என் மலர்
ஈரோடு
- சந்தையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
- சந்தையில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் எடைக்கேற்ப ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் நகராட்சி வார சந்தை மற்றும் கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த கால்நடை சந்தை தமிழகத்தின் 2-வது பெரிய சந்தையாக திகழ்ந்து வருகிறது. புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும் இந்த சந்தைக்கு சத்தியமங்கலம், புளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விசாயிகள் ஆடுகள் அதிகளவு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இங்கு கால்நடைகள் குறைந்த விலையில் கிடைப்பதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நாமக்கல், கரூர், திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடு, மாடு, கோழி, கன்று குட்டிகள் போன்ற கால்நடைகள் வாங்கி செல்கிறார்கள். மேலும் கர்நாடகா, கேரளா உள்பட வெளிமாநில வியாபாரிகளும் இந்த சந்தைக்கு வந்து கால்நடைகளை அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் நேற்று கால்நடை சந்தை வழக்கம் போல் கூடியது. நாளை (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் சந்தைக்கு விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
மேலும் தமிழகத்தின் 2-வது பெரிய கால்நடை சந்தை என்பதால் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் சந்தையில் வழகத்தை விட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் கால்நடைகளை வாங்கி சென்றனர். ராம்ஜான் வருவதால் ஆடுகள் அதிகளவில் விற்பனையானது.
இந்த சந்தையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் எடைக்கேற்ப ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இதன் மூலம் நேற்று கூடிய சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- வருகிற 26-ந் தேதி திருவிழாவிற்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே நேற்று பிரச்சினை ஏற்பட்டு மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் காந்திநகர் காலனியில் அண்ணமார் கருப்புசாமி கோயில் திருவிழா நடத்துவது சொந்தமாக கடந்த 2017-ம் ஆண்டு இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு ஆர்.டி.ஓ .முன்னிலையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது.
அதையொட்டி திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு தரப்பினர் மட்டுமே வேறு இடத்தில் அப்போது திருவிழாவை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி திருவிழாவிற்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே நேற்று பிரச்சினை ஏற்பட்டு மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் காந்திநகர் காலனி ஊர் பொதுமக்கள் சார்பில் பிரச்சனைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனக் கூறி நேற்று இரவு திடீரென கோபிசெட்டிபாளையம்-சத்திரோடு நல்லகவுண்டன் பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தெரிய வந்ததும் கோபிசெட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- கடந்த கல்வியாண்டில் ரூ.177.44 கோடி மதிப்பிலான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
- நடப்பு கல்வி ஆண்டில் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்குவதற்காக முதல்கட்டமாக ரூ. 100 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
ஈரோடு:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 4 சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நலத்துறை பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக சீருடைகள் வழங்கப்படுகிறது.
கடந்த கல்வியாண்டில் ரூ.177.44 கோடி மதிப்பிலான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்குவதற்காக முதல்கட்டமாக ரூ. 100 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கிரே பாலியஸ்டர் டையிங் நூல் 1866 டன்களும், டையிங் செய்யப்பட்ட காட்டன் வார்ப் நூல் 1,422 டன்களும் வாங்க டெண்டர் வைக்கப்பட்டுள்ளது.
டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சர்ட்டிங் துணிகள் 5.23 கோடி மீட்டரும், பேண்ட் துணி 5 கோடி மீட்டரும், உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளனர். சமூக நல ஆணையத்தின் சார்பில் மகளிர் தொழில் துறை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தியேட்டர்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர உத்தரவு விடப்பட்டுள்ளது.
- இது தொடர்பாக அந்தந்த தியேட்டருக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து வேகம் எடுக்க தொடங்கியது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தற்போது தினமும் 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தடுப்பு நடவடி க்கையை தீவிரப்படுத்தி உள்ள சுகாதாரத் துறையினர் பல்வேறு கட்டுப்பா டுகளையும் விதிக்க தொடங்கியுள்ளனர்.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போதும் முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுபோல் சோப்பு களை கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும், மக்கள் கூடும் இடங்களில் கவனமு டன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதி ப்பு பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்க ளாக தி னசரி பாதிப்பு 7 ஆக பதிவாகி வருகிறது.
தினசரி பாதிப்பு பெ ரிய அள வில் இல்லா விட்டா லும் சுகாதா ரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை களில் ஈடு பட்டு வருகின்றனர்.
முதற்க ட்டமாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயா ளிகள், நோயாளிகளுடன் வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என உத்தரவு அமலுக்கு வந்தது.
இதனையடுத்து டாக்டர்கள், செவிலியர்கள் முககவசம் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்குள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவு அமலுக்கு வந்தது.
தற்போது அங்கு வரும் நீதிபதிகள், வக்கீல்கள், வழக்கு சம்பந்தமாக வரும் போலீ சார் அனைவரும் முககவசம் அணிந்து வருகின்றனர்.
