என் மலர்
ஈரோடு
- அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- சோதனைச்சாவடி பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று வருகிறது.
அந்தியூர்:
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனைசாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதே போல் தமிழக- கர்நாடகா மாநில எல்லை பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கிறார்கள்.
இதே போல் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, பண்ணாரி மற்றும் அந்தியூர் அடுத்த பர்கூர் வழியாக கர்நாடகா மாநில எல்லை பகுதியில் சோதனைச் சாவடிகள் உள்ளது. இந்த வழியாக வாகனங்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் லாரி, பஸ், வேன், சரக்கு வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலையொட்டி அந்தியூர் அருகே தாமரைக்கரை, பர்கூர், கர்கேகண்டி வழியாக தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான நால்ரோடை அடுத்து கூடலூர், மாட்டலி, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் வாகனங்கள் எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனைக்கு பிறகே கர்நாடகாவிற்குள் செல்ல அனுமதிக்கபட்டு வருகின்றது. இதனால் கர்நாடகா சோதனைச்சாவடி பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.
- தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் காட்டு தீயானது அருகே உள்ள வனப்பகுதிகளில் பரவியது.
- தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மேலும் அடர்ந்த வனப்பகுதியான இங்கு அரிய வகை மரங்கள் உள்பட செடி, கொடிகள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் 107, 109 டிகிரி என வெயில் பதிவாகி வருகிறது.
இதனால் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் வறட்சி நிலகிறது. மேலும் செடி, கொடி, மரங்கள் காய்ந்து ஒன்றோடு ஒன்று உரசி வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கமும் காற்றின் மாறுபாடும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி காட்டுத்தீ ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பத்து ராயன் கிரிமலைப்பகுதியில் திடீரென தீ விபத்து தீப்பற்றி எரிந்தது. காட்டுத்தீயானது தொடர்ந்து மளமளவென பரவியதால் சுமார் 20 ஏக்கருக்கு மேல் காட்டு மரங்கள் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனச்சரகர் பழனிச்சாமி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவுடன் சென்று கம்பத்து ராயன்கிரி மலையில் ஏற்பட்ட தீயை அனைத்தனர்.
தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் காட்டு தீயானது அருகே உள்ள வனப்பகுதிகளில் பரவியது. இதையடுத்து தீ மெல்ல மெல்ல பரவி சத்தியமங்கலம் புளியங்கொம்பை மேல் பகுதியிலும் பெரியகுளம் மேல் உள்ள மலைப்பகுதியிலும் நேற்று காட்டுத்தீ பரவியது.
இதில் பல விதமான விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகியது. காட்டு தீ பரவுவதால் அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் சத்தம் போட்டப்படியே அங்கும், இங்கும் திரிகிறது. வன விலங்குகளின் சத்தம் அதிகமாக உள்ளது என அடிவாரத்தில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக சத்தியமங்கலம் அடுத்த வனப்பகுதிகளில் காட்டு தீ பரவி பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
- தமிழக-கர்நாட கா எல்லை பகுதியான பர்கூர் தட்டகரை வனப் பகுதியில் கருப்பன் யானை இறக்கி விடப்பட்டது.
- தட்டகரை வனபகுதியில் கருப்பன் யானைக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கும் என்பதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வந்தது. அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, மக்காச்சோளம், ராகி, முட்டைக்கோஸ் போன்ற பயிர்களையும் சேதப்படுத்தியது. மேலும் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் மிதித்து கொன்றது.
இதனையடுத்து கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என தாளவாடி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே 3 முறை கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கருப்பனை பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. கிட்டத்தட்ட 6 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை வனத்துறையினரிடம் இருந்து தப்பித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது ஊருக்குள் வந்து நிலங்களை சேதப்படுத்தி வந்தது.
இதனைத் தொடர்ந்து 4-வது முறையாக கருப்பன் யானையைப் பிடிக்க மாரியப்பன், சின்னத்தம்பி என 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த முறை கருப்பன் யானையை பிடித்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அதன்படி யானை வரும் வழித்தடத்தை கண்டறிந்து அங்கு சென்றனர்.
தாளவாடி அடுத்த மகாராஜன்புரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கரும்பு தோட்டத்திற்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு கருப்பன் யானை வந்தது. அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் கருப்பன் யானை மீது மயக்க ஊசி செலுத்தினர். காலை 5.35 மணி அளவில் கருப்பன் யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் கருப்பன் யானை மயங்கியபடி நின்று கொண்டே இருந்தது. உடனடியாக வனத்துறையில் லாரியில் கருப்பன் யானையை ஏற்ற முயன்றனர்.
