என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இரண்டு காட்டு யானைகள் தொட்ட ம்பாளையம் கிராமத்துக்குள் புகுந்தது.
    • வனத்துறை யினர் சேதம் அடைந்த வாழை மரங்களை பார்வை யிட்டனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

    வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்ப டுத்துவது தொடக்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று அதிகாலை விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தொட்ட ம்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து துரைசாமி என்பவர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.

    காலையில் எழுந்து பார்த்த துரைசாமி வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தி யதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை யினர் சேதம் அடைந்த வாழை மரங்களை பார்வை யிட்டனர். அப்போது விவசாயி துரைசாமி தனக்கு வனத்துறை சார்பில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    மேலும் அப்பகுதி மக்கள் யானைகள் ஊருக்குள் வராதவாறு அகழியை மேலும் ஆழ படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    • வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் யானையின் வழித்தடத்தை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
    • கும்கிகள் உதவியுடன் கருப்பன் யானை கயிறுகளால் கட்டப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த புலிகள் காப்பகத்துக்குள் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளால் அடிக்கடி மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிர் பலியும் நடந்து வருகிறது.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து ஒரு ஒற்றை காட்டு யானை வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தது.

    அப்போது தோட்டத்து காவலில் இருந்த 2 விவசாயிகளை அந்த யானை அடித்து கொன்றது. தொடர்ந்து அந்த யானை இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களுக்குள் வந்து பயிர்களை நாசம் செய்தது. அதிகாலை நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது.

    இந்த நிலையில் அந்த யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினரும் அந்த யானைக்கு கருப்பன் என்று பெயரிட்டு அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    முதல்கட்டமாக கருப்பன் யானையை விரட்ட கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகளை வனத்துறையினர் தாளவாடிக்கு கொண்டு வந்தனர்.

    இந்த கும்கிகள் கருப்பன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தன. இதையடுத்து கும்கிகள் மீண்டும் டாப்சிலிப்புக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சில நாட்கள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்த கருப்பன் யானை மீண்டும் விவசாய தோட்டத்துக்குள் வரத் தொடங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி டாப்சிலிப்பில் இருந்து மீண்டும் அரிசி ராஜா, சலீம், கபில்தேவ் ஆகிய 3 கும்கிகள் தாளவாடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

    அப்போது கும்கி யானைகள் கருப்பன் யானையை சுற்றி வளைத்தது. அந்த நேரத்தில் மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். தொடர்ந்து அடுத்தடுத்து 4 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் சிக்காமல் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து 2-வது முறையாகவும் கும்கி யானைகள் மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் வழக்கம்போல் கருப்பன் யானை மீண்டும் விவசாய தோட்டங்களை நாசம் செய்ய தொடங்கியது. இதையடுத்து தாளவாடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து கடந்த மாதம் 20-ந்தேதி பொம்மன், சுஜை என 2 கும்கிகள் கொண்டு வரப்பட்டது. இந்த கும்கிகளும் கருப்பன் யானையை மடக்கியது. கடந்த 25-ந்தேதி கருப்பன் யானைக்கு 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனாலும் கருப்பன் யானை வழக்கம்போல் தப்பியது.

    இதனால் கருப்பன் யானையை பிடிக்க முடியாத சூழல் உருவானதால் 2 கும்கிகளும் முதுமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பின்னர் வழக்கம்போல் கருப்பன் யானை மீண்டும் அட்டகாசம் செய்ய தொடங்கியது. கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் இந்த யானையை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு வனத்துறையினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து காட்டு யானைகளை விரட்டி பிடிப்பதில் நீண்ட அனுபவம் பெற்ற 2 கும்கிகளை அழைத்து வர முடிவு செய்தனர். அதன்படி 4-வது முறையாக கடந்த 15-ந்தேதி பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து கும்கிகள் மாரியப்பன், சின்னதம்பி லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. அந்த கும்கிகள் தாளவாடி பகுதியில் கட்டப்பட்டு இருந்தது.

    வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் யானையின் வழித்தடத்தை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை 5 மணி அளவில் 2 கும்கிகளுடன் தாளவாடி மகராஜன்புரம் என்ற பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் வனத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

    அப்போது அவர்கள் எதிர்பார்த்தபடியே கருப்பன் யானை கரும்பு தோட்டத்துக்கு வந்தது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் வனத்துறை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதையடுத்து கருப்பன் யானை பாதி மயக்கத்தில் அங்கேயே நின்று கொண்டு இருந்தது.

