ஈரோட்டில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று

7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஈரோட்டில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடி க்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. கடந்த 3 வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணி க்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 4 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 992 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள னர். தற்போது மாவட்டம் முழுவதும் 31 பேர் கொரோனா பாதிப்பு டன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் வெளியே செல்லு ம்போது பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com