என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சுற்றுலா தலங்களில் இன்று 3-வது நாளாக மக்கள் குவிந்தனர்.
    • கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் இன்று 3-வது நாளாக மக்கள் குவிந்தனர்.

    சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை உள்ளது. அதன் அருகே பூங்கா அமைந்துள்ளது.

    இந்த பூங்காவுக்கு சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அணையை ரசித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டு மற்றும் நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்து ரசித்து சென்றனர். கடந்த 2 நாட்களாக அணை பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பவானிசாகர் அணை பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    காலை முதலே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

    இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    அணைப் பூங்காவுக்கு தங்கள் குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் அங்கு ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் பூங்காவின் இயற்கை அழகை கண்டு களித்தனர். மேலும் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தப்படி சென்றனர்.

    இதையொட்டி அணையின் வெளி பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அணையை ரசித்த பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்தனர்.

    அதே போல் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைளையும் ரோட்டோரம் அமர்ந்து சாப்பிட்டனர்.

    இதனால் இன்று காலை முதலே அணை பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையால் பவானிசாகர் பகுதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அடுத்த கொடி வேரி தடுப்பணைக்கு இன்று 3-வது நாளாக பொது மக்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கொடுவேரி தடுப்பணை பகுதியில் இன்றும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இன்று காலை மக்கள் குறைந்து காணப்ப ட்டாலும் நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது.

    குடும்பத்துடன் பூங்காவுக்கு வந்த மக்கள் அங்கு ஊஞ்சல், சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.

    மேலும் பண்ணாரி யம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன், சென்னிமலை முருகன் கோவில், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்பட மாவட்டத்தின் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த 3 நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    • செந்தூரம், கிளி மூக்கு போன்ற ரக மாம்பழங்கள் கடந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
    • பெங்களுரா, மல்கோவா, இமாம் சந்த், குண்டு நடுச்சாலை போன்ற ரக மாம்பழங்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.

    ஈரோடு:

    கோடை காலத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் கனிகளில் முதலிடத்தில் இருப்பது மாம்பழம் தான். ஈரோடு மாவட்டத்தில் மாம்பழங்கள் குறைந்த அளவிலேயே விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்திற்கு அருகே உள்ள சேலம், கிருஷ்ணகிரி, சங்ககிரி, மேச்சேரி, ஆத்தூர், வனவாசி, நங்கவள்ளி, தலைவாசல் போன்ற பகுதியில் இருந்து மாம்பழங்கள் அதிக அளவில் விளைச்சலாகி வருகிறது.

    ஈரோட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட், சம்பத் நகர், பெரியார் நகர் உழவர் சந்தைகள் உட்பட அனைத்து கடைகளிலும் பல்வேறு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக பங்கனப்பள்ளி, செந்தூரம், மல்கோவா, கிளி மூக்கு போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. வ.உ.சி. மார்க்கெட்டிற்கு இன்று 10 டன் மாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளது.

    சேலம், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் அதிகம் விளைச்சல் ஆகும். செந்தூரம், கிளி மூக்கு போன்ற ரக மாம்பழங்கள் கடந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட செந்தூரம் இந்த ஆண்டு ரூ.80 முதல் ரூ. 110 வரை விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.30-க்கு விற்கப்பட்ட கிளி மூக்கு மாம்பழம் இந்த ஆண்டு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மாம்பழம் வரத்து குறைந்து இருப்பது தான்.

    இதேபோல் பெங்களுரா, மல்கோவா, இமாம் சந்த், குண்டு நடுச்சாலை போன்ற ரக மாம்பழங்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இவற்றின் விலையும் கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து மாம்பழம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

    ஈரோட்டிற்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதியில் இருந்து அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி விட்டாலும் வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் மாம்பழங்கள் விலை அதிகரித்துள்ளது.

