என் மலர்
ஈரோடு
- 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடி க்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. கடந்த 3 வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணி க்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 4 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 992 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள னர். தற்போது மாவட்டம் முழுவதும் 31 பேர் கொரோனா பாதிப்பு டன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் வெளியே செல்லு ம்போது பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
- கண்காணிப்பு கேமிராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
- 2 பெண் யானைகள் குதூகலமாக விளையாடி கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை அந்த பகுதியில் கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்ப ட்டிருந்த கரும்பு, வாழை, மக்காச்சோளம், ராகி, முட்டைக்கோஸ் போன்ற பயிர்களை சேதப்படுத்தியது. மேலும் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் மிதித்து கொன்றது.
இதனை அடுத்து கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என தாளவாடி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே மூன்று முறை கும்கி யானைகள் வரவழை க்கப்பட்டு கருப்பனை பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. கிட்டத்தட்ட 6 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை வனத்துறை யினரிடம் இருந்து தப்பித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இதனைத் தொடர்ந்து 4 -வது முறையாக கருப்பன் யானையைப் பிடிக்க மாரியப்பன், சின்னத்தம்பி என 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இதையடுத்து வனத்துறை யினர் யானை வரும் வழித்தடத்தை கண்டறிந்து அங்கு சென்றனர். தாள வாடி அடுத்த மகாராஜன் புரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கரும்பு தோட்டத்தி ற்கு கருப்பன் யானை வந்தது.
அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவி னர் கருப்பன் யானை மீது மயக்க ஊசி செலுத்தி னர். சிறிது நேரத்தில் மயங்கி யபடி நின்ற கருப்பன் யானையை உடனடியாக வனத்துறையில் கும்கி யானை மாரியப்பன் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு கருப்பன் யானையை லாரியில் ஏற்றினர்.
இதையடுத்து தமிழக -கர்நாடகா எல்லை பகுதியான அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தட்டகரை வனப் பகுதியில் கருப்பன் யானையை வனத்துறையி னர் கொண்டு போய் விட்டனர்.
இதை தொடர்ந்து கருப்பன் யானை நடமா ட்டத்தை கண்காணிக்கும் வகையில் வனத்துறையினர் தட்ட கரை வனப்பகுதியில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அடர்ந்த வனப் பகுதியை விட்டு கருப்பன்யானை வெளியேறாமல் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தட்ட கரை பயணியர் விடுதியில் 2 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பர்கூர் தட்டக்கரை வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமி ராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது தட்டக்கரை கிழக்கு பகுதியில் 7-வது கிலோமீட்டர் தொலைவில் தானியங்கி கேமிராவில் 2 பெண் யானைகள் குதூக லமாக விளையாடி கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.
மேலும் கருப்பன் யானை மற்ற யானைகளுடன் கூட்டாக சேர்ந்து சண்டையிட்டு கொள்ளாமல் செல்கின்ற னவா மேலும் மயக்கம் தெளிந்த நிலையில் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் மருத்துவ குழுவினர் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து பார்த்து வருகின்றார்கள்.
- சரவணக்குமார் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருந்தார்.
- வயிற்று போக்கு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டார்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் நஞ்ச கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 28).
இவருக்கு கடந்த 6 மாதத்து க்கு முன்பு தான் திருமண மானது. இவருக்கு வடிவுக்கரசி (23) என்ற மனைவி உள்ளார். சரவ ணக்கு மார் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் டிரைவ ராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சரவணக்குமார் அந்த கம்பெனியில் வழக்கம் போல் வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு கொண்டு இருந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- அங்கக சான்று உதவி இயக்குநர் விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார்.
- தரமான சான்று பெற்ற விதைகளை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய பருவத்தில் விதைப்பு செய்வதற்கு தேவைப்படும் தரமான சான்று பெற்ற விதைகளை வழங்கும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அவ்விதைப்பண்ணை கள் அனைத்தும் வளர்ச்சி ப்பருவம், பூ பருவம் மற்றும் முதிர்ச்சி பருவங்களில் விதைச்சான்று அலுவலர்களால் வய லாய்வு மேற்கொ ள்ளப்பட்டு அவ்விதை களின் தரம் உறுதிபடு த்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் பவானி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஓடத்துறை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து வம்பன் 10 சான்று நிலை விதைப்பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் விதைப்பண்ணையின் விதை ஆதாரம், பிற ரக விதைகள் கலப்பு, களை மற்றும் பூச்சிநோய் மேலாண்மை ஆகியவை ஆய்வு செய்ய ப்பட்டு உற்பத்தியாளர் மற்றும் விவசாயிக்கு தரமான சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நு ட்பங்களை வழங்கினார்.
