என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
- அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.
- ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.
ஈரோடு, அந்தியூர், பவானி, அம்மா பேட்டை, அத்தாணி, சென்னம்பட்டி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகளும், எருமை மாடுக ளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இதில் மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 54 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
சுமார் 400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.
Next Story






