என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.எம்.எம்.எஸ் தேர்வில்"

    • தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடைபெற்றது.
    • ஈரோடு மாவட்டத்தில் 198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஈரோடு:

    மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு (என்.எம்.எம்.எஸ்) 8-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கு நடக்கிறது.

    இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகள் அவர்கள் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதந்தோறும் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி த்தொகை வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. 2 லட்சத்து 22 ஆயிரத்து 985 மாணவ- மாணவிகள் எழுதினர்.

    இதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் 6,695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தில் 198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வழக்கம்போல் பெருந்துறை வீரணம்பாளையத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் 18 பேர் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

    இப்பள்ளி கடந்த 10 ஆண்டுகளாக இத்தேர்வில் முதலிடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

    ×