என் மலர்
நீங்கள் தேடியது "The wild elephants that broke into the banana plantation caused a stir"
- இரண்டு காட்டு யானைகள் தொட்ட ம்பாளையம் கிராமத்துக்குள் புகுந்தது.
- வனத்துறை யினர் சேதம் அடைந்த வாழை மரங்களை பார்வை யிட்டனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.
வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்ப டுத்துவது தொடக்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தொட்ட ம்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து துரைசாமி என்பவர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.
காலையில் எழுந்து பார்த்த துரைசாமி வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தி யதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை யினர் சேதம் அடைந்த வாழை மரங்களை பார்வை யிட்டனர். அப்போது விவசாயி துரைசாமி தனக்கு வனத்துறை சார்பில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும் அப்பகுதி மக்கள் யானைகள் ஊருக்குள் வராதவாறு அகழியை மேலும் ஆழ படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.






