தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி மாடு பலி

கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாததால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது என விவசாயிகள் நிம்மதி அடைந்து வந்தனர்.வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி மாடு பலி
Published on

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 வருடங்களாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, நாய்களை தாக்கி கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாததால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது என விவசாயிகள் நிம்மதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி (50) . இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று மாடுகளை வீட்டின் முன் கட்டி வைத்து விட்டு இரவு தூங்க சென்று விட்டார். காலையில் எழுந்து பார்த்த போது தனது மாடு ஒன்று கடிபட்டு பாதி தின்ற நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி அருகில் இருந்த விவசாயிகள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் இறந்த மாட்டை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை தாக்கி மாடு இறந்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com