    இதையடுத்து கும்கிகள் உதவியுடன் கருப்பன் யானை கயிறுகளால் கட்டப்பட்டது. மேலும் வனத்துறைக்கு சொந்தமான லாரியில் கருப்பன் யானையை ஏற்றினர்.

    ஒரு ஆண்டுக்கும் மேலாக அட்டகாசம் செய்த கருப்பன் யானை பிடிபட்ட சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்க்க திரண்டனர்.

    • திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.71 அடியாக குறைந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 791 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இன்று கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், என மொத்தம் அணையில் இருந்து 1300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • ஆண்டிக்காடு முருகன் கோவில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வி. இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றபோது, ஆண்டிக்காடு முருகன் கோவில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு 2 பேர் மது குடித்துக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் தமிழ்ச்செல்வி பொது இடத்தில் மது குடிக்க கூடாது என்று கூறினார். அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டலும் விடுத்தனர்.

    இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். வேன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் பெயர் கொந்தளம்புதூரை சேர்ந்த சசிகுமார் (வயது 37), ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொன்ரஞ்சித் (22) என்பது தெரியவந்துள்ளது.

    • திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா, கடம்பூர் மலைப்பகுதி குன்றி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி பசுவி (23).

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பசுவிற்கு இன்று அதிகாலை 4 மணி அளவில் மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக கடம்பூரில் இருந்து துரிதமாக 108 ஆம்புலன்ஸ் குன்றி பகுதியை சென்றடைந்தது.

    அவரை பரிசோதிக்க சென்ற அவசர சிகிச்சை மருத்துவ உதவியாளர் விஜய் வீட்டின் உள்ளே நுழையும் போதே பிரசவ வலி அதிகரிக்கவே அங்கேயே தக்க மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயுக்கும் சேயி க்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி கொடுக்கபட்டு பின்னர் மருத்துவ மேல் சிகச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 2 பேரும் பத்திரமாக அனுமதிக்கப்பட்டனர்.

    தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் விஜய் மற்றும் வாகன ஓட்டுனர் ராஜ்குமார் ஆகியோரின் இந்த செயலை கடம்பூர் மற்றும் குன்றி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் தாலுகா, நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன், இவரது மனைவி தாரணி (23). தற்போது தாரணி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு தாரணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக மலையப்பா ளையம் துணை சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    108 ஆம்புலன்ஸ் கரும்புக்காடு பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது தாரணிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சனஉல்லா வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

    பின்னர் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் தாரணிக்கு பிரசவம் பார்த்தார்.

    அப்போது தாரணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப ட்டனர்.

    தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் மற்றும் வாகன ஓட்டுனர் சனஉல்லா ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • அணையின் நீர்மட்டம் 86.77 அடியாக குறைந்து உள்ளது.
    • 802 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு, ஏப்.16-

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர்.

    அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.77 அடியாக குறைந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 802 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • 4-வது முறையாக கும்கி யானைகளை வரவழைத்து உள்ளனர்.
    • வழித்தடங்களை வனத்துறையினர் என்று ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து கடந்த ஓரு ஆண்டுக்கு முன்பு கருப்பன் என்ற யானை வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.

    தோட்ட காவலுக்கு இருந்த 2 விவசாயிகளை மிதித்து கொன்றுள்ளது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி இருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்ன த்தம்பி, ராஜவர்தன் என 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன.

    கும்கி யானைகள் கருப்பன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தன. ஆனால் கருப்பன் யானை மீண்டும் காட்டுக்குள் இருந்து வெளியேறி தோட்டத்தை நோக்கி படை எடுக்க தொடங்கியது.

    இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து மீண்டும் அரிசி ராஜா, சலீம், கபில்தேவ் என 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

    அப்போது கும்கி யானைகள் கருப்பன் யானையை சுற்றி வளைக்க மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் 4 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை மயங்கவில்லை. தப்பித்து விட்டது.

    இதனால் கும்கி யானைகள் மீண்டும் அழைத்துச்செ ல்லப்பட்டன.

    அதன் பின்னர் கருப்பன் யானை காட்டில் இருந்து வெளியேறி விவசாயி தோட்டங்களை சேதம் செய்யத் தொடங்கியது. இதனால் தாளவாடி விவசாயிகள் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் தெப்ப காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என 2 கும்கி யானைகள் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி தாளவாடிக்கு அழைத்து வரப்பட்டன.