ஆனால் கருப்பன் யானை ஏற மறுத்து அடம்பிடித்தது. கும்கி யானை மாரியப்பன் உதவியுடன் கருப்பன் யானையை லாரியில் ஏற்றும் முயற்சி நடந்தது. அப்போது கும்கி யானையுடன் ஆக்ரோசமாக கருப்பன் யானை சண்டையிட்டது. சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு யானை லாரியில் ஏற்றப்பட்டது.
பின்னர் தமிழக-கர்நாட கா எல்லை பகுதியான பர்கூர் தட்டகரை வனப் பகுதியில் கருப்பன் யானை இறக்கி விடப்பட்டது. சிறிது நேரம் மயக்கத்திலே இருந்த கருப்பன் யானை அதன் பிறகு வனபகுதிக்குள் சென்றது. கருப்பன் யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் வனத்துறையினர் தட்டகரை வனப்பகுதியில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தட்டகரை வனபகுதியில் கருப்பன் யானைக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கும் என்பதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் தட்டகரை பயணியர் விடுதியில் 2 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- கொரோனா காலகட்டத்தில் மதுரையில் யாசகம் மேற்கொண்டு அதில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன்.
- தற்போது என்னிடமிருக்கும் ரூ. 10 ஆயிரத்தை முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன்.
- தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சென்று யாசகம் எடுத்து அதன் மூலம் சேரும் பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
ஈரோடு, ஏப். 17-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன்(73) என்ற முதியவர் கையில் ரூ. 10,000 பணத்துடன் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்குவதற்காக இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
இதுகுறித்து முதியவர் பூல் பாண்டியன் கூறியதாவது:-
எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங் கிணறு பகுதி ஆகும். எனக்கு சிறுவயதிலிருந்தே பொது சேவையில் ஈடுபடுவது, பிறருக்கு உதவி செய்வது மிகவும் பிடிக்கும். 1980 ஆம் ஆண்டு பிழைப்பிற்காக மும்பை சென்றேன். அங்கு ஒரு அயன் கடையில் வேலை பார்த்தேன். பின்னர் அந்த வேலை ஒத்து வராததால் வேலையை விட்டு விட்டு அங்கு சிறு ஆண்டுகள் யாசகம் மேற்கொண்டேன்.
அதன் பின்னர் 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தேன். கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பாபநாசம் போன்ற பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்தேன். அதில் சேர்ந்த பணத்தில் என்னால் முடிந்த உதவி செய்ய முடிவு செய்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.
இதேபோல் கொரோனா காலகட்டத்தில் மதுரையில் யாசகம் மேற்கொண்டு அதில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன். இதுவரை யாசகம் மூலம் சேர்ந்த பணத்தில் ரூ. 55 லட்சத்தை நிதி உதவியாக வழங்கி உள்ளேன். தமிழ்நாட்டில் இதுவரை 400 அரசு பள்ளிகளுக்கு சேர், மேஜைகள், ஆர்.ஓ. வாட்டர் போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளேன்.
தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு முதல் முதலாக வந்துள்ளேன். தற்போது என்னிடமிருக்கும் ரூ. 10 ஆயிரத்தை முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சென்று யாசகம் எடுத்து அதன் மூலம் சேரும் பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிணற்றின் அருகில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
- அவர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தார்.
ஈரோடு,
ஈரோடு அடுத்துள்ள பெரியசேமூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (52). கூலித்தொழிலாளியான இவர் நேற்று மாலை அங்குள்ள விவசாய தோட்டத்து கிணற்றின் அருகில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இது குறித்து ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி முருகனின் உடலை மீட்டனர்.
இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிவார்கள்.
- கடந்த 3 நாட்களாக கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட அதிகமான பொது மக்கள் வந்து குவிந்தனர்.
கோபி,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமான பொது மக்கள் வருவார்கள்.
மேலும் விடுமுறை நாட்களில் இந்த தடுப்பணை யில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். இதனால் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிவார்கள்.
இந்த நிலையில் தொட ர்ந்து விடுமுறை விடப்ப ட்டதால் கடந்த 3 நாட்களாக கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் வந்து குவிந்தனர்.
கடந்த 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு, நேற்றுமுன் தினம் சனிக்கிழமை மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என தெடர்ந்து 3 நாட்கள் கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
இதனால் கொடிவேரி பகுதியில் கடந்த 3 நாட்களாக எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாக இருந்து வந்தது.
இதே போல் நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) கொடிவேரி தடுப்பணைக்கு பொது மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்தி ருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மக்களின் கூட்டம் அலை மோதியது.
தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்க த்தை தணிப்பதற்காக இளை ஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.
கூட்டம் அதிகமாக காணப்ப ட்டதால் குழந்தைகளை அழைத்து வந்த பொது மக்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் தடுப்பணையில் ஓரமாக நின்று குளித்து விட்டு சென்றனர். இதை யொட்டி ஏராமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர். இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 17 ஆயிரத்து 500 பேர் கெடிவேரிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் ரூ.87 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காலிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த உடலை கைப்பற்றினர்.
- கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சதம்பூர் கிராமத்தில் காலி ங்கராயன் வாய்க்காலில் சம்பவத்தன்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதந்து வருவதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் காலிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த உடலை கைப்பற்றினர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.
அந்த நபரின் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் வாய்க்காலில் குளித்த போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டா ரா என்று தெரிய வில்லை.
இது குறித்து மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேகருக்கு சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
- சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு சேகர் பிணமாக மீட்கப்பட்டார்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தை அடுத்த குழியூரை சேர்ந்தவர் சேகர்.
இவரும் இவரது மகன் ஹரிஹரனும் அட்டக்கல்லூ ரில் உள்ள மாச நாயக்கர் என்பவரது தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த சேகர் எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழு ந்தார்.
சேகருக்கு சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இது சம்பந்தமாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடினர்.
சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு சேகர் பிணமாக மீட்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- குடித்த அதே பாட்டிலை உடைத்து அதில் தனக்கு தானே கழுத்தை அறுத்து க்கொண்டார்.
- பொதுமக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் ஆலமரத்தெருவை சேர்ந்தவர் காதர். இவரது மகன் ஷாஜகான்(33). இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் மரப்பாலம் நேதாஜி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்தி உள்ளார்.
போதை தலைக்கு ஏறியதும், தான் குடித்த அதே பாட்டிலை உடைத்து அதில் தனக்கு தானே கழுத்தை அறுத்து க்கொண்டார்.
இதை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
போதையில் இருந்த ஷாஜகான் சிறிது நேரத்தில் மருத்துவ மனையில் இருந்து தப்பி ரத்தம் சொட்ட சொட்ட மீண்டும் அதே டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து மீண்டும் மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஈரோடு டவுன் போலீசார் விசா ரணை நடத்தியதில் ஷாஜகான் இதற்கு முன்பு 5 முறை இதே போன்று கழுத்தை அறுத்துக்கொண்டதும், குடிபோதையில் இது போல செய்து கொள்வதும் தெரியவந்தது.
இதனிடையே ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாஜகானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
- 5 பேருக்கு கொரோ னா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.
கடந்த சில மாதங்க ளாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 3 வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. தினசரி பாதிப்பு ஒரு நாள் கூடுவதும், ஒரு நாள் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
இந்நிலையில்நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோ னா பாதிப்பு உறுதியாகி யுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 987 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்ட த்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரண மாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 26 பேர் கொரோனா பாதிப்பு டன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் மட்டும் 70 பேருக்கு கொரோனா தினசரி பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் பொது இடத்தில் மது குடிக்க கூடாது என கூறினார்.
சிவகிரி,
ஈரோடு மாவட்டம் சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மற்றும் போலீசார் விளக்கேத்தி மற்றும் எல்லக்கடை பகுதிகளில் ரோந்து சென்றனர்.
சிவகிரி- எல்லப்பாளை யம் ரோட்டில் போலீசார் சென்ற போது ஆண்டிக்காடு முருகன் கோவில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி அருகே சென்று பார்த்தார். அங்கு 2 பேர் மது குடித்து கொண்டு இருந்தனர்.
அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் பொது இடத்தில் மது குடிக்க கூடாது என கூறினார். மேலும் அவர்களிடம் வேனின் ஆவணத்தையும் கேட்டார்.
இதையடுத்து மது குடித்து கொண்டு இருந்த 2 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் 2 பேர் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் அவர்கள் சிவகிரி அருகே உள்ள கொந்தளம் புதூரை சேர்ந்த சசிகுமார் (வயது 37), ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொன் ரஞ்சித் (22) என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் ஓட்டி வந்த வேனையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
- யானை, மான், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
- மலையின் மேல் மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் காட்டுத்தீ ஏற்பட்டது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
கடந்த ஒரு மாதமாக மழை இல்லாத காரணத்தினால் வனப்பகு திக்குள் மிகுந்த வறட்சி காணப்படுகின்றது.
இதனால் நேற்று மாலை சத்தியமங்கலம் வனச்சர கத்திற்குட்பட்ட கம்பத்தி ராயகிரி எனும் வனப்பகு தியில் மலையின் மேல் மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் காட்டுத்தீ ஏற்பட்டது.
காட்டுத் தீயானது மள மளவென பரவி சுமார் 20 ஏக்கர் மரங்கள் கருகி நாசமாகின.
இதில் பல அரிய வகை மூலிகை மரங்கள் மற்றும் பில் வகைகள் உள்ளது.
வனப் பாதுகாவலர் மற்றும் வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