இதேபோல பவானி அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வை யிட்டு விதை இருப்பு விபரம், வயல்மட்ட விதைக்குவியல் அளவு, விதை சுத்திப்பணி, சுத்தி செய்யப்பட்ட விதைக்குவி யல்கள், சிப்பங்களின் எடை, ஈரப்பதம் சரிபார்த்தல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
அனைத்து விதைச்சான்று நடைமுறை களையும் பின்பற்றி விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டுமென அதிகாரி களுக்கு உதவி இயக்குநர் மோகனசுந்தரம் உத்தர விட்டார்.
ஆய்வின் போது, விதைச்சான்று அலுவலர் தமிழரசு, உதவி விதை அலுவலர் குருமூர்த்தி, வேளாண்மை அலுவலர் முருகேசன், கண்கா ணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் மாவட்டத்தில் முக்கிய அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 27.36 அடியாக குறைந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.14 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 918 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 5-ம் சுற்று தண்ணீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று 2000 கன அடி திறந்து விட்டபட்ட நிலையில் இன்று கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2,300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் மாவட்டத்தில் மற்ற முக்கிய அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதன்படி 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 27.36 அடியாக குறைந்துள்ளது. 41.75 கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 38.89 அடியாக குறைந்துள்ளது. 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.80 அடியாக உள்ளது.
- தண்ணீர் குடித்து கொண்டிருந்த போது யானை சேற்றில் சிக்கிக்கொண்டது.
- மற்றொரு ஆண் யானை தும்பிக்கையால் தள்ளி மேலே செல்ல உதவியது.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதி முழுவதும் குளம், குட்டைகள் வறண்டு கிடை க்கிறது. ஆங்காங்கே காட்டுத்தீயும் பற்றி எறிந்து வருகிறது.
இதனால் உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் அங்கும் இங்கும் சுற்றித் திரிவது வாடிக்கையாக கொண்டு ள்ளது.
இதேபோல ஆசனூர் வனப்பகுதி யில் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள யானைகள் தண்ணீர் தேடி அலைகின்றன.
சில குட்டைகளில் மாச டைந்த நீரை யானைகள் அருந்து வதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு நோயால் பாதிக்கப்படுகி ன்றன.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகு தியில் சேறும், சகதியுமாக உள்ள அரேப்பாளையம் குட்டையில் தண்ணீரை குடிக்க யானைகள் வந்தன.
அதில் 2 யானைகள் குட்டையின் நடுப்பகுதியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது ஒரு யானை சேற்றில் சிக்கிக்கொண்டது.
இதனால் யானை ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத நிலையில் அதே இடத்தில் நகர முடியாமல் தவித்தது. அப்போது உடனிருந்த மற்றொரு ஆண் யானை தும்பிக்கையால் தள்ளி மேலே செல்ல உதவியது.
ஆனால் யானையின் கால்கள் சேறில் சிக்கியதால் அது நகர்ந்து செல்ல முடியாமல் அதே இடத்தில் நின்றது. பக்கத்தில் இருந்த யானை மீண்டும் அதன் தும்பிக்கையால் சேற்றில் சிக்கிய யானையை மீட்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனால் கோபமுற்ற யானை நீண்ட நேரமாக பிளிறியது. பல மணி நேர போராட்டத்துக்கு பின் சேற்றில் சிக்கிய யானையை தனது தந்தத்தால் அதன் பின்பகுதி யில் பலமாக குத்தியபடி வேகமாக தள்ளியது.
இதில் யானையின் கால்கள் சேற்றில் இருந்து விடுபட்ட மெல்ல மெல்ல நகர்ந்து மேலே ஏறியது.
குட்டையில் இருந்து மேலே ஏறும் வரை உதவிகரமாக செயல்பட்ட மற்றொரு யானையின் செயல்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
- ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஈரோடு:
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு – 2023 தொடர்பான அறிவிப்பு கடந்த 3-ந் தேதி வெளி யிட்டுள்ளது.
ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்ச கங்கள், துறைகள், நிறுவ னங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பா யங்கள் போன்றவற்றில் உள்ள குரூப்பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை அறிவித்து ள்ளது.
இத்தேர்வில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்க லாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டு ள்ளது.
மேலும் விவரங்களை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCGLE03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.
இப்பணிக் காலி இடங்க ளுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
கணினி அடிப்ப டையிலான இத்தேர்வு களுக்கு உரிய கட்டணத்து டன் இணைய வழியாக அடுத்த மாதம் 3-ந் தேதி வரை விண்ண ப்பிக்கலாம். ஆன்லைனில் கட்டணம் செலுத்து வத ற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 4-ந் தேதி ஆகும்.