    அதை த்தொடர்ந்து 25-ந் தேதி கருப்பன் யானைக்கு 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டன. ஆனால் அப்போ தும் யானை தப்பித்து சென்று விட்டது.

    தொடர்ந்து கருப்பன் யானை அட்டகாசம் அதிகரித்து வருவதால் 4-வது முறையாக கும்கி யானைகளை கொண்டு கருப்பன் யாணையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

    இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து மாரியப்பன், சின்னத்தம்பி என்ற கும்கி யானைகள் லாரி மூலம் தாளவாடிக்கு கொண்டுவரப்பட்டன.

    தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கருப்பன் யானையை பிடிக்க 4-வது முறையாக வனத்துறை யினர் கும்கி யானைகளை வரவழைத்து உள்ளனர்.

    ஒரு வருடமாக வனத்துறையினருக்கு போக்கு கட்டி வரும் கருப்பன் யானையை இந்த முறை கண்டிப்பாக பிடித்தே ஆக வேண்டும் என வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள னர்.

    இதற்காக கருப்பன் யானை சொல்லும் வழித்த டங்களை வனத்துறையினர் என்று ஆய்வு செய்தனர். எந்தெந்த வழித்தடங்களில் கருப்பன் யானை வந்து செல்கிறது என்பதை வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதனையடுத்து இன்று இரவு கருப்பு யானையை பிடிக்கும் பணி தொடங்க ப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்காக வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஒரு வருடமாக போக்கு காட்டி வரும் கருப்பன் யானை பிடிபடுமா? என தாளவாடி மக்கள் விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    • பேனில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தை சேர்ந்த பிரபு (26). பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கோவையை சேர்ந்த ஆறுமுகம் மகள் லோக சவுமியா (29) என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    சவுமியா கடந்த சில தினங்களாக மனவேதனையில் இருந்தவர் வீட்டில் பேனில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதையடுத்து லோக சவுமியாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு மருத்துவர்கள் லோக சவுமியாவை பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோ னாவால் பாதித்தவ ர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 742 ஆக உயர்ந்து ள்ளது.

    கொரோ னா பாதிப்பு டன் சிகிச்சை பெற்ற வந்த 3 பேர் பாதி ப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 984 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரண மாக உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 24 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முந்தினம் மட்டும் 72 பேருக்கு கொரோனா தினசரி பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ள னர். 

    • ஆண் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் வந்தது.
    • ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்திற்கும், காவேரி ரெயில்வே நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் ஆண் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த வரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும் எனவும், சம்பவ இடத்தில் கவனக்கு றைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழி யாக வந்த ரெயில் மோதி இறந்திருப்பது போலீ சாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரிய வில்லை. இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனை க்கு அனுப்பி வைத்த னர்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.
    • ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.

    ஈரோடு, அந்தியூர், பவானி, அம்மா பேட்டை, அத்தாணி, சென்னம்பட்டி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகளும், எருமை மாடுக ளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    இதில் மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 54 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    சுமார் 400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

    • உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • ரஞ்சித் தூக்கிப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்காள மாநிலம் திக் நகரை சேர்ந்தவர் பிரசாந்த்ஜித் பெளரி. இவரது மனைவி அர்ச்சனா பெளரி (32). கணவன், மனைவி இருவரும் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த ஒரு கார்மெண்ட்ஸ்சில் வேலை பார்த்து வந்தனர். விஜயமங்கலத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ் புத்தாண்டு என்பதால் கம்பெனிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் கணவன் -மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பிரசாந்த்ஜித் கோபித்து கொண்டு வீட்டை விட்டு விட்டு வெளியே சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் இருந்த அர்ச்சனா பெளரி ஆத்தி ரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். பின்னர் தண்ணீரை ஊற்றினர்.

    உடனடியாக ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த அர்ச்சனா பெளரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் கிளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மனைவி தங்கமணி.

    இவர்களுக்கு ஒரு மகளும், ரஞ்சித் (25) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். ரஞ்சித்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் கடந்த 3 வருடமாக ரஞ்சித் வயிற்று வலியால் அவதி அடைந்து அதற்கு மாத்திரை எடுத்து வந்தார். சம்பவத்தன்று ரஞ்சித்தின் தாய் மற்றும் தந்தை மகள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    ரஞ்சித் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் மாலை ரஞ்சித்தின் பெற்றோர் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது கதவு தாழிடப்படாமல் சாத்தப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் ரஞ்சித் தூக்கிப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரஞ்சித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×