என் மலர்
ஈரோடு
- சரஸ்வதி திடீரென வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.
- வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு காளிங்கரா யன்பாளையம் சக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
மேலும் குமாரசாமியின் தாய் சரஸ்வதி (70) இவர்களுடன் வசித்து வந்தார். சுமதி தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையில் நாமகிரிப்பேட்டையில் வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரிந்து கடந்த வருடம் விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். குமாரசாமி பவானி வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் குமார சாமிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.
மகன் குமாரசாமிக்கு உடல்நிலை சரியில்லாததில் இருந்தே சரஸ்வதி மன வேதனையுடன் இருந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சரஸ்வதி திடீரென வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.
பின்னர் உறவினர் வீட்டில் இருந்த அவரை சுமதி சமாதானம் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் நேற்று அதிகாலை சரஸ்வதி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் நகைகளை கழற்றி வைத்துவிட்டு வெளியே சென்று விட்டார்.
அவரை பல்வேறு இடங்களில் தேடிய போது அதே பகுதியில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்து சரஸ்வதி உடலை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது மகனின் உடல்நிலை சரி யில்லாததால் அந்த துக்கம் தாங்காமல் சரஸ்வதி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- விதை சுத்திகரிப்பு நிலையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
- வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுல வர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஈரோடு:
ஈரோடுமாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிச்செவியூர், சின்னாரி பாளையம் பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஏர்முனை கூட்டுப்ப ண்னைய உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் சேமிப்பு கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிருபர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்ட க்கலை மற்றும் மலைப்ப யிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு திட்டப்ப ணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாநில வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தரச்சான்று டன் கூடிய தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் நோக்குடன் ஈரோடு மாவட்டத்தில் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சேமிப்புக் கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட விதை மற்றும் விதைப்பொருட்கள் பெருக்க துணை திட்டத்தில் ரூ.3.60 கோடி ஒதுக்கீட்டில் 2021-22-ல் ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் மற்றும் 2022-23-ல் 5 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தி ற்கும் என சுமார் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவன ங்களுக்கும் தலா ரூ.60 லட்சம் வீதம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்க ளுக்கும் தெரிவு செய்ய ப்பட்டு பணிகள் தொடங்க ப்பட்டு ரூ2.94 கோடி இது வரையில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 4 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களான ஈரோடு துல்லியபண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஏர்முனை கூட்டு ப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், நவரத்தினா கூட்டு ப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பாசம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவைகளில் எந்திரங்கள் நிறுவப்பட்டு விதை உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளது.
மற்றும் 2 உழவர் உற்ப த்தியாளர் நிறுவனங்களான கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் உழவன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய கட்டிடப்பணிகள் முடிவுற்று எந்திரங்கள் நிறுவிட தயார் நிலையில் உள்ளன.
மேலும் அரசு மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ங்கள் மூலமாக தரமான விதைகள், விவசாயிகளுக்கு உரிய பருவத்தில் கிடைத்திட சீரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட நம்பியூர் வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புறமேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.460.63 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிடம் கட்டும் பணியினையும்,
நம்பியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட அஞ்சானூர் ஊராட்சி, ஓணான் குட்டை பகுதியில் 15-வது நிதிக்குழுமானிய திட்டத்தின் கீழ் ரூ.1.77 லட்சம் மதிப்பீட்டில் கசடுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதையும்,
ஓணான்குட்டை ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளியில் ரூ.1.69 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும்,
சுண்டக்கா ம்பாளையம் ஊராட்சி, சுண்டக்காம் பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தி னையும், சட்டைய ம்பாளை யம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நல கூடத்தினையும் மற்றும் கு.கலத்தூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கப்ப ட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுல வர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கரட்டுப்பா ளையம் ஊ ராட்சி, கரட்டு ப்பாளையம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய வேளா ண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.40 ஆயிரம் மானிய உதவியுடன் நிரந்தரகல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் ரூ.75 ஆயிரம் மானிய உதவியுடன் வழங்க ப்பட்டுள்ள மினி டிராக்ட ரையும் பார்வை யிட்டு, இவற்றின் பயன்பாடு கள் குறித்து விவசாயிடம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை) ஜீவதயாளன், நிர்வாக அலுவலர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றை) அபிநயா, நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் பெருமாள், சுபா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.குமார் உள்பட துறை சார்ந்த அலுலவர்கள் உடன் இருந்தனர்.
- பத்திரப்பதிவு தடையை நீக்கிட வேண்டும் என வழியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.
- தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதார்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பேரூராட்சி பகுதி யில் பழைய புல எண்கள் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளதை நீக்க கோரி ஊர் பொது மக்கள் சார்பாக நில மீட்பு குழு அமைத்து 100-க்கும் மேற்பட்டோர் பவானி தாசில்தார் ரவிச்சந்திரனிடம் தங்கள் பகுதியில் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என பத்திர பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் தங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜம்பையில் 20 ஏக்கர் நிலத்தில் 93 சென்ட் போக மீதி உள்ள நிலத்தின் பத்திரப்பதிவு தடையை நீக்கிட வேண்டும் என வழியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.
இதனையடுத்து கோரி க்கை மனு பெற்று க்கொ ண்ட தாசில்தார் 3 மாதத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து ள்ளதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து பவானி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று சார் பதிவாளரிடம் கோரி க்கை மனு ஒன்று வழங்கினர்.
- மாணவியின் தந்தை அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவந்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தற்போது தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவியின் தந்தை அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவந்தனர்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் பகுதியில் ஒரு வாலிபருடன் மாயமான மாணவி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டு அந்தியூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது அந்தியூர் அருகே உள்ள சொக்கநாதமலையூரை சேர்ந்த நல்லசாமி (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நல்லசாமியை கைது செய்தனர். மேலும் அவரை பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பவானி:
பவானி-அந்தியூர் பிரிவு ரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் பிரதான சாலை விரிவுபடுத்தும் நோக்கில் ரோட்டின் இரு பகுதிகளில் அகலப்படுத்தப்பட்டு புதிய தார் ரோடு போடப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த ரோட்டில் பவானி-அந்தியூர் பிரிவு பஸ் நிறுத்தம் முதல் காடையாம்பட்டி பஸ் நிறுத்தம் வரை ரோட்டின் இரு பகுதிகளிலும் பலர் ஆகிரமிப்பு செய்து போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாக பவானி நெடுஞ்சாலை துறைக்கு புகார் சென்றது.
இதனைத்தொடர்ந்து பவானி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பவானி-அந்தியூர் பிரிவு ரோடு முதல் காடையாம்பட்டி வரை ரோட்டில் இரு பகுதிகளிலும் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகள் மற்றும் மரத்தின் கிளைகள் ஆகியவற்றை அப்புற ப்படுத்தி போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பொழுது மரக்கிளைகள் வெட்டி எடுத்ததால் அந்தியூர் பிரிவு ரோட்டில் பஸ்சுக்காக காத்திருக்க மரத்தின் நிழல் இது நாள் வரை பயன்படுத்திய பயணிகள் மரத்தின் கிளைகள் வெட்டப்ப ட்டதால் நிழல் இல்லாமல் போகிறதே என பயணிகளும், அப்பகுதி பொதுமக்கள் பலரும் புலம்பினர்.
அதேபோல் மரக்கி ளைகளை அப்புறப்ப டுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்றிய நெடுஞ்சாலை துறையினர் ஆக்ரமிப்புகள் அகற்றிய இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யாமல் இருக்கும் வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
- வரி தொகைகளை பெற விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- 5 சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு:
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சி களில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியினை வருகின்ற 30-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை பெறலாம் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவித்தார்.
இதன்படி ஈரோடு மாநகராட்சியிலும் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியில் வரி தொகைகளை பெற பல்வேறு வகையான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்களில் பொருத்த ப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலமாக அறிவிப்பு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
வரி நிலுவை தொகை வைத்திருந்தால் குடிநீர் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் வருகிறோம்.
மேலும் சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை செலுத்திட ஏற்படும் சிரமத்தை தவிர்க்க அவர்களது இல்லம் தேடி சென்றும் வரி வசூலிப்பாளர்கள் வசூலித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி மைய அலுவலகத்திலும், மண்டல அலுவலகங்களிலும் அமைந்துள்ள வரி வசூல் மையங்களில் ஏ.டி.எம். கார்டு (கடன் மற்றும் பற்று அட்டை), காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் வரி தொகை செலுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவின்படி, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில், ராகுல்காந்தி எம்.பி.பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செய லாளர்கள் சிரஞ்சீவி, தினேஷ் குமார், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் பவானிசாகர் கார்த்தி, அந்தியூர் ராஜ்குமார், கோபி கோதண்டம், பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
சிறப்பு அழைப்பா ளர்களாக மாநில செயலாளர் ஜெனித், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் நரேந்திர தேவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்த லைவர் எல்.முத்துக்குமார், மாநில செயலாளர் குறிச்சி சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மொடக்குறிச்சி முத்துக்கு மார், மாநில பொதுக்குழு உறுப்பினர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்ட த்தில் வட்டார தலைவர்கள் தேவராஜ், முத்துச்சாமி, வேலுமணி, ஆறுமுகம், இந்துஜா, பவானிசாகர் ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் அந்த தம்பதியினரை மீட்டு விசாரித்தனர்.
- முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை பஸ் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக வயதான தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் குறித்து பொதுமக்கள் சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உத்திரவின் பேரில் போலீசார் அந்த தம்பதியினரை மீட்டு விசாரித்தனர். இதில் அவர்கள் முருகேஷ் (80), அவரது மனைவி கண்ணம்மாள் (70).
இருவரும் கணவன், மனைனவி என்பதும், தங்க ளுக்கு யாரும் ஆதரவு இல்லை என்ற நிலையில் 2 பேரும் இப்படி ஊர், ஊராக சென்று தங்குவதும் போலீ சார் விசாரணையில் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து கணவன், மனைவி இருவரை யும், சமூக சேவகர் சொக்கலிங்கம் மூலம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பொன்நகர் பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
- வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
- தேங்காய்கள் ரூ.54 ஆயிரத்து 417-க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,231 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 89 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 2,226 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.54 ஆயிரத்து 417-க்கு விற்பனையானது.
- சாலையில் ஒரு பகுதி தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
- இந்த பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முக்கியமானதாக ஈரோடு ஈ.வி.என். சாலையில் கடந்த சில மாதங்களாக மழை நீர் வடிகால் மற்றும் சாக்கடை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக சாலையில் ஒரு பகுதி தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பஸ்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது.
ஈரோடு மாநகராட்சியின் முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த சாலை விளங்கி வருகிறது. இந்த சாலையில் தான் அரசு தலைமை மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் இருக்கின்றது.
இந்த சாலையில் எப்போதும் கூட்டம் அதிக அளவில் காணப்படும். தற்போது பகலில் நடக்கும் இந்த பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 106 டிகிரி வரை வெயில் பதிவாகி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் இந்த திட்டப் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சாலையில் நீண்ட தூரம் வரை அணிவகுத்து நிற்கின்றனர். அப்போது வெயிலின் தாக்கத்தால் மேலும் அவர்கள் கடும் அவதி அடைகின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தற்போது நமது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இந்த நேரத்தில் ஈ.வி.என் சாலையில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக ரோடுகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியை கடந்து செல்வது எங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
வெயிலின் தாக்கத்தால் எங்களால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. நாங்கள் சோர்வு அடைந்து விடுகிறோம். பகல் நேரத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
அதற்கு பதிலாக இரவு நேரத்தில் பணிகள் மேற்கொண்டால் எந்த ஒரு இடையூறும் இருக்காது. இதற்கு வாய்ப்பில்லை என்றால் போக்குவரத்தை சரி செய்ய இங்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கோனேரிபட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
- காவிரி ஆறு தண்ணீர் வடிந்து பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.
அம்மாபேட்டை:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர், நெரிஞ்சி ப்பேட்டை, கோனே ரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை ஆகிய நீர்மின் தேக்க நிலைய கதவணை பகுதிகளை கடந்து திருச்சி, தஞ்சாவூர் வரை செல்கிறது.
இதில் நீர்மின் தேக்க கதவணை பகுதிகள் வருடத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு நீர்மின் தேக்க கதவணைகளிலும் தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 எந்தி ரங்கள் மூலம் 30 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
காவிரி யில் வரும் தண்ணீரின் வரத்துக்கேற்ப மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலை யில் ஆண்டு தோறும் நீர்மின் தேக்க கதவணை பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நீர்மின் தேக்க கதவணை பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதுமாக வெளி யேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமாகும்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க கதவணையில் மதகுகள் திறந்து விடப்பட்டு தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
இதனையடுத்து பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது கோனேரிபட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் இன்னும் 15 நாட்களுக்கு நடைபெறுவதால் கடல்போல் தேங்கி இருந்த காவிரியாறு தண்ணீரின்றி பாறை திட்டு களாக காட்சி அளிக்கிறது.
இதனால் கதவணை நீர்த்தேக்கத்தில் தயாரிக்க ப்படும் மின் உற்பத்தி தற்செயலாக நிறுத்த ப்பட்டுள்ளது.
மேலும் கோனேரி பட்டி நீர் மின் தேக்க பகுதிகளான கோனேரிபட்டி படித்துறை, ஆனந்தம்பாளையம், சிங்கம்பேட்டை, அம்மா பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடல்போல் தேங்கி இருந்த காவிரி ஆறு தண்ணீர் வடிந்து பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.
இதனால் அதிகளவில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
- மது விற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 350 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி வெளியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதை தடுக்கவும், எல்லைப்பகுதியான கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலும் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திடீரென்று சோதனை நடத்தப்பட்டது.
பவானி, அந்தியூர், ஈரோடு தாலுகா, மலையம்பாளையம், புளியம்பட்டி, வெள்ளோடு, ஈரோடு வடக்கு, அரச்சலூர், திங்களூர், பெருந்துறை உள்பட பல்வேறு பகுதி களில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீ சார் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 350 மதுபாட்டில்கள் மற்றும் விற்பனை செய்யப்பட்ட பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.






