளில் தேடி அழைந்து பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கின்றனர். மேலும் டாஸ்மாக் கடைகளில் உயர் ரக மதுபா னங்கள் வரவு அதிகரி த்துள்ளதாலும் குடிமகன்கள் விரும்பும் மதுவகைகள் கிடைப்பதில்லை.
குடிமகன்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகள் படிப்படியாக குறைந்து விட்டன. விலை அதிகரிப்பு, உள்ள மதுபானங்கள் தான் கிடைக்கின்றன என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக உள்ள நிலையில், தற்போது பீர் பிரியர்களும் மன வேதனை அடைந்துள்ளனர்.
தட்டுபாடு மற்றும் பீர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். அதிலும் கேட்ட பீர் வகைகள் கிடைப்பதே இல்லை என குறைபட்டு கொள்கின்றனர்.






