கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

5 பேருக்கு கொரோ னா பாதிப்பு உறுதியாகியுள்ளது.சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு
Published on

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

கடந்த சில மாதங்க ளாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 3 வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. தினசரி பாதிப்பு ஒரு நாள் கூடுவதும், ஒரு நாள் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.

இந்நிலையில்நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோ னா பாதிப்பு உறுதியாகி யுள்ளது.

இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 987 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாவட்ட த்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரண மாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 26 பேர் கொரோனா பாதிப்பு டன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் மட்டும் 70 பேருக்கு கொரோனா தினசரி பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com