தென் மண்ட லத்தில் கணினி அடி ப்படை யிலான தேர்வு ஜூலை மாதம் ஆந்திரா மாநி லத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரி யில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலு ங்கானா மாநிலத்தில் 3 மையங்க ளிலும் என மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.
இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக் குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணைய தளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ளது.
மேலும் இந்த இணைய தளம் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் யூடியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்ய ப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொ ளிகளை கண்டு பயன்பெறு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது.
எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடைய லாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
- ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.
- பட்டுப்புழுக்களுக்கு பிளாச்சரி என்னும் நோய் தாக்கும் அபாயம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பு நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள் தர்மபுரி மற்றும் கர்நாடக மாநிலம் ராம்நகர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வெயில் கொடுமையால் பட்டுப்புழுக்களுக்கு பிளாச்சரி என்னும் நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உற்பத்தி இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. பட்டுப்புழுக்களை பொருத்த வரை சீதோஷ்ன நிலையானது சீராக இருக்க வேண்டும்.
தற்போது நிலவி வரும் வெயில் காரணமாக பட்டுப்பு ழுக்களுக்கு பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகளினால் பாதிப்பு ஏற்பட்டு பட்டுக்கூடு உற்பத்தி குறைந்த விடும். பாக்டீரியா வால் ஏற்படும் பிளாச்சரி எனப்படும் நோயானது கோடை காலத்தில் அதிகம் தாக்கும்.
எனவே கோடைகால புழு வளர்ப்பில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வாடிய இலையினை புழுக்களுக்கு உணவாக கொடுக்கக் கூடாது. சரியான காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். புழுக்கள் வளர்ப்பு அறையில் கிருமி நாசினி மருந்துகளை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க புழு வளர்ப்பு அறையில் மேற்கூரை தென்னை, பனை ஓலைகளால் அமைக்க வேண்டும்.
பட்டுப்புழுக்கள் வளர்ப்பு அறையில் குளிர்ச்சி நிலவும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இதேப்போல தோலுரிப்பு நிகழ்வு நடந்ததும் உரிய நேரத்தில் புழுக்களுக்கு உணவு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அணையின் நீர்மட்டம் 86.46 அடியாக குறைந்து உள்ளது.
- கீழ்பாவனி வாய்க்காலுக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர். அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.46 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 578 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து நேற்று மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 5-ம் சுற்று தண்ணீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று 500 கன அடி திறந்து விட்ட பட்ட நிலையில், இன்று கீழ்பாவனி வாய்க்கா லுக்கு வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காளிங்கராயன் பாச னத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்று க்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகி றது.
- தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடைபெற்றது.
- ஈரோடு மாவட்டத்தில் 198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஈரோடு:
மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு (என்.எம்.எம்.எஸ்) 8-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கு நடக்கிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகள் அவர்கள் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதந்தோறும் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி த்தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. 2 லட்சத்து 22 ஆயிரத்து 985 மாணவ- மாணவிகள் எழுதினர்.
இதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் 6,695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தில் 198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல் பெருந்துறை வீரணம்பாளையத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் 18 பேர் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
இப்பள்ளி கடந்த 10 ஆண்டுகளாக இத்தேர்வில் முதலிடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
- மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
- 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி ஊசிமலை கிராமத்தை சேர்ந்தவர் சித்தலிங்கம் (19). கூலி தொழிலாளியான இவர் பர்கூரில் இருந்து அந்தியூரக்கு வந்தார்.
இதையடுத்து அவர் மீண்டும் சொந்த ஊரான ஊசிமலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தாமரைக்கரை என்ற இடத்தில் ஊசிமலை கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் (52) என்ப வர் சித்தலிங்கம் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறினார். இதையடுத்து அவர்கள் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
தொடர்ந்து அவர்கள் இருவரும் பர்கூர் அருகே ஆலமரத்து வளைவு என்ற இடத்தில் இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டு இருந்தனர்.
அந்த வழியாக எதிரே ஒரு மினி லாரி வந்தது. அப்போது எதிர்பா ராத விதமாக மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
இதில் இரு சக்கர வாக னத்தில் வந்த சித்தலிங்கம் மற்றும் சின்னப்பையன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சித்தலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நிலை யில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சின்ன பையனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்கி ருந்தவர்கள் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- 29 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கி யது.
கடந்த சில மாதங்களா கவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 3 வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டி யல்படி ஈரோடு மாவட்ட த்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 988 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 29 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