    ஓசூர், பெங்களூர், ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இந்த மாம்பழங்கள் வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    ஈரோட்டில் கடந்த சில மாதங்களாகவே கடும் வெயில் வாட்டி வருவதால் மா மரத்தில் காய் பிடிக்கும் சீசனில் பூக்களிலேயே உதிர்ந்து விடுகிறது. மேலும் மாங்காய் முழு வளர்ச்சி பிடிக்காமல் வெம்பி விழுந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் தற்போது சீசன் தொடங்கியும் மாம்பழம் வரத்து குறைவாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஓட்டல் சிமினி அருகே காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்று திரண்டனர்.
    • 10 பெண்கள் உட்பட 120 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை கண்டித்தும், மோடி அரசை கண்டித்தும் ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று காலை ஓட்டல் சிமினி அருகே காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். மாநகர மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார்.

    மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர் ஜாபர் சாதிக் அல்டிமேட் தினேஷ் மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ராஜா சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜவகர்அலி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் அண்ணா, சச்சிதானந்தம் பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ரெயில் மறியலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது காளை மாட்டு சிலை அருகே டவுன் டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    இதில் 10 பெண்கள் உட்பட 120 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் கொடுமுடி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும், இதை கண்டித்து பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டமும் நடைபெற்றது. 

    • பக்தர்கள் கூடுதுறை சென்று தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.
    • தொடர்ந்து மாலை திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

    பவானி:

    பவானி தேவபுரம் பகுதியில் கருமாரியம்மன், பண்ணாரி அம்மன், சமயபுரம் மாரியம்மன், ராஜ கணபதி, முருகன் கோவி ல்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 4-ந் தேதி கொடிக்கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் 13-ந் தேதி மூலவர் கருமாரியம்மனுக்கு பக்தர்கள் நேரடியாக சென்று புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    முக்கிய நிகழ்வான சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கூடுதுறை சென்று தீர்த்த குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து இன்று மாலை திருவிளக்கு பூஜை ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம் குழுவினர் மூலம் நடைபெற உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அக்னி சட்டி, அலகு குத்தி ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதனைத் தொடர்ந்து 17-ந் தேதி (திங்கட்கிழமை) கொடிக்கம்பம் காவிரி ஆற்றில் விட்டு மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவுக்கு வருகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மாதுச்சாமி மற்றும் தலைவர் மாதேஸ்வரன், துணைத்தலைவர் சிந்துஜா முருகேசன், துணைச்செயலாளர் கண்ணன், பொருளாளர் சரவணன் உள்பட விழா குழுவினர் பலர் செய்திருந்தனர்.

    • தேவாலயங்களில் கூடுதல் வசதிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • நிதி உதவி மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவால யங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

    மேலும் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.

    அதன்படி தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்கு தல் போன்ற வசதிகள் கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியதொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்ப ட்டுள்ளது. 20 வருடங்க ளுக்கு மேலி ருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்துவ தேவாலயங்களை ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மை யினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.

    நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலு வலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அனுகலாம் என

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • சிறுத்தை தாக்கி மாடு இறந்தது தெரியவந்தது.
    • அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 வருடங்களாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, நாய்களை தாக்கி கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

    கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாததால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது என விவசாயிகள் நிம்மதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி (50) . இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று மாடுகளை வீட்டின் முன் கட்டி வைத்து விட்டு இரவு தூங்க சென்று விட்டார்.

    காலையில் எழுந்து பார்த்த போது தனது மாடு ஒன்று கடிபட்டு பாதி தின்ற நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி அருகில் இருந்த விவசாயிகள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் இறந்த மாட்டை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை தாக்கி மாடு இறந்தது தெரியவந்தது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் சித்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கொடிவேரியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி வருகிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் முக்கிய தினங்கள் மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 105 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தொடர் விடுமுறையை யொட்டி நேற்று மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இதே போல் கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். காலையில் நேரத்திலேயே மக்கள் கூட்டம் கூட்டமாக அதிகளவில் வர தொடங்கினர்.

    ஆனால் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் கொடிவேரி தடுப்பணை பகுதியில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணபட்டது.

    இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதையொட்டி கொடிவேரி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடுப்பணையில் குளிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் என்று எச்சரித்து கண்காணித்தனர்.

    குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணை யின் வெளிபகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பணை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    இதை தொடர்ந்து இன்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதனால் கொடிவேரி பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • அரச மரத்தில் இருந்து பால் வடிந்த அதிசய நிகழ்வை பார்த்தனர்.
    • அங்குள்ள விநாயகரை பொதுமக்கள் தரிசித்து சென்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் முகாசிப்பிடாரியூர் ஊராட்சி1010 நெசவாளர் காலனியில் விநாயகர் கோவில் உள்ளது.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விநாயகரை வழிபட அதிகாலையில் சென்றனர்.

    அப்போது விநாயகர் கோவிலில் உள்ள வேப்பமரம் மற்றும் அரசமரம் இரண்டும் ஒன்றாக உள்ள இடத்தில் அரச மரத்தில் இருந்து பால் வடிந்ததை கண்டு பொது மக்கள் ஆச்சரிய மடைந்னர்.

    உடனே தகவல் சுற்று வட்டாரத்தில் பரவியது.

    இதையடுத்து அருகில் உள்ள பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து அரச மரத்தில் இருந்து பால் வடிந்த அதிசய நிகழ்வை பார்த்தனர். மேலும் அங்குள்ள விநாயகரை தரிசித்து சென்றனர்.

    விநாயகர் கோவிலில் உள்ள அரச மரத்தில் இருந்து பால் வடிந்தது சென்னிமலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    • பழனிசாமி மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பழைய பாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் பழனி சாமி (வயது 43). இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    பழனிசாமி கட்டிட கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக காலில் புண் ஏற்பட்டு அவதி பட்டு வந்ததாகவும், கடந்த 6 மாதமாக வயிற்று வலி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் பழனிசாமிக்கு குடி பழக்கமும் இருந்ததாகவும், இதனால் சரியாக சாப்பிடாமல் வேலைக்கு செல்லாமலும் வீட்டில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பழனி சாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் அவரது மனைவி பிரியா கடந்த 4 மாதங்களுக்கு முன் அவரை பிரிந்து அவரது தாய் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் பழனிசாமி அவர் வழக்கமாக சாப்பிடும் மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டு விட்டு மயங்கி கடந்தார். இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து அவரது மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சரிகா மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
    • நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் முருகன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் சரிகா (வயது 22). இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார்.

    இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரித்திலன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

    சரிகா, நவீன்குமாரை விட்டு பிரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முருகன்புதூர் பகுதியில் அவரது தந்தை மாரிமுத்து வீட்டில் தனது குழந்தையுடன் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சரிகா தனது அக்கா மகனை பார்த்து வருவதாக கூறிவிட்டு தன் மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இரவு நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது தந்தை மாரிமுத்து அக்கம் பக்கம் தேடி பார்த்தும் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து மாரிமுத்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • 4 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்தன.
    • அப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தயிர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆட்டு பட்டியில் ஆடுகளை வளர்த்து வந்தார்.

    நேற்று இரவு ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 4 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்தன.

    இதேபோல் நேற்று முன்தினம் அருகில் உள்ள செந்தில்குமார் என்பவரின் 7 ஆடுகள் இதேபோல் மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்தன.

    அடுத்தடுத்து 2 நாட்களில் 11 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதனால் அப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது.

    இது குறித்து சித்தோடு போலீசாரும், வனத்துறையினரும் விசாரணை நடத்துகின்றனர்.

    கூட்டமாக சுற்றி திரியும் நாய்கள் கடித்ததா? அல்லது வேறு ஏதேனும் விலங்குகள் நடமாட்டம் உள்ளதா? எனவும் விசாரணை செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் இதே பகுதியில் மர்ம விலங்கு கடித்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் உயிரிழந்தன. அப்போது வனத்துறையினர் கண்காணிப்பு கேமிரா பொறுத்தி கண்காணித்தனர்.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராமத்தினர் கூறி இருந்தனர். ஆனால் கண்காணிப்பு கேமிராவில் அப்போது தெளிவான உருவம் பதிவாகவில்லை.

    ஒரு மாத காலத்திற்கு பின் மீண்டும் ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழாவை முன்னிட்டு 31-ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு பூஜை நடைபெற்றது.

    அந்தியூர் பிராமணர்கள் சங்கம் சார்பில் ஓம் சக்தி என்ற 108 பிரணவ தீபங்களுடன் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

    பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் நந்தினி தலைமையில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

    ×