கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 24 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.

பல்வேறு தடுப்பு நட வடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கி யது. கடந்த சில மாத ங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணி க்கை 1 லட்சத்து 36 ஆயிர த்து 739 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு டன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 981 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்ட த்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாவ ட்டம் முழுவதும் 24 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com