தொடர்ந்து தற்போது தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவு விடப்பட்டு ள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்து விட்டது. இது தொடர்பாக அந்தந்த தியேட்டருக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் பார்க்க வரும் மக்கள் கண்டிப்பாக முகக வசம் அணிந்து வர வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.
இதனால் பெரும்பா லானவர்கள் முககவசம் அணிந்து படம் பார்க்க சென்றனர். முககவசம் அணியாமல் வருபவ ர்களுக்கு தியேட்டர் சார்பில் முககவசம் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அவ்வாறு செல்ல நேரிட்டால் கண்டிப்பாக முகவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
- பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
- அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பவானி:
பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கத்தில் பவானி தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டுவதற்கான கருத்து கேட்டு கூட்டம் நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையிலும், ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல், துணைத்தலைவர் மணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பவானி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன்,
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில நிர்வாகி துரைராஜா, பா.ஜ.க. நகர தலைவர் நந்தகுமார், பா.ம.க. நகர செயலாளர் தினேஷ் குமார் நாயகர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வக்கீல் பாலமுருகன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி முருகேசன், பவானி நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
பவானி நகராட்சிக்கு உட்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட் காவேரி ஆற்றங்கரை மற்றும் பொது மயானம் அருகில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
சுமார் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கொண்ட இந்த தினசரி காய்கறி மார்க்கெட் செல்லும் வகையில் 3 வழித்தடம் இருந்தும் சரக்கு வாகனங்கள் உள்ளே சென்று வர போதிய வசதி இல்லை.
இதனால் ஓசூரில் இருந்து காய்கறிகள் கொண்டு வர பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. காலை 8 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் மார்க்கெட் பக்கம் வருவதே இல்லை. வெறிச்சோடியே காணப்படுகிறது. இதனால் வியாபாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
ஆகவே பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய காய்கறி மார்க்கெட் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் மற்றும் வியாபாரிகள் உள்பட பவானி நகர பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலரும் விருப்பம் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தின் போது ஒரு சிலர் காய்கறி மார்க்கெட் இருக்கும் இடத்திலேயே புதிதாக புனரமைப்பு செய்து நடத்திட வேண்டும் எனவும், புதிய பஸ் நிலையம் அருகில் கொண்டு செல்லக்கூடாது எனவும் வலியுறுத்தி பேசினர்.
அப்போது சிறிது நேரம் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பலரின் கருத்தும் பவானி புதிய பஸ் நிலையம் அருகில் காய்கறி மார்க்கெட் கொண்டு செல்லவே வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள னர்.
இது குறித்து நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ வன் கூறுகையில்,
சட்டசபை மானிய கோரிக்கையின் போது நகராட்சி பகுதிகளில் காய்கறி மார்க்கெட் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பவானி நகராட்சி பகுதியில் தினசரி மார்க்கெட் கட்ட ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. பவானி நகராட்சி பகுதியில் உள்ள பழைய காய்கறி மார்க்கெ ட்டை புதிப்பிப்பதா? அல்லது புதிதாக கட்டப்பட வேண்டுமா? என தாங்கள் கருத்துக்களை கூற இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று உள்ளது.
இங்கு விவாதிக்கப்பட்ட விவாத ங்கள் குறித்து உயர் அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பவானி புதிய பஸ் நிலையம் அருகில் தினசரி காய்கறி மார்க்கெட் கொண்டு வந்தால் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.
மேலும் போக்குவரத்து வசதியால் மார்க்கெட் வந்து செல்ல வசதியாக இருக்கும். அதே போல் பழைய இடத்தில் உழவர் சந்தை ஒன்று கொண்டு வந்தால் விவசாயிகள் பயனடை வார்கள் என்றும் விவாதிக்கப்பட்டது.
அப்போது ஒரு சிலர் இருக்கும் இடத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும், மாற்ற கூடாது எனவும் பேசியதால் கூட்ட த்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
முடிவில் ஆணையாளர் பொறுப்பு கதிர்வேல் கூறுகையில், கூட்டம் குறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பவானி நகரத்தின் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு 3 மணி நேரத்திற்கு மேலாக பேசியும் எந்த விதமான இறுதி முடிவும் எடுக்க முடியாமல் போனது குறிப்பிடதக்கது ஆகும்.
- மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
- 2 கடைகளில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஈரோடு பூந்துறை ரோடு அருகே உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அந்த மளிகை கடையில் சோதனையில் ஈடுபட்ட போது 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர் ஈரோடு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சசிமலர் (40) என்பவரை கைது செய்தனர்.
இதேப்போல் 19 ரோடு வெள்ளாளபாளையம் பகுதியில் போலீசார் ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அந்த கடையிலும் 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து கடையின் உரிமையாளரான திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த சிலம்பரசன் (30) என்பவரை கைது செய்தனர். 2 கடைகளில் இருந்தும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- பாம்பு ஒன்று அவரது வலது காலை கடித்து விட்டது.
- மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம், கரூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நல்லசிவம். இவரது மனைவி சுரேகா (34). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று சுரேகா தனது விவசாய தோட்டத்தில் எள்ளு பயிரை பிடுங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வந்த பாம்பு ஒன்று அவரது வலது காலை கடித்து விட்டது.
இதனால் வேதனையால் துடித்த அவரை நல்லசிவம் மீட்டு கார் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சுரேகா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2-வது நாளாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- 6 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடி க்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.
இந்நிலையில் கடந்த 3 வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுகாதாரத்து றையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.
இதைதொடர்ந்து நேற்றும் சுகாதாரத் துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 998 பேர் கொரோனா பாதி ப்பிலி ருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரண மாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 32 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டத்தில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
- 89 மூட்டைகளில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் 89 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலை காய் குறைந்தபட்சமாக 66 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 75 ரூபாய்க்கும், சராசரியாக 71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மொத்தம் 89 மூட்டைகளில் 27 குவிண்டால் நிலக்கடலை காய் கொண்டு வரப்பட்டு ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
- விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
- பேரூராட்சி தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை யை அதிகரிக்கும் நோக்க த்தில், சேர்க்கை கொண்டாட்டம் என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்தியூர் கிழக்கு பள்ளியில் இருந்து பேரூராட்சி தலைவர் எம்.பாண்டி யம்மாள் பிரச்சார வாக னத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அந்தியூர், பிரம்மதேசம், பள்ளிபாளையம், நகலூர், மைக்கேல்பாளையம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்ற விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் முடிவில் செல்லம்பாளையம் மாதிரி பள்ளியில் நிறைவடைந்தது.
முன்னதாக அந்தியூரில் சேர்க்கை கொண்டாட்டம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஒருங்கி ணைப்பா ளர்கள் சிவ ராமன், ஞானமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் மாதேசா, அபிராமி,
வட்டார வளமைய மேற்பார்வை யாளர் லிங்கப்பன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- தாளவாடி போலீசார் சாந்தி என்பவரை கைது செய்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமை யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தாளவாடி அடுத்த கல் மண்டிபுரம், சோழகர் தொட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்த போது அங்கு 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து தாளவாடி போலீசார் சாந்தி (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- விவசாய பண்ணை பகுதிகளில் நேரில் சென்று தள ஆய்வு செய்தனர்.
- விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
அம்மாப்பேட்டை:
தமிழ்நாடு அரசு உலக வங்கி திட்டத்தில் நீர்வள, நிலவளத் திட்டம் பகுதி 1 மற்றும் பகுதி 2 மூலம் தமிழ்நாட்டில் உள்ள 47 ஆறுகளின் உபவடிநிலப் பகுதிகளை மேம்பாடு செய்ய உலக வங்கியின் 70 சதவீத பங்களிப்பு தொகை ரூ.2,962 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் 30 சதவீத பங்களிப்பு தொகை ரூ.888.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நீர்வள, நிலவளத்திட்டம் 1 மற்றும் 2 பகுதிகள் மூலம் சேலம், தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட ங்களில் நீர்வளத்துறை, வேளா ண்துறை,
தோட்டக்க லைத்துறை, வேளாண்பொறி யியல்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, மீன்வள த்துறை சார்ந்த துறைகள் மூலம் ரூ.128.16 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் செயல்படு த்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பகுதி 2-ல் சேலம், ஈரோடு, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேட்டூர், நொய்யல், திருமணிமுத்தாறு, காவேரிப்பட்டணம் ஆகிய உபவடிநில பகுதிகளில் 103 குளங்கள், 96 அணை க்கட்டுகள் மற்றும் 3 கால்வாய்கள் 119.26 கி.மீ. மேம்படுத்தப்பட்டு 27,757.61 ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறுகிறது.
இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகளை நீர்வள மேலா ண்மை நிபுணர் மற்றும் இணை பணிக் குழுத் தலைவர் ஜோப், முதன்மை சமூக மேம்பாட்டு நிபுணர் வருண்சிங் ஆகியோர் நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள மேட்டூர் மேற்குக்கரை கால்வாய், மயிலம்பாடி கிராமத்தில் உள்ள விவசாயப் பண்ணை, சங்கரகவுண்ட ன்பாளையம் விவசாயப் பண்ணை ஆகிய பகுதிகளில் நேரில் சென்று தள ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது நீர்வள மேலாண்மை நிபுணர் கே.சந்திரசேகரன், வேளாண் பொறியியல் துறை நிபுணர் சுற்றுச்சூழல் நிபுணர் ஜுதித் டிசில்வா, சிறப்பு கட்ட மைப்பு நிபுணர் ஜி.விஜிய ராம்,
பொறியாளர் ஆர்.ராமன், நீர்வளத்துறை, மேல்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.அன்பழகன், மேட்டூர் அணைக்கோட்ட செயற்பொறியாளர் பி.சிவக்குமார்,
கோவை சுற்றுச்சுழல் கோட்ட செயற்பொறியாளர் வி.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வின் போது இத்திட்டதை குறித்து விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.






