ரெயில் மோதி ஒருவர் பலி

ஆண் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் வந்தது.ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் மோதி ஒருவர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையத்திற்கும், காவேரி ரெயில்வே நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் ஆண் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

இதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த வரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் இறந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும் எனவும், சம்பவ இடத்தில் கவனக்கு றைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழி யாக வந்த ரெயில் மோதி இறந்திருப்பது போலீ சாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரிய வில்லை. இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனை க்கு அனுப்பி வைத்த னர்.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com